அட்வைஸ் From ராதிகா..!

குட்டிப் பசங்க நிறைய கேள்விகள் கேட்பாங்க. நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்விகளாக இருக்கும். அவங்களுடைய கேள்விகள் நியாயமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும். முக்கால்வாசி நமக்கு பதில் தெரியலைங்கிறதாலதான் எரிஞ்சி விழுவோம். பொறுமையாக யோசித்துப் பார்த்தால் அறிவுபூர்வமான இந்தக் கேள்விகள் இவங்களுக்கு எப்படி தோணுதுனு ஆச்சரியமா இருக்கும். கேள்விகள் கேட்பது சிந்தனை வளத்தையும், கற்பனைத் திறனையும் வளர்க்குமாம். அதனால முடிந்த வரையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலைனாலும், அவங்க கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருந்தால் நல்லது! என் பையன் குடைகிற கேள்விகளையெல்லாம் இப்படித்தான் சமாளிக்குறேன்!

பசங்களை படிபடின்னு டார்ச்சர் கொடுக்காமல் பார்த்துக்கணும். படின்னு சொன்னாலே படிப்பு அவங்களுக்கு அதிக பிரஷர் கொடுத்துடும். ரேயான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருக்காள்.பொதுத் தேர்வை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்காள். நான் அவகிட்ட நீ படிச்சிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குன்னு மட்டும்தான் சொன்னேன். தினமும் காலையில் அலாரம் வைத்து எழுந்து தானாகவே நல்லா படிக்குறாங்க... நானும் ஷ¨ட்டிங் முடிஞ்சவுடன் முதல்வேளையா வீட்டுக்குக் கிளம்பிடுவேன். படின்னு சொல்லலைனாலும் அம்மா வீட்டில் இருக்காங்க படிக்கணும்ங்கிற உணர்வு அவங்களுக்கு இருக்கு. மகளுக்கு எல்லாமே நான்தான். என்னோடவே பிண்ணிப் பிணைஞ்சுட் டாங்க...’

பொதுவாகவே குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கை ரொம்ப எதிர்பார்க்க முடியாது. வேலையில் பிஸியாக இருந்துவிடுவதால் முழு பொறுப்பும் நம்ம கையில் தான் இருக்கு. வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கணும்னு அவங்களை எதிர்பார்ப்பதில் நியாயமும் இல்லை. ஆனால் நாம என்னதான் பார்த்துகிட்டாலும் பசங்க அப்பா செல்லம்தான்! காலையில் எழுந்தவுடன் ராகுல் அப்பாவைதான் கேட்பான். ஜிம்முக்கு போயிருக்காருன்னு சொன்னால் நான் எழுந்தாச்சுன்னு சொல்லி உடனே வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னுவான். அவரும் உடனே வந்திடுவாரு. அப்பான்றவரு குழந்தைகளுக்கு ஒரு மிகப்பெரிய சப்போர்ட்தான்!

ஒண்ணு மட்டும் தெளிவா புரிஞ்சுக்கணும். கெட்ட பெற்றோர்கள் வேணா இருக்கலாம், கெட்ட குழந்தைகள் இருக்க சான்ஸே இல்லை. நம்மளைதான் நம்ம பசங்க இமிடேட் பண்றாங்க. அதனால கூடிய வரையில் நாம நல்லவாங்களாக இருக்கப் பழகினால் குழந்தைகளும் நல்லவர் களாகவே வளருவாங்க’’ திருத்தமாக பேசுகிறார் ராதிகா சரத்குமார்
நன்றி:-குமுதம்

********************************************************************

நல்ல விஷயம்தான்..! பெரும்பாலன பெற்றோர்கள் இந்த விஷயங்கள கடைப்பிடிக்கணும் ஒ.கேவா?!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஒ.கே.! இப்ப முக்கியமான, இந்த கட்டுரை படிக்கும்போதும், புகைப்படங்களை, பார்க்கும்போதும் மனதை துளைத்துக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருவோம்..

சரத்குமார் தன் முதல் மனைவியை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்! என்றும், ஏற்கனவே, அவருக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு எப்போதோ, எதிலோ படித்த தகவல்.!

அவர்கள் இந்நேரம் எந்த நிலைமையில் உள்ளார்கள் என்னதான் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை என்றாலும் அதற்காக அந்த அப்பாவி பிள்ளைகள் பாதிக்கப்படுவது, ஏன்?

இது போன்ற பேட்டிகள் கட்டுரைகளை படிப்பதன் மூலம் அந்த பிள்ளைகளின் மனதில் உருவாகும் ஏக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமல்லவா?

அப்படியில்லாவிட்டாலும் இதை காணும் அந்த பிள்ளைகளின் நண்பர்கள் அவர்களிடம் ஏதாவது கேட்டால்?

இப்படியாக பார்க்கையில் எதோ ஒரு வகையில் இது சரியா? அல்லது தவறா?

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளமுடிகின்றது. இவர்கள் நல்ல பெற்றோராக இருப்பதற்கு அவர்களின் தனிமனித ஒழுக்கமும் அவசியம் என்று சொல்லியிருக்கின்றீர்கள்.

Anonymous said...

intha sarath, radhika maathiri aalungalukkuam ellam aduthavangalakku advise sollra arguthai enna irukku???

modhale than mudugil ulla azhukkai paarkattum..

said...

சரத்தின் முதல் மனைவிக்கு இரு பெண்கள், அது உண்மை தான். அந்த் இரு பெண்களும் என் பள்ளியில் தான் படித்தார்கள்- rosary matriculation. அப்போ நான் 6th படிக்கும்போது அவங்க முதல் பெண்ணு 9th அல்லது 10th படிச்சாங்கனு நினைக்கிறேன். இப்ப கிட்டதட்ட 10 வருஷம் ஆச்சு. அவங்களுக்கு இப்ப 25 வயதாவது இருக்கும். அந்த முதல் மனைவி ஒரு வழக்கறிஞர். ரொம்ப தைரியசாலி. பொருளாதார அளவில் அந்த் இரு பெண்களுக்கு கஷ்டம் இருக்காது. ஆனா.. நீங்க சொன்ன மாதிரி மனதளவில் கண்டிப்பா இருக்கு. அது எத்தனை வயதானாலும். ராதிகாவின் பொன்னு ரெயன்கூட பார்த்தீங்கனா தெரியும் சரத்கூட அவ்வளவு attachement கிடையாது!!