வந்த நாள் முதலாய்...!

24.09.2006

காலை 7.30 க்கு பிளைட், நாம இரண்டு மணி நேரம் முன்னாடியே போயிடணுமான்டா? வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற வெறியோடு பலரிடம், சேகரித்த தகவல்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் நண்பன் – அவனுக்கு மட்டும் வாய்ப்புகள் தட்டிச்சென்றது ஏன், என்று தெரியவில்லை?

சோப்பு, பவுடர் எல்லாம் அதிகமாவே எடுத்துக்கோ, அங்க பயங்கர விலை! விலைய பார்த்தா இதையெல்லாம் யூஸ் பண்ண்வே தோணாது என்ற நண்பனிடம்,அதனாலதானே அவங்க இந்த நாட்டு காச விட நாலு மடங்கு அதிகமா தராங்க! என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தான் மற்றெருவன்!

இந்த அலம்பல்களுக்கிடையே அரை மனத்துடன் அரபு நாட்டை நோக்கிய என் பயணத்தை ஆரம்பித்தேன் இத்தனைக்கும் எனக்கு அரபு நாட்டில் தான், சென்று பணிபுரிய வேண்டும் என்று கொள்கை வெறியொன்றும் கிடையாது!

என் நேரம், என் ஸ்பான்சரோட கெட்ட நேரம் அவ்வளவுதான்!
டெலிபோன் இண்டர்வீயுலேயே நான் ஒ.கே ஆக அடுத்த நாளே மெயிலில் மிதந்து வந்த ஆபர் லெட்டர பார்த்த முதல் கொஞ்சம் சந்தோஷம், என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது என் நண்பர்கள்தான்!

பஹரைன் வந்து வேறு பிளைட் மாறி வர வேண்டும் ஒண்ணும் பிரச்சனை இருக்காதுடா? நீ ஏர்போர்ட்ட விட்டு வெளிய போகமுடியாது! அதுவுமில்லாம, நீ எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்த கூட, அவங்களே வந்து அழைச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்ன தைரியம் தான்!

ஆனால் என் நேரம் கல்ப் ஏர்’ன் வழக்கமான சேவையின் படி அந்த பிளைட் ரத்தாகி அடுத்து 6 மணி நேரம் கழித்துதான் பிளைட்!

இது கல்ப் ஏரின் தந்திரமான நடவடிக்கைகளாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுங்களை சேர்த்து – அவர்களின் அட்டவணைப்படியான விமானத்தை,ரத்து செய்து மொத்தமாக ஒரு பிளைட்டில் போட்டு அள்ளிச்செல்கின்றனர்

முடிவில் வந்து இறங்கியாச்சு! கத்தாருக்கு! வரவேற்க கூட்டம் குழுமியிருக்கும் போது, வரவேற்க யாருமே இல்லாமல் யாரையும் பார்க்கவும்,தோணாமல் குனிந்து கொண்டே செல்லும் போது எல்லோருக்கு ஏற்படும் அனுபவமே அன்று எனக்கும் நிகழ்ந்தது!


எனக்கு தெரியும் கண்டிப்பாக யாரும் வந்திருக்கமாட்டர்கள் பிளைட் ரத்தானது தெரிந்திருக்காது என்பதால் !

வாசலில் வந்து அமரும்போது, ரிடர்ன் டிக்கெட்டோடு நாம் ஊருக்கே போக வாய்ப்பு இருந்தா போடா..! நீங்களும் உங்க வேலையும்ன்னு போய்க்கிட்டே இருக்கலாம்ன்னு, தோணுச்சு..!

கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு மந்தூப் என்று சொல்லப்படும் பி.ஆர்.ஒ வந்து சேர்ந்தார்! கையில் என் பெயரிட்ட பேப்பர் வைத்துகொண்டு
சென்று கொண்டிருந்தவரை நான் கண்டு பிடித்து அழைத்து வந்தேன்! பின் அவர் கொண்டு வந்து கம்பெனி குவார்ட்டர்ஸ்லில் விட்டுச்செல்ல,எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை திற்ந்து படுக்கைகளுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்த பெங்காலியும் விடைப்பெற்றுக்கொள்ள..,

அதுவரையிலும், எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்து அப்போதுதான் தெரிந்தது 24 மணி நேரத்திற்குள் சொந்தங்களிடமிருந்து, தனித்து விடப்பட்டது!
அப்படியே உட்கார்ந்து எதோ நினைத்துகொண்டிருந்தேன், வீட்டு ஞாபகம் மாறி மாறி வந்து கொண்டிருந்தது! இங்க நான் எப்படி இருக்கப்போறேன்
பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லையே! அந்த பெங்காலிக்கிட்ட பேசுறதுக்கும் இந்தி தெரியாதே!அப்போதுதான் பக்கத்து ரூமிலிருந்து,கதவு திறக்கும் சப்தம்!

நல்ல தூக்கத்திலிருந்து, முழித்தவாறு வந்த அந்த நண்பர் கேட்டார் - தமிழில்,

எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா?

கூட இருந்த மற்றொருவர் பழச்சாறு பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து,

எடுத்துங்கோங்க மாஸ்டர்...!!!

14 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

/எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா?/

I loved this.

Rumya

said...

வெளிநாடு வந்து ஒரு மாதம் வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு கோஷ்டி சேர்ந்து விடுகிறார்களே. அதற்குப்பிறகு ஆரம்பமாகுரது தான்.
(குடும்பத்துடன் இருப்பதால் அந்த பிரச்சினை இல்லை)

said...

//வித்யா கலைவாணி said...
அதற்குப் பிறகு கோஷ்டி சேர்ந்து விடுகிறார்களே. அதற்குப்பிறகு ஆரம்பமாகுரது தான்.//
குசும்பண்ணே! உங்க கும்மி மெம்பரு உங்க குரூப்பதானே சொல்றாங்க???????????

said...

ஆயில்யன் வந்து சேர்ந்து முதள் நாள் இரவு தூங்கி விட்டு காலையில் எழுந்து அம்மாவை தேடும் கண்கள், வீட்டில் இருக்க மாட்டோமா என்கிற உணர்வு ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும். கையில் மொத்தமாக 25,000 கிடைக்கும் பொழுது எல்லாம் இதுக்காகதானே என்ற ஒரு வெறுப்பும் கொஞ்சமாக சந்தோசமும் வரும்...இதோ போய்விடலாம் போய்விடலாம் என்று வருடம் மட்டும்தான் ஓடிக்கிட்டு இருக்கும்:((((

said...

"பிறகு கோஷ்டி சேர்ந்து விடுகிறார்களே. அதற்குப்பிறகு ஆரம்பமாகுரது தான்."

ஒரு கோஷ்டியும் கிடையாதுங்க ஆயில்யன்:(

said...

நாங்க எல்லாம் சேலத்தில இருந்து சென்னைக்கு காலேஜ் படிக்க வந்ததுக்கே ஹாஸ்டல் ரூமுக்குள்ளே உக்காந்து அழுதவங்க.நல்ல கட்டுரை.நம் அனுபவங்கள் நம்மை விட இனிமையானவை.

said...

//இதோ போய்விடலாம் போய்விடலாம் என்று வருடம் மட்டும்தான் ஓடிக்கிட்டு இருக்கும்//
ஆமாங்க நிறையா பேரு சும்மா கேசுவலா நான் இங்க வந்து ஒரு 20 வருஷம் இருக்கும்னு சொல்றத கேக்கும்போது! அதிர்ச்சி+ ஆச்சர்ய்ம்தான்!

said...

HOME SICK.

இது ஃபாரின்னு இல்லை வீட்டை விட்டு வெளியே தனியா தங்கி வேலைபாக்கிற படிக்கிற எல்லாருக்கும் இருக்கிறதுதான்.

என்ன ஒன்னு இங்க இந்தியாக்குள்ளவே இருந்துட்டா வருசத்துல ஒரு 4, 5 தடவை ஊருக்கு போயிட்டு வரலாம் அப்புறம் டெய்லி பேசினாலும் போன் பில் உங்க அளவுக்கு வராது.

கொஞ்சம் நாளானா சரியாபோயிடும்.

நான் வேலைக்கு வந்து தனியாக இருந்த புதிதில் தனியா உக்காந்து சாப்பிடறப்ப கொடுமையா இருந்தது.

இதுக்காகவே டிவி பாத்துகிட்டே சாப்பிடுவேன் . யாரோ இன்னொருத்தர் நம்ம கூட பேசிகிட்டு இருக்க மாதிரி ஒரு பீல் இருக்கும். இப்ப பழகிடிச்சி.

said...

//
ஆமாங்க நிறையா பேரு சும்மா கேசுவலா நான் இங்க வந்து ஒரு 20 வருஷம் இருக்கும்னு சொல்றத கேக்கும்போது! அதிர்ச்சி+ ஆச்சர்ய்ம்தான்!
//
நான் வீட்டை விட்டு வேலைக்கு வந்து 10 வருசம் ஆச்சி.

said...

செல்வம் said...
//நாங்க எல்லாம் சேலத்தில இருந்து சென்னைக்கு காலேஜ் படிக்க வந்ததுக்கே ஹாஸ்டல் ரூமுக்குள்ளே உக்காந்து அழுதவங்க.//

ரிப்பீட்டு.....

said...

வெளிநாடு செல்பவர்கள் மட்டுமா தனிமையில் வாடுகிறார்கள். அவர்களை பிரிந்து,வீட்டில் இருப்பவர்களும் தான்.குறிப்பாக குழந்தைகள். எனது தோழிகளில் சிலரின் அப்பாகள் அரேபிய நாடுகளில் பொறியாளராக உள்ளனர்.அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வருவார்கள்.அந்த 20 அல்லது 30 நாட்களும் தோழிகளை கையில் பிடிக்கமுடியாது(செல்போனிலும் தான்).

Madhan said...

குசும்பன் said...

ஆயில்யன் வந்து சேர்ந்து முதள் நாள் இரவு தூங்கி விட்டு காலையில் எழுந்து அம்மாவை தேடும் கண்கள், வீட்டில் இருக்க மாட்டோமா என்கிற உணர்வு ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும். கையில் மொத்தமாக 25,000 கிடைக்கும் பொழுது எல்லாம் இதுக்காகதானே என்ற ஒரு வெறுப்பும் கொஞ்சமாக சந்தோசமும் வரும்...இதோ போய்விடலாம் போய்விடலாம் என்று வருடம் மட்டும்தான் ஓடிக்கிட்டு இருக்கும்((Same Blood!!!!!!

said...

அயலகம் செல்லும் அனைவரின் அனுபவங்களும் இதுதான். ஆனால் இது நிரந்தரமில்லை. வேலை நிரந்தரமாகி, கை நிறைய பணம் புரளும் போது, குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வந்தவுடன், பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும்.

said...

// cheena (சீனா) said... குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வந்தவுடன், பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும்.//
அந்த பாக்கியம் பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லையே?