கக்கூஸ்

ரொம்ப..

ரொம்ப…,

அவசியமான விஷயம்தான் !

ஆனா பாருங்க!

நம்ம நாட்ல இதுக்கு கொடுக்கற முக்கியத்துவம்

ரொம்ப..

ரொம்ப...

குறைச்ச கக்கூஸ் வசதி இல்லாததால சுமார் 70 கோடி பப்ளிக்கு, பப்ளிக்கா இருக்கறாங்கன்னு ஒரு சேதி!

Photo Sharing and Video Hosting at Photobucket


அரசும் அலசி ஆராய்ந்து இதுக்கு ஒரு முடிவு கட்டணுமுனு, பஞ்சாயத்துக்கள் மூலமா கக்கூஸ் கட்ட, பிரச்சாரம் பண்ண நிதிகள அள்ளிகொடுக்குது ஆனா பாருங்க!

இவ்வொரு பஞ்சாயத்து பில்டிங்ல பெரிய படத்த மட்டும் வரைஞ்சு பிரச்சார நிதியை “நல்லா” செலவழிச்சிருப்பாங்க!

(பஞ்சாயத்து பில்டிங்கு பக்கத்துல உக்காந்துக்கிட்டு, அந்த படத்த பார்த்து இன்னாது இது? கேட்கற ஆளுங்களும் இன்னமும் இருக்கு!)

பொதுவா போய் உக்காரதால ரொம்ப மோசமா சுற்றுசுழல் பாதிக்கப்படுதுன்னு சொல்லி, இத தடுக்கணும் மக்களுக்கு விழிப்புணர்வு வர்ற வைக்கணுமுனு முடிவு கட்டிக்கிட்டு ஒரு அமைப்பு இயங்கிக்கிட்டிருக்கு(ஆச்சர்யமா இருக்கா!?)

வர்ற 31ந்தேதி டெல்லியில ஒரு மீட் போட்டு, இன்னும் என்னா செய்யலாமுணு அலசி ஆராயப்போறாங்களாம்! அவங்க எடுக்கற முடிவ இவங்க(அரசியல்வாதிகள்தான்) நல்லபடியா நிறைவேத்தணும்னு நாம் ஆள்பவனைத்தான் வேண்டனும்!

இந்த மீட்ல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம தமிழ்நாட்டு பொண்ணு ஒண்ணுக்கு இந்த மீட்டிங்கல விருது கொடுத்து பெருமைப்படுத்தப்போறாங்களாம்!

நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் மாசா நஸிம் 2005 ல ரயில்களில் பயன்படுத்துவதற்காக வேண்டி ஒரு கக்கூஸை டிசைன் பண்ணி அறிவியல் கண்காட்சியில டெமோ பண்ணி பலரது பாராட்டையும்,முதல் பரிசையும் வாங்கியவரை நம்ம அப்துல் கலாமும் பாரட்டி சில யோசனைகளையும் கூறியிருந்தாராம்!

Photo Sharing and Video Hosting at Photobucket



இப்ப டிரெயின்களில் தனியா கக்கூஸ் இருந்தாலும், தண்டவாளங்கள்தான் நாசமா போயி, அருவருக்கதக்க வகையில் இருக்குது! (உண்மையிலேயே பாவம் அந்த கேங்மேன்கள் எனச்சொல்லப்படும் தண்டவாளங்களை சோதிப்பவர்கள்

இந்த பொண்ணு சொல்ற டிசைன் படி அப்படியே கக்கூஸ்களிலிருந்து கழிவுகளை, ஒவ்வொரு ஸ்டேஷன்களில் மட்டும் வெளியேற்றி,அதை சுகாதாரமான முறையில் அங்கிருந்தும் வெளியேற்றிவிடலாம்முனு சொல்லியிருக்காங்க! இது நடந்தது 2005லயே..!

அதை ரயில்வே நிர்வாகமும் தொழில்நுட்ப அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டாலும், இதுவரையில் அமல்படுத்தவில்லை – அமல்படுத்துவாங்க...!!!??

(டிரெயின்னாலே எப்பவும் லேட்டுதானே!)

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//டிரெயின்னாலே எப்பவும் லேட்டுதானே!//

ட்ரெயினுக்கு மட்டும்தான் லேட்டுங்க. அந்த "அது" மட்டும் எப்பவும் நேரத்துக்கு வந்துடுமில்லையோ?

அதற்கு என்ன செய்யறது?

;-D

நல்ல பதிவு நன்றி ஆயில்யன்.