ஓய்விலா உழைப்பால் திணறும் டெல்லி..!

ஓய்வில்லாமல் உழைப்பவர்களால் திணறாமல் நல்ல வாழ்க்கைதானே வாழ முடியும்! பிறகு டெல்லியில் எதற்கு திணறுகிறார்கள் என்று யோசிக்காதீங்க!பிச்சைக்காரர்கள்

ஓய்வின்றி உழைக்கிற இந்த ஆட்களால மத்தவங்களுக்கு நிறைய தொந்தரவுகள் அதைவிட காவல்துறைக்கும், தலைநகர் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களால் மண்டையிடி அதிகம் தானாம்!

அக்கம்பக்கத்து மாநிலங்களிலிருந்து வேலையின்றி வரும் மக்கள் அல்ல்து அங்க செஞ்சுக்கிட்டிருந்த வேலையை டிரான்ஸ்பர் பண்ணிக்கிட்டு வருபவர்களை கட்டுபடுத்த முடியாம தலைநகரம் த்டுமாறிக்கிட்டிருக்காம்!கணக்கெடுக்க முடியாதபடி தினமும், வந்து இறங்கிக்கிட்டுதான் இருக்காங்களாம்! ஒரு குத்து மதிப்பா, அம்பதுலேர்ந்து எழுபத்தி அஞ்சாயிரத்துக்குள்ள இருப்பாங்களாம்! (யம்மாடியேவ்!)

2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைப்பெற இருக்கும் இச்சூழலில் டெல்லி அரசாங்கத்திடம், விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளவர்கள் பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வேண்டி, முறையிட ஆரம்பித்துள்ளார்கள்!

டெல்லி அரசாங்கமும் ஏற்கனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிச்சை எடுப்பவர்களை கைது செய்து, மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து, அவர்களுக்கு வேண்டிய, உணவு, இருப்பிட மருத்துவசதிகளுடன், மீண்டும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு, சுய தொழில் செய்வதற்குரிய அனைத்து பயிற்சிக்ளையும் தருகிறது!

எல்லா முயற்சிகளுமே பாழ்..! என்பது போல, ஏகசந்தோஷமாக இவற்றை சில காலங்கள் அனுபவித்துவிட்டு, திரும்ப நார்மல் வாழ்க்கைக்கு திரும்பவர்களே( பிச்சை எடுக்க) அதிகமாம்!

எதுக்கு வெயில் மழையில அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக்கணும் அதான் கவர்ன்மெண்டே எல்லா வசதியும் செஞ்சு தருதுல்லன்னு மறுவாழ்வு மையத்திலேயே தங்கிடறாங்களும் இன்னும் சிலர்! – ரொம்ப பயங்கரமான சோம்பேறிகள் போல...!!!!???

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எதுக்கு வெயில் மழையில அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக்கணும் அதான் கவர்ன்மெண்டே எல்லா வசதியும் செஞ்சு தருதுல்லன்னு மறுவாழ்வு மையத்திலேயே தங்கிடறாங்களும் இன்னும் சிலர்! – ரொம்ப பயங்கரமான சோம்பேறிகள் போல...!!!!???/////


பழக்கிட்டா அதில் இருந்து வெளியே வர முடியாது!!!

said...

ஆயில்யன்

ஒரு தடவை ஒரு 17 , 18 வயசு பொண்ண பார்த்து கேட்டேன், ஏன் பிச்சை எடுக்குறே, நான் சில தொண்டு நிறுவணங்கள் முகவரி தர்ரேன், நீ அங்க போனா ஏதாவது ஒரு தொழில் கத்துக் குடுப்பாங்க ன்னு. அதுக்கு அந்த பொண்ணு இப்ப நான் ஒரு நாளைக்கு 150, 200 ரூபாய் சம்பாதிக்குறேன், இது அங்க போனா கிடைக்குமா, இத விட வசதியான வேலை ஒன்னும் இல்லைனு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி (பிச்சை போட வக்கில்லாதவள பார்க்குற மாதிரி..:-)) பார்த்துட்டு போயிட்டா... இதுல பருவ வயதுடைய பெண்களுக்கு வேற மாதிரி பிரச்சனைகளும் இருக்கு...

said...

மங்கை சொன்னது சரிதான். பிச்சையில் கிடைப்பது அதிகம் தான்.