ஈழம் அடைந்தே தீரவேண்டும் - ரஜினி பேச்சு!இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்காப் படையினர் ஆண்மையற்றவர்கள்.

ஈழத் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இனிமையானது. அவர்கள் திட்டினாலு் கூட இனிமையாகவே இருக்கும். அவர்கள் சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புகளால் புலம்பெயர்ந்து உலகப் பந்து முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீதான யுத்தத்தை சிறீலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும்.

நான் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்களை உங்களால் அழிக்க முடியவில்லையே ஏன்? நீங்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.

‘நான்' ‘எனது' என்ற அகங்காரத்தை விட்டால் உங்களுக்குத்தான் நல்லது. தங்கள் நாட்டை தமிழர்கள் அடைந்தே தீருவார்கள். பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நன்றி ஆயில்யன்!

said...

நல்லாத்தான் இருக்கு அதே நேரம் அடுத்த வாரம் மன்னிப்பு கேட்டுவாரோ என்றும் நினைப்பிருக்கு :)

said...

நன்றி ஆயில்ஸ்

கொழுவி

அடி கள்ளி, குசும்பு ;-)

said...

நன்றி ஆயில்யன்!

said...

// பெண்கள் குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.//

சிந்திப்பார்களா:(?

சிந்திக்க வைக்கக் குரல் கொடுத்த பிரபலங்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

said...

//நல்லாத்தான் இருக்கு அதே நேரம் அடுத்த வாரம் மன்னிப்பு கேட்டுவாரோ என்றும் நினைப்பிருக்கு :)
//
இப்டியெல்லாம் எங்க தலைவரை கிண்டல் பண்ணா, நான் அழுதுடுவேன் !!!

said...

தலைவரின் தன்னடக்கம் யாருக்கு வரும்?

நான்
எனது
என்ற அகங்காரம் ஒழிந்தால் எல்லாமே சரியாகும்.

said...

நானும் நேற்று தொலைக் காட்சியில் பார்த்தேன்.
ரஜினி சும்மா உட்கார்ந்து இருக்கும்போது கூட காமிரா அவரையே காண்பித்தது.
மிகுந்த சீரியஸாக ஆழ்ந்து கன்னத்தில் கைவைத்து சிந்தித்துக் கொண்டே இருந்தார்.
எப்படியும் தனிவழி கண்டுபிடிச்சுருவார்.

said...

//ராமலக்ஷ்மி said...
// பெண்கள் குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.//

ராமலக்ஷ்மி அவர்கள் சுட்டிக்காட்டியதை வழிமொழிகிறேன்.


//கொழுவி said...
நல்லாத்தான் இருக்கு அதே நேரம் அடுத்த வாரம் மன்னிப்பு கேட்டுவாரோ என்றும் நினைப்பிருக்கு :)//

இதையும் சன் குழுமம் விகடன் குமுதம் ஞானி பதிவுலகம் எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்களோ என்றும் நினைப்பிருக்கு :-)

said...

நல்லா இருக்கு ஆயில்ஸ்!! நன்றி!!


//நல்லாத்தான் இருக்கு அதே நேரம் அடுத்த வாரம் மன்னிப்பு கேட்டுவாரோ என்றும் நினைப்பிருக்கு :)//

;-)))

said...

நன்றாகத்தான் பேசி இருக்கிறார்.
பணமும் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு உண்டான அதிர்ஷ்டம் அந்தத் தமிழ் மக்களுக்கும் போய்ச் சேரட்டும்.

said...

பதிவுக்கு நன்றி.