இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப் படாதீர்கள். விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள். எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.
உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.
வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.
புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
- கவியரசு கண்ணதாசன்
கவியரசரின் நினைவு நாளில் ( 17.10.1981 )
கவியரசரின் நினைவு நாளில் ( 17.10.1981 )
5 பேர் கமெண்டிட்டாங்க:
ஆஹா.. வணங்குகிறேன் என் ஆசானை.. அவனுடைய அனுபவமே தமிழாய்ந்த தமிழர்களின் வாழ்க்கை.. வாழ்க கவியரசரின் புகழ்..
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.... இன்றைய காலத்தில் போலி கொள்கை பிடிப்போடு வாழ்வதை காட்டிலும் இப்படி வாழ்வது எவ்வளவோ மேல்.
அர்த்தமுள்ள இந்துமதம் எத்தனை பாகம்?
அது இணையத்தில் எங்காவது உண்டா?
யாராவது பதிவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தை அத்தியாயம் அத்தியாயமாகத் தட்டச்சி வெளியிட்டுள்ளனரா?
எனக்கு தெரியவில்லை!
ஆனாலும்
இங்கு சென்று பாருங்களேன்!
ஒலி வடிவில் இணையத்தில் உலா வரும் அர்த்தமுள்ள இந்து மதம்
http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm
பதிவர்கள் யாராவது அத்தியாயம் அத்தியாயமாக வெளியிட்டால் அனைவரும் வாசித்து மகிழக் கூடியதாக இருக்குமல்லவா......
Post a Comment