மயிலாடுதுறை பதிவர்கள் - என மனதில்....! (பாகம் - 1 )

வலைப்பதிவு வாழ்க்கையில் இரு வருடங்களுக்கு முன்பே தமிழ்மணம் அறிமுகமிருந்தாலும்,தேடிப்பிடித்து படிக்க முற்பட்டது மயிலாடுதுறை மற்றும் அதைசார்ந்த பதிவுகளை மட்டுமே!

சில சமயங்களில் அவுட் ஆப் சிலபஸாக சில வலைப்பூக்களுக்கு சென்றதுண்டு! ஆனா பாருங்க பெரும்பாலும், சுற்றின இடம்னு சொன்னா
இங்கதான்

மயிலாடுதுறை சிவா- எங்கள் ஊரின் மையம் என்று சொன்னால் மணிக்கூண்டு அதை மையமாக வைத்த இவரின் வலைப்பூ. எனக்கு இவரைத்தெரியும் ஆனால் இவருக்கு என்னை தெரியாது! ஆரம்பத்தில் பத்திரிக்கைகளில்,மயிலாடுதுறை சிவா என்று எனக்கு அறிமுகமாகிய பெயர் இணையத்தில் இருந்தது கண்டு ஆச்சர்யமடைந்தவன் நான்!

வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருப்பதில் ஊர்க்காரர்களான எங்களுக்கு பெருமைதான்!

உங்களுக்கு இது போல் நடந்து இருக்கா?பதிவும், தாய்தமிழ் பள்ளி பதிவும், ஊரிலிருக்கும் ஒட்டல்கள் பற்றிய அனுபவ குறிப்பும் என்னை மிகவும் கவர்ந்த பதிவுகள்! மொத்ததில் மயிலாடுதுறையிலிருந்து உண்மையான திராவிட பதிவர்!

பத்திரிக்கைகளின் மூலம்,மயிலாடுதுறையிலிருந்து மற்றொருவர் மாயவரத்தான்!

தற்போதைக்கு பதிவுலகிலிருந்து, ஒதுங்கி இருந்தாலும், எபோவாவது பதிவை புதிப்பிக்க மாட்டாரன்னு ஆர்வத்தோடு அவ்வப்போது சென்று வரும் தளம்
சில சமயங்களில் சில வரிகளிலேயே பல விஷயங்களை சொல்லும் ஸ்டைல்தான் இவரோட ஸ்பெஷாலிட்டி!

பத்திரிக்கையுலகிலிருந்து இன்னுமொரு பதிவர் ரஜினி ராம்கி சொல்லவே வேணாம்! பேரை பார்த்தாலே தெரியும். ரஜினி சம்பந்தபட்ட விஷய்ங்கள்ல ரொம்ப ஈடுபாடு! அதற்குன்னு தனியா நாளு பேருகூட சேர்ந்து தனியா இணையத்தளம் நடத்திக்கிட்டு வராரு!அதுவும் பெரிய ஹிட்டான வெப்சைட்டா போயிட்டிருக்கறதுல கொஞ்சம் நாங்களும் காலரை தூக்கிவிட்டுக்கலாம்!

இவரோட பதிவுகள்ள,எனக்கு பிடிச்சது, சுனாமி சம்பந்தமான செய்திகள், அப்போதைக்கப்போது வரும் அரசியல் மேட்டர்கள் மற்றும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரங்கட்டேய்..!

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பதிவர்னா எல்லே ராம்தான்! என்னைக்கு வேணும்னாலும் எடுத்து படிச்சா, மனசுல பட்டாம்பூச்சி சிறகடிக்க வைக்கும் பிறந்தகப்பொருமைகளும்,கபாலி மேட்டர்களும்,அருவி போல வரும் சென்னை பாஷையும் பெரியண்ணனோட பிளஸ் பாயிண்ட்டு! எங்களுக்கும் அதான ரொம்ப பேவரைட்டு

தொடரும்...!

(ஆபிஸ்ல எல்லோரும் என்னைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இப்போதைக்கு எஸ்ஸாகிக்கிறேன்..!)

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மற்றொருவர் மாயவரத்தான்!"

இவரோட புரோபைல் இமேஜ்தான் என்னோடதும் அவர் பதிவில் இருந்து எடுத்ததுதான் அந்த டாம்& ஜெர்ரி இமேஜ்:) (சுட்டது)

said...

ஆபிஸ்ல எல்லோரும் என்னைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இப்போதைக்கு எஸ்ஸாகிக்கிறேன்..!)////

ஆபிஸ்ல மட்டுமா பார்க்கிறாங்க ஆயில்யன், உலகமே உங்களைதான் பார்க்குது:))) ஹி ஹி
(ஸ்டார் என்றால் அப்படிதானே)