டெல்லி செங்கோட்டை எங்களுக்கே…!


இந்திய முகலாய வம்சத்தின் கடைசி மன்னராக – உருது கவிஞர் - இருந்தவர் அபு ஸஃபார் சிராஜீதின் முகம்மது பகதூர் ஷா ஸஃபார்

Photo Sharing and Video Hosting at Photobucket

இரண்டாம் அக்பர் ஷாவிற்கும் இந்துபெண்ணான லால்பாய்க்கும் பிறந்த மகன்.

1857ல் நிகழ்ந்த கலக புரட்சியில் சிப்பாய்களால் டெல்லி கைப்பற்றப்பட்டு, அங்கு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவான அரசராக அனைத்து குறு நிலமன்னர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்

சிப்பாய்கள் போராட்டம் முறியடுக்கப்பட்டபோது, ஹுமாயுன்னின் கல்லறைக்கு சென்று ஒளிந்திருந்தவரை பிரிட்டிஷ் படையினர் பிடித்து,அதற்கான தண்டனையை அவரது இரு மகன்களுக்கும் ஒரு பேரனுக்கும் தருகிறார்கள், எப்படிப்பட்ட தண்டனை தெரியுமா?

மூவரின் தலையை கொய்து அதை உணவுத்தட்டில் வைத்து தருகின்றனர் பகதூர் ஷாவிற்கு!

இந்த காரியங்கள் முடிந்து ஆட்சியிலிருந்து விலகும்முகமாக பிரிட்டிஷ் படையினால் கைது செய்யப்பட்டு 1858ல் மியான்மார் யாங்கூனிற்கு நாடு கடத்தப்பட்டு, கடைசியில் 1862ல் மரணத்தை தழுவுகிறார்!

பாபரால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய முகலாய வம்சத்தின் அரசாட்சி இவரால் முடித்துவைக்கப்படுகிறது!

சரி என்னடா திடீருன்னு இவரப்பத்தின்னு.. யோசிக்கிறீங்களா?

இருக்கே சங்கதி...!

Photo Sharing and Video Hosting at Photobucket


இவருடைய கொள்ளுப்பேரனுக்கும் பேத்திமுறை பொண்ணு, தற்போது கொஞ்சம் கடினமான சூழ்நிலையில் இந்திய அரசு தங்கள் குடும்பத்திற்கு சரியான முறையில் நிதியுதவி அளிக்கவில்லைன்னு சொல்லியிருக்காங்க!

உண்மையிலேயே கொடுமையன விஷயம்தாங்க 1920ல ரூ 10 உத்வித்தொகையாக கொடுத்த அரசு,அப்புறம் ரூ6 கூட்டி இப்ப ரொம்ப தாராள மனசோட ரூபாய் 400 கொடுக்குதாம்! இந்த அரசு கொடுத்துவரும் உதவித்தொகையை,மாற்றி கொடுக்கணும் இல்ல, அட்லீஸ்ட் டெல்லியிலுள்ள செங்கோட்டை எங்களுடைய குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட சொத்து சொல்லி அதற்குண்டான நஷ்ட ஈட்டையாவது கொடுக்கணுமுனு சொல்லி வழக்கு தொடர போறாராம்!

Photo Sharing and Video Hosting at Photobucket

மியான்மார் யாங்கூனில் இருக்கும் பகதூர் ஷாவின் கல்லறை மசூதி

1 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று வழக்கு தொடுக்கச் சொல்லுங்கள் அவர்களிடம். உடனே மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துவிடும். பொது மக்களுக்காகத்தானே நீதிமன்றங்கள் பணிபுரிகின்றன. (ஸ்மைலி எதுவும் இல்லை)