ஐ லவ் லூசி!

நகைச்சுவைக்கென பிரத்யோகமாக வெளியாகிய நாடகங்கள் ஆரம்பகட்டங்களில் சிரிப்புக்களை வரவழைக்கும் சின்ன சின்ன யுக்திகளைனை கையாண்டு உண்மையாக சிரிக்க வைக்கும் செயல்களை செய்து வந்தன. காலங்கள் மாறின காட்சிகளும் கூட...!

சிரிப்பு வரவழைக்க முடியாத செயல்களை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கறச்ச நாமளே நாலு பேரை தனியா சம்பந்தா சம்பந்தமில்லாம காட்சிகளில் சிரிக்க வைப்போம் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு மக்களும் அட இதுவும் காமெடி போலன்னு சிரிப்பாங்கன்னு ஒரு டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!

இது போன்றே காட்சிகள் ஒளிப்பரப்பாகும்போது தனித்து சிரிப்பு சப்தங்கள் காட்சிகளுக்கேற்ப இணைக்கப்பட்டு பெரிதும் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட முதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்தான் ஐ லவ் லூசி!

குடும்பத்தில் தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படும் நகைச்சுவைதான் ஐ லவ் லூசியின் தீம்!

1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர் பலத்த வரவேற்பினை பெற்றிருந்தாலும் மக்களிடையே ஒரு வித நம்பகத்தன்மை இன்றியே காணப்பட முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூசி தம்பதியினரின் நகைச்சுவை தெறிக்கும் நாடகம் தொலைக்காட்சியில் தொடர்ந்து,6 ஆண்டுகள் வரை டாப் 3 நிகழ்ச்சிகளிலுக்குள்ளேயே இருந்தது!

டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை தொடர் அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!

கொஞ்சமாய் இண்ட்ரோ கொடுத்தது போதும்ன்னு நினைக்கிறேன்! கொஞ்சமாய் நகைச்சுவை காட்சியினையும் பாருங்க!








டிஸ்கி:- இவையனைத்துமே கோமதி அம்மா கமெண்டாய் தெரிவித்த செய்தியின் அடிப்படையில் நான் தெரிந்துக்கொண்ட (நீங்களும் கூட இருக்கலாம்!?) நகைச்சுவை நடிகையும் - நகைச்சுவை ஒலி ஒளி நாடகம் தொடர்பான செய்திகள் !

29 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்

said...

//அந்த சிரிப்பு சத்தம் கேட்டு மக்களும் அட இதுவும் காமெடி போலன்னு சிரிப்பாங்கன்னு //


கல்லூரி ஞாபகம் வருது பாஸ்

said...

:-))

said...

//பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்//

:-))

said...

//முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூசி தம்பதியினரின் நகைச்சுவை //



அந்த நேரத்தில் நம்ம ஊர்ல ரெண்டு மூணு ஜோடி வந்துட்டாங்க. டி.வி.தான் வரல

said...

//அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!
/

ஏன்? ஏன்? ஏன்?

said...

///கானா பிரபா said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்///
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

//டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!//

தொல்லை தாங்க முடியலை..ஹோம் வீடியோன்னு போட்டு பின்னாடி கும்பலா சிரிப்பாங்க!!

said...

ஆமா, பதிவில் என்ன இருக்கு?

said...

//பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்//

ஹா... ஹா...

said...

/கானா பிரபா said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்/

ரிப்பீட்டேய்...!

said...

///டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை தொடர் அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!///
தல... இதில ஏதும் நுண்ணரசியல் இருக்கா?

said...

கமெண்ட்களை ரிலீஸ் செய்யாத ஆயிலின் நுண்ணரசியலைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்... :(

said...

ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(

உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன். தகவல்களுக்கு மிக்க நன்றி, இதே போன்ற பலத் தகவல்களை அறியத் தரவேண்டும்.

said...

கானா அண்ணன் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன் சாமி

said...

///புதுகைத் தென்றல் said...
ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(
உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன். தகவல்களுக்கு மிக்க நன்றி, இதே போன்ற பலத் தகவல்களை அறியத் தரவேண்டும்.///

அக்கா, நம்பிட்டோம் நாங்க.. ;)))

said...

aaha! Your post made me nostalgic!

தூர்தர்ஷனில் விரும்பி பார்த்த தொடர்களில் ஐ லவ் லூசியும் ஒன்று.

நிறைய மறந்து விட்டது, ஆனாலும், லூசி என்ற பெண்மணியின் முகத்தை பார்த்ததுமே கெக்கெபிக்கெ என்று சிரிக்கும் வயதில் நான் இருந்தேன்.

ஒரே ஒரு episode நன்றாக நினைவில் இருக்கிறது.

லூசி லாட்டரி சீட்டின் முடிவினை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பார்.

இன்னொருவர் ஒவ்வொரு எண்ணாய் சொல்வார்.

2

(முகத்தில் ஒன்றும் ப்ரதிபலிக்காது)

5

(சிறிதே ஆர்வம்

8

...

இப்படியாக, 10 digit எண்ணை முகம் மலர, உற்சாகம் பீறிட, excitement அதிகரிக்க, 9 டிஜிட் வரை கேட்டுவிடுவார்.

10 டிஜிடில் கோட்டை அவர் இழந்திருபார்.

அப்போது அவர் முகத்தின் ப்ரதிபலித்த ஏமாற்றம் நடிப்பு :standing_ovation:

லூசி என்ற பெயரில் நடித்த நடிகை உடம்பு சுகமில்லாமல் நின்றுவிட்டது என்ற செய்தி வந்ததுண்டு. சரியா என்று தெரியாது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட வதந்தி உலா வந்தது

:(


என் நினைவலைகளை மீண்டும் எழும்பவைத்த உங்களுக்கு நன்றி.

said...

//புதுகைத் தென்றல் said...
ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(

உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன்.//


என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)

said...

என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)//

ஆமாங்க. அந்தத் தொடர் வந்தபோது எனக்கு 10 வயது. அதனால் அது என் காலம் தான்.

:)

said...

சந்தனமுல்லை said...
//டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!//

தொல்லை தாங்க முடியலை..ஹோம் வீடியோன்னு போட்டு பின்னாடி கும்பலா சிரிப்பாங்க!!
வழிமொழிகிறேன்.

said...

/ புதுகைத் தென்றல் said...

என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)//

ஆமாங்க. அந்தத் தொடர் வந்தபோது எனக்கு 10 வயது. அதனால் அது என் காலம் தான்.

:)//

அந்த தொடர் வந்தப்போ உங்களுக்கு என்ன வயசுன்னு இன்னமும் நினைவுல இருக்கு....ஆனா என்னோட மெயில் ஐடி மட்டும் மறந்து போச்சா????என்ன கொடுமை இது????(யாருப்பா அது சாட்ல பேசவேண்டியதை இங்க பேசுறதுன்னு கேக்குறது..)

said...

ஆயில்யன் நீங்க அப்போ..ரசிச்ச நகைச்சுவையாக இருந்தாலும் இப்போ....எங்களுக்கும் தந்து சிரிக்க வைத்ததுக்கு நன்றி.

said...

லாரல் ஹார்டியை அழைத்து வந்து எங்களைச் சந்திக்க வைத்ததும் கோமா வைத்தார்கள் ஒரு விண்ணப்பம் லூசியைக் கூட்டி வரச் சொல்லி. வந்து விட்டீர்கள். சிரிக்க வைத்து விட்டீர்கள்.

நன்றி ஆயில்யன்:)))!

said...

ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))

said...

ஆயில்யனுக்கு நன்றி.
நீங்கள் தேர்ந்தெடுத்த எப்பிசோட் நான் பார்க்காதது.லூசி ஒரு ஹாஸ்யக் கடல்.அதன் அலைகளில் நாம் எத்தனை தொட்டோம் என்று தெரியாது ஆனால் எப்பொழுது அடித்தாலும் வியந்தவாறு ரசிப்போம் .

said...

ஆகா - நான் ரசித்துப் பார்த்த நினைவு வருகிறது. ம்ம்ம் - நல்ல நகைச்சுவை - சிரிப்பின் பிண்ணனி - நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி

said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்

said...

ஸ்ரீமதி said...
ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))


enkaum than thereyala ma

said...

ஸ்ரீமதி said...
ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))


enkaum than thereyala ma