E - வேஸ்ட்..?

கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்கள், மொபைல் போன் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மிக்ஸி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் புதிதாக வந்துகொண்டே இருக்கும் உபயோகப்படுத்தி உதறிவிடும் பொருட்கள்

என ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் வாங்குவதென்றால் எல்லோருக்குமே ஆனந்தம்தான்!

கொஞ்சம் காலம் கழித்து,பழுதடைந்தாலோ அல்லது புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலோ அந்த பழைய பொருட்கள் பரணுக்கு சென்றுவிடும்.

இது தொடர்ந்துகொண்டே செல்லும்போது, அதை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் தெருக்குப்பையில் போட்டுவிடலாம் என்ற எண்ணம்தான் சராசரி மனிதனுக்கு தோன்றும்!

அதையேதான் இன்று பலரும் செய்துகொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு பின்னர் அந்த பொருட்களால் தாம் சார்ந்த சமூகத்துக்கு வரும் ஆபத்து பெரும்பாலும் யாரும் உணர்வதில்லை!

பாதரசம்,காரீயம் மற்றும் பிவிசியினால் செய்யப்பட்ட உதிரிபாகங்கள் பெரும்தீங்கு விளைவிக்ககூடிய பொருட்கள் உள்ளடக்கிய பழைய கம்யூட்டர்களுக்குத்தான் சுற்றுசுழலை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு!

Photo Sharing and Video Hosting at Photobucket


சரி இந்தியா அந்தளவுக்கா முன்னேறிடுச்சு! கம்யூட்டர தூக்கி போடற அளவுக்கு இங்க ஆள் இருக்கான்னுத்தானே கேட்கறீங்க?

அதுதான் இல்ல! இதிலும் நமக்கு ஆப்பு - வெளிநாடுகளிலிருந்து வாங்கி - வைச்சிக்கிறோம்!

நல்ல காசு கிடைக்கும்னு, கம்யூட்டர அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி, முக்கியமான பார்ட்கள எதாவது கடைக்காரனிடம் கொடுத்து, காசு வாங்கிகிட்டு, மீதியை மண்ணுக்குள்ள போட்டு புதைச்சிட்டுறோம், அல்லது எரிச்சிடுறோம்! அது அப்படியே மண்ணில தங்கி, மழை சமயங்களில், கொஞ்சம் கொஞ்சமாக, நிலத்தடி நீருக்கு போய் எமனுக்கு ஹெல்ப் பண்ணும் வேலையை வெகு சிரத்தையாக செய்து முடிக்கிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket



இந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும், ஏழ்மையின் காரணமாகவும், படிக்காதவர்களாகவும், இதன் பயங்கரம் அறியாதவர்களாகவும்தான் இருக்காங்க!

மறுசுழற்சி முறையில் இந்த பொருட்களை பயன்படுத்த சொல்லி பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது!

அரசு பிரச்சாரம் என்பது எப்போதும் அதிகம் எடுபடாதா விஷயம்தானே நம் நாட்டில்...?!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சுற்றுப்புறச் சூழல் கெட்டுவரும் இன்னேரத்தில், அவசியமான பதிவு!

சந்தேகமேயில்லாமல், இன்னும் கொஞ்சம் வருடங்களில், உலகம் ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் போகிறது! அதுவும் இந்தியா.... உதவி என்ற போர்வையில் வெளினாடுகளால் கழிக்கப்படும் ஈ-வேஸ்ட்டுகள் இந்தியாவையே மிரட்டப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், அபாயகரமான இந்தக் கழிவுகளைக் கையாளும் சகோதரர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

said...

நாட்டுக்கு தேவையான செய்தியயை சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி.