ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தை பண்படுத்தும் சிறந்த கருவிகளாக பயன்பட்டு வருகின்றனர், என்று சொல்லுமளவு தங்களின் கற்றல்,கற்பித்தல் அனுபவத்தின் வாயிலாக மிகச்சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர்..!
ஆசிரியர்களிடமிருந்து பெற்ற கல்வியின் வாயிலாகத்தான் மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப வளர்ச்சியும்,எழுச்சியும் பெறமுடியும்!
கல்வி கற்றல் கல்வி கற்பித்தல் புனிதமான விஷயமாக கருதப்பட்டு, இறைவனுக்கு முதல் நிலையில் கற்பிக்கும் குரு அமர்த்தப்படுகிறார்!
இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என்றால் அதற்கு பதில் சொல்வது கொஞ்சம் சிரமமான காரியம் தான் ஏனெனில், நம் தமிழ்நாட்டை பொறுத்தளவில்,ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர் தொழில் மிக புனிதமான மாணவர்களை நேசிக்கும், ஆசிரியர்களாக,-தங்கள் பிள்ளைகளைப்போல் - ஒவ்வொரு மாணவனையும் அவனது திறமைக்கேற்ப பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக்க யாரும் அலுத்துக்கொண்டதுமில்லை!.
ஆனால் இன்றைய சூழல், அதற்கு நேர்மாறாக, ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமம கொடுத்து வேலை வாய்ப்பு வழங்கினாலும், பணி பெற்றவர்கள் அடுத்து,சிந்திப்பது தமக்கேற்ற வசதியான பணி இடமாக வேண்டுவதுதான், அதுவும் அரசியல்வியாதிகளின் தலையீடுகளுடன் என்பது மிக அதிகம்!
கிராமப்புற பள்ளிகளில் பணி பெறும் ஆசிரியர்,எப்பாடுப்பட்டாவது நகர எல்லைக்குள் பணியாற்ற விரும்புவது, தன் குடும்ப சுழலுக்கேற்ப பணி இடத்தை அமைத்துக்கொள்வது போன்ற விஷயங்களில்தான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் தமிழக அரசு அறிக்கை வெளியிடுமளவுக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து வேண்டுகோள் அதிகம் பெறப்பட்டுள்ளது, என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.!?
இன்று சர்வதேச ஆசிரியர் தினம் ஒவ்வொரு மனிதர்களையும் செயல்களையும் பெருமைப்படுத்தும் விதமாகவும், அனைவரும் அதன் அருமை பெருமைகள் நினைக்கவேண்டும் என்ற நோக்கில் கடைப்பிடிக்கப்படும் இன்னாளில் ஆசிரியர்களுக்கு தஙகளுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செயவதும் மூலம் வரும் தலைமுறைகளை, நல் சிந்தனைகள், நல்செயல்கள் ஈடுபட வழிகாட்டி நல்லதொரு சமுதாயமாக கலை,அறிவியல்,விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும்..!
அதை போன்று அரசும், நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப பாட திட்ட முறைகளில் மாற்றங்களையும், தனியார் சேவை அமைப்புகளின் உதவியுடன், ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்து,நடைமுறைக்கு தேவையான வகையில், பாட அமைப்புக்களில், கல்வியாளர்களை கொண்டு ஆலேசித்து, மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கவேண்டும் !
1 பேர் கமெண்டிட்டாங்க:
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் அடிப்படைக் கல்வித்தரத்தில்தான் தங்கியுள்ளது என்பதை மறந்து, ஆசிரியப் பணியும் ஒரு வருமானம் வருவிக்கும் மற்றுமோர் பணியாகிப் போனது வேதனைக்குரியது. - பகிர்ந்தமைக்கு நன்றி.
Post a Comment