மதியம் செவ்வாய், டிசம்பர் 15, 2009

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

13 பேர் கமெண்டிட்டாங்க:

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் பதிவாகப் போடும்போதே இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்னொரு விஷ்யம், காலையில் இதுபோன்ற விஷயங்கள் படிக்க நேர்ந்தால் மனம் தொடர்ந்து அமைதியாக இயங்குகிறது. மீள் பகிர்வுக்கு நன்றி ஆயில்ஸ்

க.பாலாசி said...

பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஒரு ந‌ல்ல‌ மீள் ப‌கிர்வுக்கு ந‌ன்றி ச‌கா

Anonymous said...

தலைவர் சொன்ன எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிச்சுக்கோ ஞாபகம் வருது.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்க்கைய எட்டு எட்டா பிரிச்சு சூப்பர் ஸ்டார் மாதிரி யோசிக்கிறீங்க பாஸ்.

//இன்னொரு விஷ்யம், காலையில் இதுபோன்ற விஷயங்கள் படிக்க நேர்ந்தால் மனம் தொடர்ந்து அமைதியாக இயங்குகிறது.//

அதே அதே! :)

கண்மணி/kanmani said...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆயில்யானந்த சுவாமிகளும் என்னை மாதிரி போதிக்கிறாரே [வயசாயிடுச்சோ]:))

Swami said...

நல்ல பதிவு!!

//நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!//

உண்மை..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Unknown said...

அருமையான பதிவு அண்ணா. பகிர்வுக்கு நன்றி. :))

Sanjai Gandhi said...

நல்ல விஷயம் ஸ்வாமி ஆயில்யானந்தா.. :)

கானா பிரபா said...

அருமையான பதிவு அண்ணா. பகிர்வுக்கு நன்றி. :))

சுபஸ்ரீ இராகவன் said...

மிக நல்ல பதிவு ஆயில்யன்!
பகிர்ந்தமைக்கு நன்றி!

pudugaithendral said...

boss உங்க பழைய பதிவுகளை எல்லாம் எடுத்து விடுங்க. அதுவும் அந்த பெட்ரோமாக்ஸ் காமெடி கண்டிப்பா வரணும்.

Kumky said...

வணக்கம் ஸ்வாமிஜி..

தொடரத்தூண்டும் நல் எண்ணங்கள்..