பயணத்தில் நான்....!நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?

24 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,
ஒன்று மட்டும் உறுதியாகிறது.
போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;///
//இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!//
வாருங்கள் பயணங்கள் அனைத்தும் வெற்றியே! :)

said...

ரைட்டு சூப்பர்!! இன்னைக்கு ஆட்டத்த ஆரம்பிக்க ஒரு இடம் கிடைச்சாச்சு:)

தனி பதிவா போட்டு கும்மி அடிக்கதான் மனசு சொல்கிறது ஆனா இந்த கை கேட்க மாட்டேங்கிறது.:)

said...

பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?//

சைடில் இருப்பது எல்லாம் தென்னை மரம் ஆகையால் வேண்டும் என்றால் ரெண்டு ரெண்டு தேங்காய் உங்க மேலே உதிரும் ஓக்கேவா?:)

said...

போட்டோ எடுக்கும் முன்பு வெச்சு நொங்கு நொங்குன்னு நொங்கிட்டு அதன் பிறகு பூ வெச்சு பொட்டு வெச்சு எடுத்த போட்டோ மாதிரி இருக்கு? அப்படி என்னா தப்பு செஞ்சீங்க?

said...

வித்யா கலைவாணி said...

வாருங்கள் பயணங்கள் அனைத்தும் வெற்றியே! :)///

பயணம் என்றால் டூர் சரியா?

டூர் எல்லாம் வெற்றியாக நீங்க என்னா ஆஸ்திரேலியா டீமா வித்யா?

said...

யாருமில்லா இருபக்கங்களில்
யாரை நான் கூப்பிடுவேன்!
யாரை நான் கும்பிடுவேன்!///

யாரும் இல்லைன்னு தெரியுதுல்ல அப்புறம் எப்படி கூப்பிட முடியும்!!!

ஒரு பேர் இருக்கு "சரவணன்"

யாமிருக்கு பயம் ஏன்! இந்த சரவணன் இருக்க பயம் ஏன்:)

said...

//நொங்கு நொங்குன்னு நொங்கிட்டு அதன் பிறகு பூ வெச்சு பொட்டு வெச்சு எடுத்த போட்டோ மாதிரி //
பாதிகதைய நீங்க சொல்லிட்ட அப்புறம் நான் எப்படி இந்த வாரத்த ஒட்றது

said...

பிறந்த ஊர் மயிலாடுதுறை கடகம் தானே, ஆயில்யன்?

said...

ஆஹா, என்னமா இருக்கு கவிதை சூப்பரப்பா,, படம் இன்னும் நல்லா இருக்கு!(வந்துடுவீங்களே அபிஅப்பா கவிதை படிக்காம பின்னூட்டம் போடுறார்ன்னு):-))

said...

ஊர் செய்தி எல்லாம் போடுப்பா அடுத்த அடுத்த பதிவிலே! சரி, போட்டோவிலே நீங்க்கலா? குசும்பன் சொன்ன மாதிரி சரியா நொங்கு எடுத்து போட்டோ பிடிச்சாங்க போல இர்ருக்கே:-)))எந்த ஸ்டுடியோ மஞ்சுவா,கெம்புவா?கோல்டனா,குரு ஸ்ஸ்டுடியோவா?

said...

Simply superb!

idhaththaan edhirpaarthom! :)

said...

fantastic.. result as expected. :) well done


post photography work... might improve it much better. try it out.

said...

போட்டி கவிதைக்கா அல்லது படத்துக்கா?நொங்கீட்டீங்க!

said...

//பாதையில் வரும் மரங்களாவது,
என் மீது மலர்களை உதிருமா..?//

உதிருமாvaa? pozhiyum! kavalai padaatheenga. Wish you good luck!

btw, is this for PugaipadapOtti or for kavithaippOtti too?

said...

என்னுள்ளே...!
என்னுள்ளே...!
ஏதேதோ செய்கிறது..!
அப்பன்ன்னா நானும் கவிஞராஆஆஆஆஆஆஆ...!?!?!?

(என்னைய வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே ஏன்னா "என்னம்மா இருக்கு கவிதைன்னு" ஆரம்பிச்சது அபி அப்பா!?)

said...

கவிதை அருமை.

பாதையே மலர்களால் வேண்டாம் - பாதையில் வரும் மரங்களாவது என் மீது மலர்களை உதிர்க்குமா ??

நிச்சயம் உதிர்க்கும். கவலை வேண்டாம். வாழ்த்துகள்

said...

//post photography work... might improve it much better. try it outஎனது முயற்சி.


ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்துங்கள்

படங்களை எடுத்து விடுகிறேன். உங்களின் பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

said...

yerkanave sollittaalum, once more solren - excellent.
price worthy shot :)


An&, touch-up is really really good - but, 'after' looks like a painting now. reduce the touch-up a bit :)

said...

nice picture, post production will make it even better , some little adjustment in brightness and contrast will show the colors even richer best of luck.

said...

டிப்பிகல் கிராமத்து சாலை

நல்லா இருக்கு

வாழ்த்துக்கள் :)

said...

மாயவரத்தில எடுத்ததுங்களா? எந்த நாட்டுக்குப் போனாலும் நம்ம சோழ நாடு மாதிரி வராது... :-)

Anonymous said...

இந்தப் படம் வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ?

said...

//இந்தப் படம் வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ?//

பார்த்திருக்கலாம்! உங்கள் கேள்விக்கான விடையை கூட எனது பதிவில்....!!!

said...

டியர் அனானி பிரதர் நீங்க யாருன்னு? நான் தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நிறைய படங்களோட ஒரு பதிவு போட்டு உங்களோட சந்தேகத்த நீக்க முடியும்னு நான் நினைக்கிறேன்! நீங்க..?