ஆத்தா நான் லூசாயிட்டேன்...!

உன் குரலை மட்டுமே கேட்க

வேண்டாமென என் இரு செவிகளிலும்

ரெண்டு ரோல் பஞ்சினை வைத்தேன் என்றதற்கு

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல்

தான் பேசிக்கொண்டிருந்ததை கேக்கவில்லையே

என்று என்னை டெரராய் அடித்தாயே!நாம் சந்தித்த இடங்களில்

நீ இல்லாத நாட்களில்

நான் நன்றாக இருந்தேன்

நிம்மதியாக இருந்தேன் என்றதற்கு

என்னுடன் பேசாமல் நிம்மதியாக இருந்தாயா?

என்று என்னை டெரராய் அடித்தாயே!
பிறந்ததில் இருந்து

நீ இத்தனை அழகா

என்று நான் ச்சும்மா கேட்டதற்கு

கண்ணாடியில் எனை காணாததால்

வந்த அழகு இது என

தைரியமாய் சொன்னாயே!

பைத்தியமடி நீ எனக்கு!

பைத்தியமானேன் நான் எனக்குள்!டிஸ்கி:- இங்க படிச்ச பாதிப்புத்தான் என்னிய மன்னிச்சுடுங்க நாணல் அக்கா :)

29 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஹா ஹா கலக்கல் எதிர் கவுஜ!!!

said...

ஆஆஆஆஆஆஆஆ!!

said...

//
பிறந்ததில் இருந்து

நீ இத்தனை அழகா

என்று நான் ச்சும்மா கேட்டதற்கு

கண்ணாடியில் எனை காணாததால்

வந்த அழகு இது என

தைரியமாய் சொன்னாயே!//

எப்படி இப்படில்லாம்? டெர்ரா இருக்கே !

//உன் குரலை மட்டுமே கேட்க

வேண்டாமென என் இரு செவிகளிலும்

ரெண்டு ரோல் பஞ்சினை வைத்தேன் என்றதற்கு

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல்

தான் பேசிக்கொண்டிருந்ததை கேக்கவில்லையே //

ஒரு ஜோக்கையே கவிதையா மாத்திட்டீங்களே அண்ணே!!

said...

என்னை எதிர்கவுஜ எழுத வச்சுடாதப்பா!

said...

ஏன் இந்த வில்லத்தனம்...:)

Anonymous said...

இதுக்கு இன்னும் எத்தினி எதிர் கவுஜ வரப்போகுதோ

said...

உம்மை தாஜ் ஹோட்டலுக்கு பார்சல் பண்ணணுமைய்யா...

said...

அண்ணா

என் கண்ணுல ரத்தம் வருதே

ஏன் இப்படி ஒரு கவிதை கொலை வெறி.

said...

உம்மை தாஜ் ஹோட்டலுக்கு பார்சல் பண்ணணுமைய்யா...

ரிப்பீட்டேய்

said...

ஆயில்ஸ், தாங்கலப்பா !!

said...

//"ஆத்தா நான் லூசாயிட்டேன்...!"//

டவுட்டே வேணாம் அண்ணாச்சி....

said...

இதுக்கு கண்ட கண்ட கவுஜு எல்லாம் படிக்க கூடாது என்பது ;)

Anonymous said...

காதல் தீவிரவாதியோ? :-D நல்லாயிருக்கு ...இரசித்தேன்

said...

தலைப்பு - இப்பத்தானா.. கவிதை படிச்சப்பறம் தானா..?

said...

நாணல் அக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...:)

said...

:))

said...

யாரை நினைத்து கவிதை எழுதி நிர்களோ!
ஆதனால் இப்படி ஆகவேண்டாமே

said...

சூப்பரோ சூப்பர்! கவிதை அருமை! எதிர் கவிதையா இருந்தாலும் ரசித்தேன்.

said...

என்ன ஆச்சு தம்பி இப்படியெல்லாம் கவிதை எழுதுகிறிர்கள்

said...

உம்மை தாஜ் ஹோட்டலுக்கு பார்சல் பண்ணணுமைய்யா...//

ஆஹா, ஆளில்லாத அந்த இடத்தில் ஆயில்ஸ் யாருக்கு கவிதை சொல்வார்???!!!

said...

"ஆத்தா நான் லூசாயிட்டேன்...!"

இப்பயாச்சு உண்மை தெரிஞ்சுதே!!!நீ பாஸ் ஆகமாட்டே என்று முன்பே தெரியும்!


ஆத்தா பெயரில் கமெண்ட் போட முடியாததால்!

இந்த கமெண்டை ஆத்தாவாக நினைத்துக்கொள்ளவும்!

said...

எதிர்க்கவிதை போட்டு எகத்தாளம் போடும் பாஸ் வாழ்க

said...

ஏன் ... ஏன் இந்த கொலை வெறி?

said...

\\ஆத்தா நான் லூசாயிட்டேன்...!"\\

இதுதான் எப்பவோ தெரியுமே...!!!!

Anonymous said...

:-)))))

Anonymous said...

இப்படி எல்லாம் கவுஜ எழுதினால் நீங்க லூசுன்னு முடிவே பண்ணுவாங்க அண்ணா :P
ஏன் இம்புட்டு கொலவெறியோட எதிர் கவுஜ?

said...

:) கவிதை கவிதை... படிச்சு படிச்சு சிரிசிட்டே இருந்தேன்.....

கவிதைக்கு ஏற்ற தலைப்பு..... :))))

said...

ஆயில்யன்,எந்த வகையான பாதிப்புக்களையும் கவிதையாக எழுதிவிடலாம்.அதற்கு உங்கள் கவிதையே சாட்சி.அழகான கவிதை.அதைவிட கவித்தலைப்பு அருமை.

said...

Super... LOL :))))