எம்.ஜி.ஆர்...!

எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பினை,இணையத்தில் எனக்கு பிடித்தமான தமிழ் சினிமாக்களை தேடிக்கொண்டிருக்கும்போது கிடைத்தது,சினிமா கலை நிகழ்ச்சிகள், திருமணங்கள் டாக்டர் பட்டம் பெற்றதற்கு கலை விழா என காட்சிகள் வரும் இத்திரையில் சில
சுவையான காட்சிகளாக,.

பாரட்டுவிழாவில், கலை உலகினருக்கு முடிவில் முத்தாய்ப்பாக சொல்லும் “நல்ல படமா எடுங்க”

‘ஜல்லிகட்டு’ படத்தின் நூறாவது நாள் விழா எம்.ஜி.ஆரின் கடைசி விழாவில், முதலில் வரும் சிவாஜிக்கு முத்தமளிக்கும், எம்.ஜி.ஆர், அடுத்து வரும் நம்பியார் விருதை வாங்கி விட்டு கன்னத்தை காட்டி முத்தம் கேட்க,அதை மறுத்து அமரும் எம்.ஜி.ஆர், அதை பார்த்து,நட்பாக நம்பியார் முதுகில் தட்டும் சிவாஜி, முத்தம் வாங்கிய இன்ப அதிர்ச்சியுடன், செல்லும் நம்பியார்.

காணக்கிடைக்காத காட்சிகள்தானே...!

இறுதியில் வரும் முன்னாள் முதல்வர் கடைசி நேர காட்சிகள்,
மனேரமாவிற்கு ஆறுதல் கூறும் ராதிகா,அழுது கொண்டே செல்லும் விஜயகாந்த (எவ்ளோ சிலிம்மா இருக்காரு பாருங்க!)

கூடவே நிற்கும் எஸ்.முத்துசாமி (முன்னாள் அமைச்சர்) இவரு இப்ப காணாமல் போனவர்கள் லிஸ்ட்தானே அந்த கட்சியில..!?

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி!

வெரி டச்சிங்!

தலீவாஆஆஆஆஅ!