நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு..!


இது நாள் வரையில் நான் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன், நானா இப்படி செய்வது.? என்று எனக்கே என்னை பற்றி ரொம்ப பெருமையாகிடுச்சுங்க!

வந்த புதிதில், பல இடங்களில் நான் பலரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறேன் என்பதனை என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் ஆனால் என்ன செயவது நான் வந்த வழி என்று என் விதியினைத்தான் நான் நொந்துகொள்வேன்.ஆனால் வெகு விரைவிலேயே நாம் இப்படி ஆவேன்! என்று நினைக்கவேயில்லை.
(என்னாடா இவன் இப்படி கிறுக்குறானே டென்ஷனாகதிங்க)

முதல் நன்றி! அறுசுவைக்கு!

அடுத்த நன்றி! முகமறியா, சமையல் செய்முறைகளினை, அளிக்கும் பெண்கள்.

ஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள்! ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது.! (எனி அப்ஜெக்ஸன்?!)

அயல்நாடுகளில், பணிக்கு செல்லும் என்னை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்படுவது உணவு பிரச்சனையில்தான்! அதுவும் சைவ உணவு வகைகளினை மட்டும் எடுத்து உண்ட எனக்கு இது மிகப்பெரும் பிரச்சனையானது.

வெஜ் சாப்பாடு இருக்கான்னு கேட்டா,எரிக்கற மாதிரி பார்த்துட்டு,பூரிக்கு செஞ்சு மீந்த கிழங்கையும், கடலையயும் போட்டு ஒரு அப்பளத்த வைச்சு கொடுப்பாங்க! அதுவும், வெள்ளிகிழமையில எல்லா கடையிலயும் அசைவம்தான்!

இதனால பல வெள்ளி கிழமைகள் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன்..!

இங்கு கத்தாரில், பெரும்பாலன கடைகளில் நம்ம கேரளாக்காரங்க இருந்தாலும், சைவ உணவு வகைகள் என்பது இங்கு எளிதான விஷயமன்று! அதுவுமில்லாமல்,அசைவ உணவுகளை விட விலையும், அதிகம் அதனால் இங்கு பெரும்பாலனோர் வெகு சீக்கிரத்திலேயே அசைவத்திற்கு மாறிவிடுகின்றனர்!

கடைசியாக எடுத்தமுடிவுதான், எனக்கு நானே சமைக்கும் திட்டம்!

ஸ்டார்டிங் எப்போதும் எனக்கு நல்லா வரும், ஆனா ஃபினிஷிங்தான் சொதப்பும், ஆனாலும் மனச தளரவிடாம அந்த ஐட்டங்கள சுட, சுட, சாப்பிட்டு முடிச்சாத்தான் ஒரு திருப்தி.( ஆறி போன எவன் தின்பான்!)

இப்படி நான் இஷ்ட்டப்பட்டு சமைச்சு,கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு வாழ பழகிகிட்டேன்!

ஒருநாள் கூகுளில் தமிழில் விளையாடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் இந்த அறுசுவை.

இப்போது எனக்கு இதுதான் சமையல் கலை கற்றுக்கொள்ளும் இடம்!

அடுப்பு பத்த வைக்குறதுக்கு முன்னாடி வெப்சைட் ஒபன் பண்ணிவைச்சுக்கிட்டாதான் எல்லாம் சரியா வரும்ங்கறது நான் கத்துக்கிட்ட முதல் பாடம்!

இந்த சைட்ட நான் பார்க்காத நாட்கள்னா, விரத நாட்கள்தான் என்பது இன்றைய நிலைமை..!

திக்கெட்டும் அறுசுவை மணம் பரப்பும் இவ்விணையம் புறப்படும் இடம் எங்கள் மாவட்ட தலைநகர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இது எனக்கு சம்பந்தமில்லாத சப்ஜெக்ட். அதனால எதுவும் சொல்ல முடியாது. ஆனாலுல் பாவம் என்னை நம்பி இரண்டு ஜீவன் என்னோட சமையலை சாப்பிடுறாங்க. பாவம். இனி அறுசுவைல என்ன இருக்கு செஞ்சு கத்துக்குவோம்.

said...

//பாவம். இனி அறுசுவைல என்ன இருக்கு செஞ்சு கத்துக்குவோம்.//

முடிஞ்சா..! நீங்க கத்துக்கிட்டு செஞ்சு கொடுங்க, இல்ல அந்த ரெண்டு ஜீவன்கள்ல, ஒருத்தங்கள கத்துக்க சொல்லி சுவையுங்கள்!!!

said...

பெங்களூர்ல இருந்துட்டு நானே அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். தமிழ் மொழி மட்டுமல்ல, உணவும் நம்மள கெடுத்து வச்சிருக்கு. நம்ம சாம்பாரும் , சோறும், ரசமும் திங்காம எப்படி வாழறது சொல்லுயா??... வீட்ல திட்றாங்க மேனேஜராயிட்ட இதெல்லாம் தேவையான்னு, ஆனா படரவனுக்கு தானே தெரியும் கஷ்டம். எப்படி இருந்தாலும், நம்ம சுவையில நாம சமைச்சி சாப்பிடுற சுகமே தனி தாய்யா... கலக்கு. நல்லா கத்துக்கிட்டா வேலய விட்டுட்டு ஓட்டல் போட்டுடல்லாம்னு இருக்கேன். :)

said...

அறு சுவையை விட ஏழாவது சுவை எல்லாம் நான் கண்டு பிடிச்சு வெச்சு இருக்கேன், துபாய் வந்து என்னோட சமையலை சாப்பிட்டு பாரும்.

said...

ஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள்! ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது.! (எனி அப்ஜெக்ஸன்?!)///

இதில் இருந்தே தெரிகிறது நம்ம ஆயில்யன் "கட்டை" பிரம்மசாரின்னு.
இப்ப அபி அப்பா எல்லாம் என்னா அம்மாகிட்டவா சமையல் கத்துக்கிட்டார்? நம்ம ஊர் ஆளை வெச்சிட்டு இப்படி எல்லாம் பேசினா டென்சன் ஆயிடுவேன் ஆமா!

said...

//குசும்பன் said...
அறு சுவையை விட ஏழாவது சுவை எல்லாம் நான் கண்டு பிடிச்சு வெச்சு இருக்கேன், துபாய் வந்து என்னோட சமையலை சாப்பிட்டு பாரும்.//

ஏழாவது அதிசயமா அது!!!??
எதுக்கும் நீங்க அபிஅப்பாகிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி அதப்பத்தி ஒரு சர்டிபிகேட் பதிவு போட சொல்லுங்க அப்புறமா நாங்க முடிவு பண்றோம் வர்றதா வேணாமான்னு!?

said...

//கட்டை" பிரம்மசாரின்னு.//

கட்டையெல்லாம் கிடையாது நான் நல்ல உயரம் தெரியுமாஆஆ

said...

சைவம் சாப்பிடும் நம்மைப் போன்ற நண்பர்களுக்கெல்லாம் அயல் நாடுகள் என்றாலே இந்தப் பிரச்னை தான். என்ன செய்வது.