மதியம் புதன், நவம்பர் 12, 2008

திருக்குறள் பற்றி - நானும்....!


திருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை!

குறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது! -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்!

அறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன!

அறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும்! செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு! முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!

அறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது!

இன்சொல் பேசுதல்!

காலை எழுவது முதல் இரவு வீழ்வது வரை நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனையோ பேர்! உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது! - அல்லது கற்றுத்தருகிறது! - எல்லோரையுமே ஒரளவுக்கு நம்பித்தான் வாழ்கிறோம்!

தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.

ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!

அதே சமயத்தில் என்னால் ஏன் இது போன்று வெளிப்படையாக புதிது புதிதாய் நண்பர்களை பெற்றுக்கொள்ளமுடிவதில்லை என்று பலமுறை நினைத்ததும் உண்டு! - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது! நினைத்தப்படியே இல்லாமல் செயல்படுத்திப்பாருங்களேன்!

வாழும் வாழ்க்கை ஒன்று செல்லும் தூரமும் தெரியாது செல்லும் வழியும் கூட சிறப்பாக இருக்குமா என்று புரியாது! ஆனாலும் கூட ஒரு நம்பிக்கையோடு தொடங்கிவிட்டோம் அந்த நம்பிக்கையோடே தொடர்வோம் - நட்பு வசத்தில் உறவுகளின் வாசத்தில்....!

**************************************************

என்னை பற்றிய குறள்கள்..! (அட எனக்கு புடிச்சதுப்பா)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்க்கி அகத்தானாம்
இன்சொலின் அதே அறம்

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப்பிற

பின்குறிப்பு:- ஜீவ்ஸ் அண்ணாச்சி இனி என்கிட்ட கதை கதைன்னு 1ம் கேக்கமாட்டீங்கன்னு பெரும் நம்பிக்கையோட எஸ்ஸாகிக்கிறேன்!

28 பேர் கமெண்டிட்டாங்க:

pudugaithendral said...

nallathan irukku.

aana kathaya eluthirunthirukalam.

:(

Thamiz Priyan said...

அதெல்லாம் செல்லாதுங்கோ... கதை எழுதியே ஆகனும்... இல்லைன்னா.... இல்லைன்னா... இல்லைன்னா...



















நான் அழுதுடுவேன்.. ப்ளீஸ் எழுதுங்ண்ணா..:)

ராமலக்ஷ்மி said...

போற்றப் படும் பொதுமறை நூலைப் போற்றி ஒரு பதிவு. வாழ்க்கையில் அனுபவத்தில் கண்டதை, அனுசரித்ததை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். கடைசிப் பத்திக்கு தனிப் பாராட்டுக்கள்.

// முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!//

ரொம்பச் சரி.

அறம் செய்ய விரும்புவோம்.
இயன்ற வரை செய்வோம்.
இன் சொல் பேசுவோம்.

நாணல் said...

வாழ்க்கையின் ஓட்டத்தில் மறந்திருந்த திருக்குறளைப் பற்றி பதிவு போட்டமைக்கு நன்றி..
"அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்", திருக்குறளுக்கு மட்டுமே சொந்தமான 7 வார்த்தைகள் கொண்ட அமைப்பு இதுல இல்லையே...

தமிழ் அமுதன் said...

நல்லா இருக்கு! கதை போட்டா இன்னும்!

Unknown said...

குறள் பற்றிய உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. :))ஆனா குறள வெச்சு எல்லாரும் கதை தானே எழுதினாங்க?? நீங்க என்னமோ பண்ணீருக்கீங்க.. ம்ம்ம் கொஞ்சம் டிபரண்டா, நல்லா தான் இருக்கு.. :))

Unknown said...

ம்ம்ம்ம் அப்பறம் அந்த பொம்மை அழகா இருக்கு.. குத்து விளக்கு அழகா இருக்கு.. அந்த சேர் சூப்பரா இருக்கு.. ம்ம்ம் அப்பறம்.. அவ்ளோ தான்..

Unknown said...

நாங்களும் டிபரண்டா பின்னுட்டம் போடுவோம்.. நாங்களும் ரௌடி தான்.. ;))))

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆயில்யன் ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க...

அமுதா said...

தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும். */

உண்மை தான்.

/*முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!*/
நல்ல விஷயங்களுக்கு இது முற்றிலும் உண்மை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

gayathri said...

hai sri ma en kannukku பொம்மை mattum than thereuthu athu mattum than ennaku azaka iruku.
uanku mattum eppadi ma குத்து விளக்கு,சேர் ithelam thereuthu.
enna koduma frined ethalem.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக அழகான பதிவு,

ஒருவேளை கதையாய் போட்டிருந்தாலும் சொல்ல வந்த இத்தனை கருத்துக்களயும் சொல்லியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் இது ஆழமாக அர்த்தத்துடன் உள்ளது.

முகம்அக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பதே நட்பு.

gayathri said...

அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.

intha line nalla iruku friend

அமிர்தவர்ஷினி அம்மா said...

// முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!//

ம். இதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.
இதைத்தாங்கண்ணா நம்மலால கடைப்பிடிக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும் இந்த ட்ரெயின்ல வரச்ச. சே சே

தமிழன்-கறுப்பி... said...

1.
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

தமிழன்-கறுப்பி... said...

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

தமிழன்-கறுப்பி... said...

***
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள

இது நான் காப்புரிமை செய்திருக்கிற குறள் சீக்கிரமா இந்தக்குறளோடு மேடைக்கு வருகிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

மற்றப்படி கதைசொல்லச்சொன்னா நீங்க கதை சொல்றிங்க...

புனைவு எழுதணும்ணே...

தமிழன்-கறுப்பி... said...

புனைவு தெரியலைன்னா நம்ம தல தமிழ் பிரியனை கேளுங்க 'புனைவு மாதிரி' சொல்லித்தருவார்... ;)

தமிழன்-கறுப்பி... said...

\\
எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!
\\

சட்டென்று நெருக்கமாகி விடுகிற தன்மை சிலருக்குத்தான் இருக்கிறது ...

எனக்கும் இப்படியான மனிதர்களை பிடிக்கிறது...

Unknown said...

//gayathri said...
hai sri ma en kannukku பொம்மை mattum than thereuthu athu mattum than ennaku azaka iruku.
uanku mattum eppadi ma குத்து விளக்கு,சேர் ithelam thereuthu.
enna koduma frined ethalem.//

அக்கா பொம்மை அண்ணா போட்ட படம்... குத்துவிளக்கு சைடுல இருக்கு பாருங்க.. அப்பறம் சேர் தமிழ்மணத்தில் என் இடம்ன்னு அண்ணா ஒரு போட்டோ போட்டிருந்தாரே அது... :))

கானா பிரபா said...

பாஸ் இது நீங்களா பாஸ், என்னது பாஸ் ஏன் பாஸ் இப்படி?

இப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், சிந்தனை நல்லா இருக்கு ;)

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ் நீங்கதானா..

நல்ல சிந்தனைகள்!! யாருக்காவது திருக்குறல் கட்டுரை கேட்டா உங்க லிங்க் கொடுத்துடறேன்!!!

சந்தனமுல்லை said...

//ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!//

அப்போருந்தே இப்ப்டைதானா பாஸ் நீங்க!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாஸ் இதுக்கு pass போட்டிரலாம் பாஸ்.. எப்படியோ திருக்குறளை உங்க கதையோட சேர்த்துட்டீங்க.. :)

கோபிநாத் said...

\\\ஸ்ரீமதி said...
குறள் பற்றிய உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. :))ஆனா குறள வெச்சு எல்லாரும் கதை தானே எழுதினாங்க?? நீங்க என்னமோ பண்ணீருக்கீங்க.. ம்ம்ம் கொஞ்சம் டிபரண்டா, நல்லா தான் இருக்கு.. :))
\\

ரீப்பிட்டே ;))

Anonymous said...

ஆயிலு, ஏம்ப்பா என்னாச்சு திடீர்னு

Anonymous said...

இது ஒரு ஆயில்யன் பதிவு :)