வர்றாரு! வீரப்பன்.!

சந்தனமரம்ன்னு சொன்னா, வீரப்பன்னு இப்ப இருக்கும் சமுதாயமும் சரி, இனி வரும் சமுதாயமும், டக்குன்னு ஞாபகத்துக்கு கொண்டுவந்துடும்! ரசிகர்மன்றம் அமைக்காத குறையாத்தான் இருந்துச்சு அவரு புகழ்..!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஆனா இப்ப, நிலைமை வேற, ரொம்ப ஏழையான குடும்பத்தில பொறந்து சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றி,காட்டு ராஜாவா வாழ்ந்த வீரப்பனை பற்றி மிருகங்களே பயந்த மனிதன்,எல்லா மிருக பாஷையும் தெரியும்,நல்ல மனிதாபிமானி, தமிழ்ப்பற்று மிக்கவன் போன்ற பல செய்திகளில் புகழாரம் சூட்டப்பட்டு ஆர்கெட் கம்யூனிட்டியில உலாவிக்கிட்டிருக்காரு!

அவன் இருந்திருந்தா முல்லை பெரியாறு மேட்டரே கிளம்பியிருக்காது! அதுவுமில்லாம இப்ப அதிகமா நடக்குற சந்தன மர கடத்தலும் நடக்காம இருந்திருக்கும் போன்ற வசனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் டிவியில் வீரப்பன் பற்றிய ஒரு தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்ப தயாராகிக்கொண்டிருக்கிறது, சுமார் 125 வாரங்களை கடக்க உள்ள இந்த தொடரில் வீரப்பனின் மறுபக்கம் தெளிவாக்கப்படக்கூடும் என்றும்,சிறப்பு அதிரடிப்படையின் மறுபக்கம் தெரிவிக்கப்படக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன! கடந்த மூன்று வருடங்களாக வீரப்பன் பற்றி சேகரித்த தகவல்களை கொண்டு இத்தொடர் தயாரிக்கப்பட்டிருக்கு,வர்ற அக்டோபர் 15 முதல் இது ஆரம்பமாகும் டைரக்டர் சொல்லியிருக்காரு!

ஆனா,வீரப்பன் மனைவியோ,டைரக்டர் எங்களை ஏமாத்தி, எங்களுக்கு தெரியாம நாங்க பேசுனத, டேப் பண்ணி அத இப்ப தொடர எடுத்து வெளியிடப்போறதா சொல்றாரு, ஆனா அந்த தொடர் வந்தா என் மகள்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவார்கள், எனவே அதை தடுத்து நிறுத்த நான் கோர்ட்டுக்கு போகப்போறேன் சொல்ல, மேட்டர் இப்ப கொஞ்சம் விறுவிறுப்பாகியிருக்கு!

எப்படியிருந்தாலும் டிவி தொடர்கள் பைத்தியங்களுக்கு ஒரு சீரியல் ரெடியாயிடுச்சிங்கறது முக்கியமான மேட்டர்தானே..!

0 பேர் கமெண்டிட்டாங்க: