நட்சத்திரங்களாய் எழுகவே...!!!

சிவாஜியில,அமெரிக்காவிலிருந்து வரும் ரஜினியிடம் விவேக் சொல்வார் எல்லாமே மாறி சென்னை இப்ப சிங்கார சென்னையாயிடிச்சுப்பான்னு!
அப்ப ஒரு பொண்ணு கையில் குழந்தைய வைச்சிக்கிட்டு பிச்சை கேட்கும் ,எல்லாமே மாறிடுச்சி ஆனா இது மட்டும் மாறலையேன்னு ரஜினி பீல் பண்ணுவாரு!

இதே காட்சிதான் நிஜத்திலயும்! ஆனா ரஜினிக்கு பதிலா பத்மான்னு ஒரு பெண்மணி அமெரிக்க்விலிருந்து திரும்பும் இவருக்கும் இதே காட்சிகள்! பெரும்பாலும் இவர் கண்ணில் பட்டவர்கள் பிச்சைக்காரர்கள் அதுவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு வீடு வசதியின்றி அலைந்து திரிந்து பிச்சையெடுப்பவர்கள்தான்!

மனதில் மிகுந்த யோசனைகளேடு ஒரு நாள் சமையறையில் தன் நண்பிகளுடன் இது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தவருக்கும் மனதில் உதயமானதுதான் – உதித்ததுதான் நட்சத்திரம் RISING STAR



சாதரணமாக கல்வி சம்பந்தமாக பண உதவி தேவைப்படுவோர்ருக்கு வழங்குவது என ஆரம்பித்து,பின்னர் குழந்தைகளுக்கு அதுவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இருப்பிட வசதி கல்வி வ்சதி அமைத்து 18 வயது வரையிலும்,அவர்களின் விருப்பத்தின்படி கல்வி கற்று செல்லும் வகையில் அமைப்பை ஏற்படுத்தினர்!

பின்னர் சில வருடங்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் பொருட்டு,சுய தொழில் செய்யும் வகையில் உபகரணங்களை கொடுத்து,அவர்கள் தம் வாழ்க்கையை நேர்த்தியாக்கிகொள்ள உதவி செய்ய ஆரம்பித்தனர் இவ்வமைப்பினர்!

சேவை தொடர்கிறது....!

சில செய்திகளை பார்க்கும்போது மனம் அழுகிறது!
சில காட்சிகளை பார்க்கும்போது மனம் வலிக்கிறது!

சில சமயங்களில் நம்மை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டால் மனம் நிறையுமோ...????


வாழும் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்குமோ...????

குறிப்பு:-இந்த அமைப்பினை நிறுவி, சமூக சேவைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட பத்மாவின் தந்தை ஆர்.வெங்கட்ராமன் முன்னாள் இந்தியா குடியரசு தலைவர் - தமிழ்நாடு



4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நீங்க கொடுத்த லிங்கில் போய் பார்த்தேன் ஏனோ தெரியவில்லை மனசு கணத்துவிட்டது, பக்கதில் செல்லவே நாம் அருவருப்பு படுவோம் ஆனால் அவுங்க தொட்டு அரவனைத்து.ம்ம்ம் ரொம்ப பெரிய மனசு வேண்டும்.

said...

நிஜத்தில் நடக்கின்ற இந்த விசயத்திற்கு ரைசிங் ஸ்டார்ன்னு வச்சது ரொம்ப நல்ல பேரு..அவர்கள் தொண்டு நல்லபடியா தொடரட்டும்..
கடைசியில் கேட்டிருக்கும் இரு கேள்விகளும் மிகமிக உண்மையானது யாராவது ஒருவருக்கு உதவி செய்தாலே மனம் நிறைவதை உணர்வீர்கள்.

said...

//நிஜத்தில் நடக்கின்ற இந்த விசயத்திற்கு ரைசிங் ஸ்டார்ன்னு வச்சது ரொம்ப நல்ல பேரு..அவர்கள் தொண்டு நல்லபடியா தொடரட்டும்..
கடைசியில் கேட்டிருக்கும் இரு கேள்விகளும் மிகமிக உண்மையானது யாராவது ஒருவருக்கு உதவி செய்தாலே மனம் நிறைவதை உணர்வீர்கள்.//
நானும் இதை வழிமொழிகிறேன்.

said...

நட்சத்திர வாரத்தில் நிறைவான பதிவு. வாழ்த்துக்கள்.