தமிழ்ச்செல்வன்!


புன்னகை இழந்த ஈழமக்களின் வாழ்வில் ஒளியேற்றம் கிடைக்கும் என்று நம்பிய சமாதான பேச்சுவார்த்தைகளின்போது புன்னகையோடு வலம் வந்துக்கொண்டிருந்த சகோதரனை இழப்போம்! என்று எவருமே நினைத்திருக்காத தருணத்தில் எதிரிகளின் வஞ்சகத்தால் ஈழ மக்களின் புன்னகை நெஞ்சம் கருகி இன்றோடு ஒராண்டு!

முகத்தில் புன்னகை எப்போதும்;

முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;

போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;

ஈழத்தின் நிம்மதிக்கு நியாயம் தேடி!

ஆண்டனை இழந்த போது, அதிர்ச்சியில் நின்றவர்களுக்கு!

ஆச்சர்யம் கொடுத்தவர்! சர்வதேச அரசியலில் ஆண்டனின் வாரிசாய்!

இரையானார் கொடிய மிருக(குண)ங்களின் நடவடிக்கைக்கு

விதையானார்..!

தன் விருட்சங்(க)கிளை விட்டு...!

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

naan than first ok

wait pannuga neega enna eluthuneganu naan innum pakkala
pathuthu vanthu sollren ok

said...

விதைக்கப்பட்ட எம் வீரர்கள் ஆலமரமாய் எழுவார்கள் சுதந்திர பூமியில்.

said...

தமிழ்செல்வன் மறைவு ஈழத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு. போர்களங்கள் கண்டு வந்தவர், தன் வசீகரிக்கும் புன்னகையால் அனைவரையும் கவர்ந்தவர். என் மனமார்ந்த அஞ்சலிகள்.

said...

அஞ்சலிகள்!!

said...

செங்குருதி கொண்டுதான் பூப்பிக்க வேண்டும் சுதந்திரத்தை எனில்
பூக்கும் மலரில் இவரின் வாசமும் இருக்கும்....

said...

நானும் எனது மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன்!!!!

said...

ஆண்டானின் மறு உருவமே மாண்டாலும் உன்னை மற‌க்கமாட்டோம்!

Anonymous said...

வார்த்தைகளில் இழப்பை சொல்ல முடியவில்லை..:(

said...

விதைகள் வீழ்வது அழிவதற்கு அல்ல... அதிலிருந்து பல விருட்சங்களை முளைவிக்கத்தான் என்பதில் உறுதியாக இருப்போம்.

said...

உள்ளங்களில்
எண்ணங்களிலும்
என்றும்
கலந்துள்ளவருக்கு
இழப்பு என்பது
இல்லை

வீரர்கள்
விழ்த்தப்படுவதில்லை.அவர்கள்
விதைக்கப்படுகிறார்கள்
விடியல் என்பது
விடிந்தே தீரும்

said...

எங்கள் கண்ணீரைக் காணிக்கையக்குகின்றோம்

said...

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

இப்படி ஒரு பதிவிட்ட ஆயில்ஸ் அண்ணனுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கக்ங்கள்.