ஸ்வாஸ்திக்..!!??

அனேகமா நம்மூருக்காரங்க, யாராவது அமெரிக்காகாரனுக்கு ஐடியா கொடுத்துருப்பாங்கன்னுத்தான் நினைக்கிறேன்! பின்ன என்னாங்க சும்மா படக்கதையில பார்த்து பழக்கப்பட்ட பாலம் அந்த பாழாப்போன கூகுள் எர்த் போன்ற விஷயங்களாலெல்லாம் இப்ப அனுமார் இலங்கையை பத்த வைச்ச மாதிரி எங்கயோ நெருப்பு வைச்சு, எங்கயோ எரிஞ்சுக்கிட்டிருக்கு! எது எப்படியோ தமிழ்நாடு தப்பிச்சா சரி!

இதே மேட்டரு, இப்ப அமெரிக்காவிலும், ஆரம்பிச்சிருக்கானுங்க, தென் கலிபோர்னியாவுல இருக்கற கடல் நேவல் ஆபிசருங்க ஆபிஸ் எப்பவோ கட்டியிருக்காங்க, அதாவது 1960ல் அந்த காலத்தில இன்ஜினியரு L ஷேப்ல கட்டுறேன் பேர்வழின்னுட்டு, இஷ்டத்துக்கு L போட்டுட்டு போயி சேர்ந்துட்டான்!

Photo Sharing and Video Hosting at Photobucket


அந்த பில்டிங்க,இப்ப எவனோ என்ன மாதிரி ஆளு – என்னாடா மயிலாடுதுறை மட்டும் பச்சையா தெளிவா இல்லாம இருக்கு! ஆனா பாரு இந்த சீர்காழி செம்பனார் கோவில்லெல்லாம் ரொம்ப க்ளியார தெரியுது என்னா காரணமுனு மண்டை பிச்சுக்கற மாதிரி! – அந்த நேவல் பில்டிங்கயே பொரட்டி பொரட்டி பார்த்துட்டு, அய்யோ இது ஹிட்லர் சிம்பலாச்சேன்னு அலற,

மாத்துணும்!

மாத்துணும்!

இப்பவே மாத்துணுமுனு, கொடி புடிக்காத கொறையா திரிய ஆரம்பிச்சிட்ட்டனுவோ! அத விட அந்த ஊரு மீடியாக்காரங்க்ளுக்கு மேட்டர இல்லாம சுத்திக்கிட்டருந்தவங்க, சும்மா போறாவன் வர்றவன்கிட்டயெல்லாம், அது ஸ்வாஸ்திக்தானா? என்னா பண்ணலாம், இடிச்சுப்புடலாம? இல்லை அப்படியே இருக்கட்டுமாங்கற, ரீதியில கேள்வி அம்புகளா விட, அத பார்த்த கவர்ன்மெண்ட், ஏண்டா தேவையில்லாம இந்த பிரச்சனைன்னு, ஒரு அறுநூறு ஆயிரம் டாலர்ல, கொஞ்சம் லைட்டா, லேண்ட்ஸ்கேப் பண்ணி சரி பண்ணிடலாமுனு, திட்டம்போட்டு களமிறங்கிடுச்சு!

அத கேட்ட இன்னொரு குரூப் ஏன் அவ்ளோ செலவு பண்ணி அத சரி பண்ணணும்,கூகுள் எர்த் வர்றதுக்கு முன்னாடி எவனுக்கு தெரிஞ்சுது, அதனால என்ன பிரச்சனை வந்து? இதுக்கு போய் காசு செலவு பண்றத்துக்கு பதிலா ஈராக் போன கொஞ்சம் ஆளுங்க பலியானலும், பரவாயில்லைன்னு பல பேர போட்டுத்தள்ளலாமேன்னு கூவ, இன்னொரு குரூப்போ, அது சரி எவ்ளோ பேரு சோறு தண்ணியில்லாம சாகறான் அவங்களுக்கு இந்த காச கொடுத்த என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்குதுங்க!?

எப்படியிருந்தாலும் காச செலவு பண்ணி கட்டிடத்த சரி பண்ணாம வுட மாட்டொமுனு, ரொம்ப தீர்மானமா இருக்காம் கவர்ன்மெண்ட்..!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆமாம் தம்பி! ஆறுபாதி வரை வருது ஆனா நம்ம காலேஜ் எதுவும் வராம மாயவரம் மாத்திரம் பச்சை ஆகிடுச்சு! ங்கொய்யாலன்னு நெனச்சுகிட்டு அவனுங்களுக்கு மெயில் ஒன்னு தட்டிவிட்டேன்!!