கலைஞர் டிவியில் - கலைஞரின் கவிதைகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

முன்னுரையாக என்னுரை தொடங்குகிறேன் இது
பொன்னுரையாக அமையுமென எண்ணாதீர்
புதிய கோணத்தில் காந்தியின் புகழ்பாடப் போகிறேன் அவற்றைப்
பதிய வைக்க மக்கள் மனத்தைப் பண்படுத்த முனைகிறேன்.
உதயத்தில் எழுந்து
ஒருநாள் பகல் முடிய
உழைத்திடும் முத்தன் என்பான்
உயிர் போகுதண்ணே பசி எனக்கு,
ஒரு வாழைப்பழம் கொடு தின்பதற்கு
நான் வாழப்பழம் ஒன்று கொடு என்று
நயமாகக் கேட்டான் நாராயணன் கடையில்!
கருணை காட்டுவதில்
கடையேழு வள்ளல்களையும் மிஞ்சுகின்ற நாராயணன்
கருணை கடுகளவும் குறையாமல்
காசை எடு கண்ணா, காசை எடு என்று கை நீட்டினான்,
நாளைக்கு தருகின்றேன் இன்றைக்குப் பழத்தைக் கொடு,
வாளைப் போல் பசி வயத்தைக் கிழிக்கிறது,
வாயெல்லாம் பல்லாகக் கெஞ்சினான் முத்தன்...
வகையத்த பயலுக்கு வாழைப்பழம் ஒரு கேடா?
வந்த வழியைப் பார்த்துக்கிட்டு இங்கிருந்து போடா!
இனமாகவா கேட்கின்றேன், இன்று மட்டும்
கடனாகக் கொடுக்கக் கூடாதா?
காந்தி கணக்கில்
அதற்குப் பதில்
நாராயணன் சொன்னான்&
நாளை கடன் இன்று ரொக்கம்!
எழுதித் தொங்குது பார்
அதோ அறிவிப்புப் பலகை!
அறிவிப்பைப் படித்து விட்டு
அப்படின்னா ஒரு பழமாவது கொடு! என்றான் முத்தன்!
நல்லது என்றபடி நாராயணன்,
எடுத்துக் கொடுத்தான் ஒரு பழத்தை!
பக் கென்று பழத்தை வாயில் போட்டுக் கொண்டு
பறந்தான் முத்தன் அந்தக் கடையை விட்டு!
ஏ, ஏ, முத்தா...
காசு கொடுக்காம போறியே...?
Ôகாசா? காந்தி கணக்கிலே எழுதிக்க என்று
லேசாகச் சொல்லிவிட்டு முத்தன் முடுக்கினான் வேகம்!
அது கண்டு;
வியப்பால் என் விழிகள் விரிந்தன.
காசா? காந்தி கணக்கில் எழுதிக்க!
இப்படி;
பழக்கடை
பலகாரக் கடை எனப்
பல கடைகளிலும்;
காந்திக் கணக்கில் எழுதிக்கோ என்று
கடனுக்குத் தின்று விட்டுப் போகிறார்கள்;
காந்திக் கணக்கென்றால் அது என்ன?
கள்ளக் கணக்கு
கறுப்புப் பணக் கணக்கு
இப்படி எத்தனையோ கணக்கில்
இது என்ன காந்திக் கணக்கு?
என்ற சிந்தனையில் என் இளம் மூளை மூழ்கியது.
கடன் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில்லை.
காந்திக் கணக்கில் வைத்துக் கொள்ள என்பது;
காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கி தந்து விடுவார் பிறகு
கடன் வாங்கினால் திருப்பித் தர தேவையில்லாத ஆட்சி
இனிமேல் எப்போதுமே நடக்கும் என்ற கற்பனை தான்!
நமதாட்சியில் ஏழாயிரம் கோடி கடனை
ரத்து செய்து விவசாயிகளின்
நல் வாழ்த்தை நாம் பெறவில்லையா?
அப்படியரு காலம் வருவதை எதிர்பார்த்து
அப்போதே அதற்கு ஒத்திகை பார்ப்பதற்கு
காந்தி கணக்கு என்று கண்ணியமான ஒரு பெயரைக்
கண்டுபிடித்த இந்தியத் திருமகனை எப்படித்தான் புகழ்ந்து போற்றுவதோ?
இன்று இந்தியா சுதந்திர பூமி
கணக்கையே தீர்த்த கும்பல்
இல்லாதவன்; வரி கட்ட வக்கு வகை இல்லாதவன்; அவனே
காந்தி கணக்கு வைக்கத் தகுதியானவன்& இதில்
இரு வேறு கருத்துக்கு இடமில்லை ஆனால்
காந்தியின் கணக்கையே தீர்த்த கும்பலுக்கு
இடுகாடு, சுடுகாட்டில் கூட இம்மண்ணில் இடமளிக்கலாமா?
கோடீஸ்வரப் பெரிய மனிதர்கள், பிரபுக்கள், செல்வச் சீமான்கள்,
ஓடி ஒளிகிறார்கள் வருமான வரி என்றால்
விசாரணை மன்றத்துக்குக் கழைத்தாலோ வியர்வையிலே குளிக்கிறார்கள்.
அசாதாரணமாக அள்ளி எடுத்து லஞ்சம் குவிக்கிறார்கள்
ஆள் மயக்கி மற்றும் அதிரச மது பானங்களுடன் மஞ்சம் விரிக்கிறார்கள்
அரசை ஏமாற்றி விட்டோம் என்று ஆரத் தழுவி சிரிக்கிறார்கள்
அதில் தடுமாறுகிற அதிகாரிகளும் உண்டு;
அநீதியை நீதியென சாதிக்கும் அவசர நீதிமான்களுமே உண்டு& இப்படி
வருமான வரி கட்டாமல் இன்னமும் காந்திக் கணக்கு எழுதுவோரின் வாதம்
எம்மான் காந்தி முன்னிலையில் எள் முனை அளவேனும் எடுபடுமா?
வானம் பொழியுது, பூமி விளையுது உனக்கு
வருமான வரி ஏதுக்கய்யா?... என்று
கட்டபொம்மன் போல் வசனம் பேசுவது
கன கச்சிதமாக கை தட்டணும் போல்தான் இருக்கிறது
கட்டபொம்மன் அந்நிய நாட்டு ஆங்கிலேயனைப் பார்த்தன்றோ
அதிரடியாக முழுக்கமிட்டான்&
ஆனால் வருமான வரி கட்டாத இந்த
கெட்டபொம்மன்கள்; இந்திய நாட்டு இன்கம் டாக்ஸ்
அதிகாரிகளை யன்றோ இம்சை அரசன் புலிகேசியைப்
பார்ப்பதுபோல பார்த்து இடி முழக்கம் செய்கிறார்கள்....
குடும்பங்கள் ஒன்று பத்து நூறு என இருந்தாலும்
தாங்கக் கூடியவன் கொள்ளைப் பணம்
வாங்கி குவிக்காமல்
வருமான வரி நேர்மையாக செலுத்தினால் தான்
நலமான வாழ்வு நலிந்தோர்க்கும் கிட்டும்
நாடு வளமுறும் கேடு விலகும்
பாடுபடும் மக்களுக்குப் பயன்கள் பல விளையும்..
தூய்மையாளர் கட்டிய வரிப்பணம் தான்
தேசத்தின் நாடி நரம்புகளைத் துடிக்க விடுகின்ற
வாய்மையாளர்களின் ரத்த தானம்
அந்த நாளங்கள் தூர்ந்து விட்டால்
நாடு; நகரக் கூட முடியாத ஆமை ஆகி விடும்
நாவசைக்க வொண்ணா ஊமையாகி விடும்
பொருளாதார மூச்சின்றிப்
புதையுண்ட பிணமாகி விடும்.
இதை உணராமல் வற்றாச் செல்வம் துய்ப்பவர்க்கு
வரி ஏமாற்றும் கலையில் துணை நின்று;
வஞ்சகம் வென்றிட வாய்தாக்கள் பெற்று
வாழ்வத தான் ஒரு வாழ்வா?
நீதியை நெஞ்சாரக் கொன்று;
நேர்மையை மென்று தின்று
பொல்லாதார் புகழைத் தூக்கி சுமந்து
இல்லாதோரை வதக்கி பிழிந்து
மாற்றிப்பாடுகிறேன்
வாட்டி வதைத்தால் ....
இதற்கா சுதந்திரம் பெற்றோம்? என்று
இந்தியத் தாய் அடி வயிற்றில் அடித்துக் கொள்ள
இதயத்தில் காந்தியார் ஏந்திய மூன்று தோட்டாக்களின் வடுக்களும்
இந்தியராம் நம்மை நோக்கிச் சிரிக்குமய்யா!
அதனால் பாரதியின் பாடலை
சிறிது மாற்றிப் பாடுகிறேன்
வருக; நீ எம்மான் இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந்தன்னை
பண்படுத்த வருக; காந்தி
மகாத்மார்; நீ வருக வருக!
நீ வந்த பிறகு; நீ சொன்னபடி நீயும் இணைந்து;
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால்
வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
மதவெறியரால் மகாத்மா நீ மாய்க்கப்பட்ட போது
இதற்கு காந்தி தேசம் என்று பெயர் வைப்போம் என்றார் பெரியார்!
எதிர்ப்புக் கிடையிலேயும் வேலை மாநகரில் உன் சிலையைத் திறந்தார் அண்ணா!
இவ்விரு தலைவர் வழி வந்த நான் இக்கவியரங்கை உமக்குக்
காணிக்கை ஆக்குகிறேன்.


கடைசி ஜட்ஜ்மெண்ட் கவிதையாக...


தித்திக்கும் அன்புவழி அமைதி வழி
எத்திக்கும் பரவுவதற்கு அறவழியில் செயல்பட்ட அண்ணல் காந்திக்கு;
தீவிரவாதத்தின் திடீர் நுழைவுச் சேதி; இந்த
தேசத்தையும், அவர் தேகத்தையும் குலுங்கவைத்த புதிய திருப்பம்!
இன்பத்தின் சங்கமத்தில் இவ்வுலகில் பிறந்த மனிதனுக்கு ,
இடையில் துணையாய் வந்த இருட்டு வழியே தீவிரவாதம்
விடியலைக்கண்டும் விண்ணுமிழ் வெளிச்சம் கண்டும் அவற்றை
வெறுத்து விலக்கி இடையில் வந்த இருளைப்பற்றினால்;
அதுவே பயங்கரவாதம்“
மழலையாய் தவழ்ந்தபோது மணிக்கதிர் குலுங்குதல்போல் நமது
மடியினில் சிரித்து விளையாடி விட்டு
மனிதனாய் உருவெடுத்தான்,
கொடிய மிருகமாய் உலவலானான் நினைப்பதில்
துரிதமாய் வெற்றிபெற தூக்கினான் துப்பாக்கி வெடிகுண்டை!
புத்தியை தீட்டு;கத்தியை தீட்டாதே; என்ற
பொன்மொழியை தீவிரவாதமே; நீ படித்துத் திருந்தக்கூடாதா?
போர் என்றால் இருபடைகளுக்கிடையே; அது வரலாறு!
.......................இரு தாதாக்களுக்கிடையே எனில் அது தகராறு!
போருமில்லை தகராறுமில்லை .................
புதைகின்றார் உயிரோடு மக்கள்; குழந்தை குட்டிகளோடு!
தீவிரவாதம் இதை உணருமா?
தீக்காற்று ;தென்றலாகுமா?
மரக்கட்டைஆனான் மனிதன்
மதச்சார்பற்ற நிலையெடுப்போரை மனம்போன போக்கில்
திட்டி தீர்த்தான்.
எல்லா இடத்திலும் ஒன்றே குலம்
ஒருவனே தேவன்என
தன்னைத்தானே வருத்திக்கொண்டு இந்தத்
தரணி வாழ் மக்களின் சாதி உயர்வு தாழ்வை மாற்றி,
ஒரு நிலைப்படுத்தி உலகில் சமத்துவம் நிலைநாட்டவும்
உரிமை இழந்தோர்க்கு சம தர்மப்பாதை அமைக்கவும்
உண்ணாநோன்பெனும் ஆயுதத்தை கையில் எடுத்தார், உத்தமர் காந்தி!
ஒன்றா இரண்டா? ஒப்பற்ற வெற்றி பல பெற்றார்&
உலகில் காந்தி மகான் வாழ்ந்த வரையில்;
ஓர் எறும்பின் துயரத்தைக்கூட அவர் அனுமதித்ததில்லை.
அர்ப்பணிப்போம்
அவருக்கு பின்
அவர் நினைவாகவாவது
இம்சைக்கு விடை கொடுத்தனுப்பக்கூடாதா?அவர் தந்த
அகிம்சை எனும் அகல் விளக்கைத்தூக்கி பிடிக்கலாகாதா?
ஒரு மனிதன் அறிவித்த உண்ணா நோன்பு; இந்த உலகையே உலுக்கிற்று அந்த
உத்தமரின் வழிநின்று அறப்போர் தொடுத்தோம்;அது
அநீதியாளர் வயிற்றை கலக்கிற்று!
அந்தத் தூயவர் நடத்திய தொண்டர்தம் அணிவகுப்பு,
துரோகிகள் தொண்டையில் எலும்பாய் அடைத்தது
இன்னல் விளைப்போர் கண்களில் மின்னலாய்ப்பாய்ந்தது
இதயமற்றோர் மண்டையில் இடியாய் விழுந்தது
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி என கிளம்பிற்றுக்காண்
தமிழச்சிங்கக்கூட்டம்
கிழித்தெறிய தேடுது காண் பண்பாடு அறியாப்பகை பூத்த
வஞ்சக நெஞ்சுக்கூட்டத்தை!

0 பேர் கமெண்டிட்டாங்க: