அனைத்து அரபு நாடுகளும் இவ்விஷயத்தில் அமைதிகாத்துக்கொண்டிருக்க, முந்தி கொண்டது மலேசியா! இனி வரும் காலங்களில் விண்வெளி பயணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற தொலை நோக்கு பார்வையோடு யோசித்த மலேசியா, அந்த சமயங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் முஸ்லீம் மக்கள் தம் இறை கடமைகளை எப்படிச்செயவது? என்பது பற்றிய பதினெட்டு பக்க இறைவணக்க முறைகளை தொகுத்து வெளியிட்டுள்ளது,
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா அமைந்துள்ள சவுதியின் மன்னர் முன்பொருமுறை இது போன்ற விண்வெளி பயணத்தில் இஸ்லாமியர்களுள் முதல் முதலாக விண்வெளிக்கு சென்றவர் என்ற பெருமையுடன் தன்னால் இறை கடமைகளை நிறைவேற்ற முடிந்ததாகவும், ஆனால் மண்டியிட்டு, மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழ இயலவில்லையென்றும் தெரிவித்திருந்தார்! தற்போது இந்த வழிகாட்டு(பாட்டு) முறைகள் அடங்கிய புத்தகம் அக்குறையை நீக்கும் எனவும், இனி விண்வெளி செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிக்க உதவியாக இருக்குமெனவும் மலேசிய அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்!
இந்த கையேட்டினை மலேசிய இஸ்லாமிய வளர்ச்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது .
இன்னும் சில நாட்களில் விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ள முஷாபர் ஷுகூர் என்னும் எலும்பு மருத்துவ நிபுணர் இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் விண்வெளிக்கு செல்லும் அவர் தன்னால் முயன்ற வரையில் தனது இறை கடமைகளை பின்பற்றப்போவதாக தெரிவித்துள்ளார்!
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment