எனது கொலு கால நினைவுகள்!

டேய்..! எங்க வீட்ல கொலு வைச்சிருக்கோம் வாங்கடான்னு? கூப்பிடவேவே கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது!

பின்ன என்னாங்க கழுதை வயசாயிடுச்சு! இப்ப போய் சின்ன பசங்க மாதிரி வாங்கடா கொலு பார்க்கன்னு சொன்னா பிரெண்ட்ஸ் என்னா நினைப்பாங்க?

அதனால டேய்..! இன்னிக்கி சாயந்திரம் வீட்டுக்கு வாங்க சுண்டல் சக்கரைப்பொங்கல் தர்றேன்னு! சொன்னாப்போதும், அத்தனை பேரும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்பி எல்லாரையும் கூட்டிக்கிட்டு, தெரு முனையில, வந்து நின்னு இப்ப கரெக்ட் டயமா வர்லாமான்னு? கேட்கற டைப்பு..! (நாங்க மொத்த பேரும் இதே மாதிரி விஷயங்களில் ரொம்ப ஒத்துமை!)

கொலு வைக்கறதுல இன்னொரு விஷயமுமிருக்கு என்னானா? தெருவுல இருக்கற வாண்டுகள அப்பத்தான் கரெக்ட் பண்ணி, நம்மக்கிட்ட வர்ற வைக்கலாம்!

இந்த ஒன்பது நாளும் பார்த்தீங்கனா! வீட்ட விட்டு வெளியில வந்து நிற்கமுடியாது! எல்லாம் வாண்டுகளும் நம்மள சுத்தி வந்துடும்..! (எதாவது கரெக்ட் பண்ணி பொம்மைகள சுட்டுப்போக நினைக்கும் சில கிரிமினல் வாண்டுகளும் எம் தெருவில் உண்டு..!)

சரி இத விடுங்க எங்க வீட்ல கொலு வைக்க ஆரம்பிச்ச கதைய சொல்லணும்ல..!
சின்ன வயசுல எங்க வீட்டு மூத்தவருக்கு புள்ளையாருன்னா உசுரு! பிள்ளையாரு வாங்கி, வாங்கி, வீட்டோட ஹால்ல, பாங்க் லாக்கர் மாதிரி ஒரு பெரிய பொட்டியில் போட்டு வைச்சுருப்பாரு! இந்த மாதிரி நவராத்திரி நாள்ல, தருமபுரம் கோவில்ல கொலு வைச்சிருக்கறத பார்த்து, எங்க பெரியவருக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்துடுச்சி..!

(அங்க இருக்கற பிள்ளையார கட்டிப்புடிச்சிக்கிட்டு, இதுவும் வேணுமுனு கேட்டு, குடும்பமே சாத்து, சாத்துன்னு, சாத்திதான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்களாம்!)

எங்க அப்பா சொந்தகாரங்கள கூப்பிட்டு வைச்சு,மீட்டிங் போட்டு, கருத்து கேட்டு, நமக்கு இந்த பழக்கமெல்லாம் கிடையாது! என்ற பலத்த எதிர்ப்பையும் மீறி பையனோட ஆசைக்கு ஒ.கே சொல்ல, ஆரம்பிச்சுது கொலு வைக்கும்,கொலு பொம்மைகள் வாங்கும் படலம்! அதன் பின்னர் வந்த வருடங்களில் பொம்மைகளின் எண்ணிகை எகிறின!

அட..! இத யார் பார்த்து, என்ன பிரயோஜனம் என்ற அலட்சியத்தில் நாங்க இருக்க; தெருவுல உள்ளவங்க, இந்த சேதிய எங்ககிட்ட சொல்லமாட்டிங்களான்னு? ரொம்ப கவலையா கேட்டுப்போக, அன்றிலிருந்து அக்கம்பக்கத்திலுள்ளவர்களை அழைக்கும் முறை ஆரம்பமானது!

கலர் பேப்பர்களில் காகித பூக்கள் கட் செய்வது,சீரியல் விளக்குகளால் அழகுப்படுத்துவது, போன்ற விஷயங்களில் அப்போதிருந்த ஆர்வம் ! இப்ப சுத்தமா போயே போச்சு..!

அது இன்னும் கன் டினியூ ஆகிக்கிட்டிருக்கு என்ன ஒண்ணு பழைய மாதிரி பிருமாண்டமா கொலு வைக்கத்தான் ஆளுங்க இல்ல...!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நமக்கு இது போல் பார்த்த அனுபவம் கூட கிடையாது:(

said...

//குசும்பன் said...
நமக்கு இது போல் பார்த்த அனுபவம் கூட கிடையாது:( //

நோ பீலிங்ஸ்மா...!

அதான் நீங்க போட்டோக்களால செஞ்ச கொலுவை உலகமே பார்த்துக்கிட்டிருக்கே..!

said...

பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா

said...

அருமையான பதிவு.!

said...

சூப்பரா சொன்னீங்க

கொலுன்னா எப்பவுமே நமக்கு சுண்டல்தான். அதுவும் ஒரு நாள்ல ரெண்டு மூனு வீட்டுல கூட கிடைக்கும். அதெல்லாம் ஒரு காலம்.

மங்களூர்ல எல்லாம் யார் வீட்டுலயும் வைக்கற மாதிரி தெரியலை

:-(