எப்போதாவது, எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களை, நாம் விபத்து என்ற வார்த்தையில் வைத்து பேசமுடியும், ஆனால் தினசரி நடக்கும் விஷயங்களாகிவிட்ட, - கவனமற்ற, அதிவேகமான முறையில் வாகனத்தை நினைத்த இடத்திற்கு,நினைத்த மாதிரி - ஒட்டி செல்லுதல் ( கொல்லுதல்) எப்படி விபத்தாகமுடியும்? ஆனாலும், நடக்கிறது இந்த மாதிரியான விபத்துக்கள் நம் தலை நகர் டெல்லியில்!
நேற்று வரைக்கும் 96 பேர் பலியாகியுள்ளனர் இது போன்ற விபத்துக்களால்! டெய்லி பேப்பர்களில் தனி பக்கம் ஒதுக்கி இது போன்ற செய்திகள போடுற அளவுக்கு போயிடுச்சுன்னா பாருங்களேன்..!
போக்குவரத்து காவலர்களும், தங்களிடம்,கண்காணிக்கும் அளவு காவலர்கள் எண்ணிக்கையில்லைன்னு சொல்றாங்க..!
எல்லா கட்சி தலைகளும் இருக்கும் தலைநகரத்திலேயே இவ்ளோ பிரச்சனை!
அரசும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது சுமார் 8000க்கு ம் மேற்பட்ட டிரைவர்கள் இருந்தும் பங்கு கொண்டவர்கள் வெறும் 1500 பேர்தான்,சில பயிற்சி முகாம்களில் ஒருவருமே வரவில்லை!
ஒரு கட்டத்தில் போக்குவரத்து துறை அலுவலர்கள் இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்களை பணியிலிருந்து விடுவித்து,பயிற்சி பெற்று பின்னர் பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த அதற்கும் நோ ரெஸ்பான்ஸ்..!
கடுப்பாகிப்போன டெல்லி ஹைகோர்ட் உடனடியாக இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அவசரணை பிறப்பித்தது.
சரி இவ்ளோ விபத்துக்கள் நடக்க அங்க என்ன பிராப்ளம் யாராவது சூன்யம் வைச்சிட்டாங்களானா? (மர்ம மனிதன் சுத்தியல் கொலைக்காரன்னு ஏற்கனவே பீதியில இருக்குது டெல்லி!)
உண்மைதான்! மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள்தான் மக்களுக்கு சூன்யம் வைச்சது! பினாமிகள் பேருல பஸ்களை வாங்கி விட்டது மட்டுமல்ல, டெய்லி கலெக்ஷனுக்கும் ஒரு டார்கெட் வைக்க, ரூட் பிரச்சனையும் கிடையாது,வர்ற வருமானம் போகவேண்டிய இடத்துக்கெல்லாம் போய் சேர்ந்துடுது அப்புறம் யார் கேட்கப்போறான்னு? எவ்ளோ பேர வேணும்னாலும் ஏத்திக்கிட்டு போகலாம், எவ்ளோ தூரம் வேணுமுனாலும் போகலாம் அப்புறம் என்ன போட்டிதான் அதிகமாகியிருக்கு!
இப்ப போட்டி போட்டு,அப்பாவிகளோட உயிரை பறிச்சிக்கிட்டுருக்காங்க!
இன்றைய செய்தி!
இந்த பிரச்சனையிலும், பி.ஜே.பி பார்ட்டி எக்ஸ் மினிஸ்டரு விஜய் கோயல் நான் உண்மை நிலவரத்த முதல்வருக்கு நேரிலேயே காண்பிக்கிறேன்னு போயி, பஸ்ஸ ஒட்டி, இது மாதிரிதான் பயிற்சியே, இல்லாத ஆளுங்க சிட்டியில பஸ் ஒட்டிக்கிட்டு இருக்காங்கன்னு சொல்ல, பார்த்துக்கிட்டிருந்த போலீஸ் வாங்க, வந்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுங்கன்னு! அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டுப்போயிட்டாங்க...!
1 பேர் கமெண்டிட்டாங்க:
ரொம்ப நாளாக நடைபெறுகிறது :(
பத்தாண்டுகளுக்கு முன்பே அன்றாட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் முதற்பக்கந்தின் இடது மூலையில்
'நேற்று இறந்தவர்கள் - எத்தனை பேர்
விபத்துகளின் எண்ணிக்கை
கை/கால் இழந்தவர்கள்'
என்று முன்னிலைப்படுத்தியும், இன்றளவிலும் தொடர்கிறது
Post a Comment