நான் அப்பவே சொன்னேன்ல..!

சில வருடங்களுக்கு முன்பு, பலர் ஆர்வமுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்த,விஷயம்தான் கூகுளின் எர்த.

எந்த மூலையில் இருந்தும் நாம் நினைக்கும் இடத்தின் வரைபடத்தை மிக துல்லியமாக பார்க்க இயலும்!

சாலைகள், ரயில்வே, மற்றும் நீர் வழித்தடங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும், ரொம்ப கிட்டத்தில் பார்த்தால் எப்படியிருக்குமே? அப்படியே இணையத்தில் காண முடிந்தது!

ஆனால் இந்த படங்களை இப்படி காண்பது பல நாடுகளுக்கு கவலையளிக்கும் விஷயமாக காட்சியளித்தது! அதுவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ள நாடுகளில்,தீவிரவாத செயல்களுக்கு ரொம்ப துல்லியமான தகவல்களை இந்த கூகுளின் எர்த மூலமே பெறமுடியும் எனபதும் அதிர்ச்சியளிக்ககூடியதாக இருந்தது!

இது சம்பந்தமாக இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எச்சரிதிருந்தாராம்!

சில நாட்களுக்கு, முன்பு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் காஸா முனையில் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலுக்கு, தாங்கள் கூகுள் எர்த்தையே பயன்படுத்தியதாக படு அசத்தலாக பேட்டியும் கொடுத்துள்ளார்கள்! அதுக்கப்புறம் தான் இப்ப கொஞ்சம் பரபரப்பாகியிருக்கு!

அதே நேரத்தில கலிபோர்னியாவில எரிஞ்சுக்கிட்டிருக்கிற காட்டு தீயையும் போட்டோ எடுத்து,அதன்மூலமா மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு வர்றாங்க!

ஒரு வழியில் மிக்க உபயோகமானதாக இருந்தாலும், தீவிரவாதிகள் கையில் கிடைத்து,ரொம்ப ஈஸியாக இருந்த இடத்திலேர்ந்தே வேலைய முடிச்சிக்கிட்டாங்கன்னா என்னா ஆவும்?

நினைச்சு பார்க்கவே திக்குன்னு இருக்கு!

எங்க நல்ல நேரம் எங்க ஊர மட்டும் துல்லியமா பார்க்க முடியாதபடி கூகுளில் இருக்கு அதனால நாங்க தப்பிச்சோம்! (அது சரி எங்க ஊருக்கு எதுக்கு இவ்ளோ செக்யூரிட்டின்னு கேட்கறீங்களா? அபி அப்பா மாதிரி ரொம்ப பேரேட சொந்த ஊருக்கு பாதுகாப்பு வேணாமா?)

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நீங்க சொன்னது சரிதான்... கூகில் எர்த் மூலம் நினைக்கும் இடத்தின் வரைபடத்தை துல்லியமாக பார்க்க முடியும். அதற்காக, பாலஸ்தீன போராளிகளை தீவிரவாதிகள் என்பதா? அப்போ நம்ம சுதந்தரப்போராட்டத்தை ஆயுதமேந்தி நடத்திய நேதாஜி, பகத் சிங், கட்டபொம்மன் ஆகியோரும் தீவிரவாதிகளா? பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டை அபகரித்த யூதர்களை எதிர்த்து தமது வழியில் போராடுகிறார்கள். அதனை ஆதரிக்காவிடினும் தீவிரவாதிகள் என்று கொச்சைப்படுத்தாமல் இருக்கலாமே...!