இங்கு வந்த நாள் முதல் இந்த வார்த்தை அதிகம் பேரால் உபயோகிக்கப்படுவது, கண்டு எனக்குள் ஆர்வம் அதிகமாக்கியது! நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது உணவுப்பொருளாக இருக்குமென்று!
பல நாடுகளில் வெரைட்டி வெரைட்டியான உணவுகள் இருக்கும் ஆனால் பல நாடுகளின் பெயரில் இங்கு இந்த ஒரு ஐட்டம் மட்டுமே கிடைக்கிறது...!
பெயரில் பலவாகவும் அளவில் சிறியது பெரியதாகவும் இருந்தாலும் கூட இதன் சுவை அவ்வளவாக மாறுபடுவதில்லை.!
மிடில் ஈஸ்ட்டில் வாழும் 100 சதவிகிதம் பேரும் அறிந்திருப்பார்கள் இதன் அருமையை!
பலரின் காலை உணவாக,
பலரின் மதிய உணவாக,
மேலும் பலரின்
முழு நேர உணவாக இருக்கும் இந்த ஐட்டம்,
குப்பூஸ்ஸ்ஸ்...!
அரபு நாடுகளில் வாழ்வோருக்கு சில சமயங்களில் உணவாக உயிர் கொடுப்பது,
இந்த குப்பூஸ் + தொட்டுக்கொள்ள தயிரும்தான்...! (நம்ம கேப்டன் விஜயகாந்தே குவைத்ல இத பார்த்துட்டு,எவ்ளோ ஃபீல் ஆனாரு தெரியுமா?)
ஈரானிகளுக்கு மிசிரிகளுக்கு & பட்டாண்களுக்கு என ஒவ்வொரு நாட்டினருக்கும், வெவ்வேறு சைஸ் வாரியாக தயாரிக்கப்படும் இந்த உணவு, அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் அனைவராலும் உட்கொள்ளப்படும் ஐட்டம்தான்!
கோதுமையில் உருவாகும் இது,சுவையில் நம் ஊர் சப்பாத்தி மாதிரியாக இருக்கும், இந்த குப்பூஸ் தயாரிக்கும் முறை நம்மூரு பன் பார்முலாவில்தான்..!
அவ்ளோதான் எனக்கு தெரிஞ்சது..!
(எனக்கு ஒரு சந்தேகம் இத அக்டோபர் மாத புகைப்பட போட்டிக்கு அனுப்பலாமாஆஆஆ..!)
6 பேர் கமெண்டிட்டாங்க:
enakku abudhabi njaapakam vanthuvittathu! vazhthukkal! innoru padam konjam pachai kaikarikal serththu colourfulla anuppunga!
படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா நம்மூரு சப்பாத்தி ருசியாங்கிறதுல எனக்கு சந்தேகம்.
நான் படத்தை பாத்துட்டு தோசைன்னு நினைச்சேன்.
குப்பூஸ் கோதுமைல செய்யற ஐட்டமா?
ஓகே ஓகே
நல்லா சாப்ட்டு நல்லா இருங்கவோய்
டெய்லி இதுதான் சாப்பிடுறோம்னு வெளிப்படையா சொல்ல வேண்டியது தான
கடகமும் பயர் பாக்ஸும் ஜென்ம விரோதியா?
5//டெய்லி இதுதான் சாப்பிடுறோம்னு வெளிப்படையா சொல்ல வேண்டியது தான//
இத டெய்லியும் சாப்பிட்டோம்னா அவ்ளோதான்..!
அது சரி இதுக்காகவா இங்க வந்து இவ்ளோ கஷ்ட்டப்படு சம்பாதிக்கிறோம்!
இந்த ஐட்டம் நம்ம ஊரு அவசர உப்புமா மாதிரியான ஐட்டம் மட்டுமே...!
பதிவர் கவிதாவின் டயட் பற்றிய பின்னூட்டத்திற்காக உங்கள் படத்தைக் குறிப்பிட வேண்டியதாகி விட்டது.
Post a Comment