பாட்டிக்கு தெரிந்த அளவிற்கான சமையல் வித்தைகள் அம்மாவிற்கு கொஞ்சம் கஷ்டமானது அதுவும், முறுக்கு சுடுவதில் முதலில் சாதாரணமான விசயமாக தோன்றும் அனைத்துமே கடினமான வேலைகள்தான்.
மாவு பதமாய் தயாரிப்பதிலிருந்து, மொறுமொறுவென்று இருக்க கொஞ்சம் மாவில் நெய் அல்லது வெண்ணை சேர்ப்பது,மாவு பட்டதும் எண்ணெய் வெடிக்காமல் இருக்க,கொஞ்சம் புளி போடுவது போன்ற எந்த சின்ன விசயங்களுமே கூட தன் மகள் செய்ய கூடாது என்று தன் வாழ்நாளினை எங்களுடனே கழித்த பாட்டிக்கு ஒரு தெளிவான எண்ணம். - பெற்றவர்கள் என்றைக்குமே தன் மக்கள் கஷ்டம் அடையக்கூடாது என்ற சிந்தனையில்தானே இருக்கிறார்கள்.
தீபாவளி வருவது என்ற சேதி கேட்ட நாள் தொடங்கி நாள் எண்ணி சரியாக 10 நாட்களுக்கு முன்பே மாவு அரைத்து ஒரு வாரம் முன்பே வீட்டில் முறுக்கு தினப்படி தீனியாகிவிடும். நினைத்து நினைத்து முறுக்கு சுட்டு பெரிய பெரிய சில்வர் வாளிகள் அடுக்குவதை பாட்டிக்கு பொழுபோக்கானது அந்த காலம்.
பாட்டிக்கு பிறகு தனித்துத்தான் விடப்பட்டிருந்தார் அம்மா. பெற்ற மக்கள் திசைக்கொன்றாய் சென்று விட தனக்கென செய்து கொண்டு வாழ அத்தனை விருப்பமில்லா வாழ்க்கை - எல்லா பெற்றோர்களுமே இந்த காலகட்டத்தினை கடந்திருக்க கூடும் அல்லது அடைந்திருக்ககூடும்!
அவ்வப்போது சென்று வரும் அண்ணன் அக்காவின் விசிட்டில் கொஞ்சம் கலகலப்பாகும் வீடு வருடத்திற்கொரு முறையாகிப்போனது எனது விடுமுறை விசிட்டில் கொஞ்சம் அதிக ஆர்வத்தையும் அம்மாவுக்கு கொண்டு வரும். தனக்கே தெரிந்த முறையில் சமையல் செய்து போடுவது தினசரி வேலையாகிப்போக,அவ்வப்போது விருப்பமாய் சொல்வதையும் சிரமம் பாராமல் செய்து முடித்து சாதித்ததில் நான் நன்றாக தின்றபோது மனம் நிறையும்.
அதுவும் இந்த விடுமுறையில் போகும்போதே ஒரு சின்ன்ன லிஸ்ட் (நம்புங்கப்பா சின்ன லிஸ்ட்தான் அது..!) கொண்டு போய் முன்பே சொல்லிவிட்டதால் லிஸ்ட் சரிபார்க்கவேண்டிய சிரமமின்றி தினமும் காலை உணவு வயிற்றையும் நிரம்பி கொஞ்சம் வெயிட்டையும் கூட்டியது உண்மைதான்.
என்னடா செஞ்சு தரட்டும்...? என்ற அம்மாவின் குரல் கேட்டு அதிகம் சிரமமேற்படுத்த கூடாது என்ற எண்ணத்தோடு “அதெல்லாம் வேணாம்மா எல்லாம் அங்க கிடைக்குது வேற என்ன வாங்கிட்டா போச்சு...! என்றவன் பதிலை, ஏற்றுகொண்ட பாணியோடு முறுக்கு செஞ்சு தரேன் எடுத்துட்டு போன்னு சொல்லிய அம்மா அன்றைக்கே அதற்கான பணிகளை ஆரம்பித்து,மின்சார கட் ஆகும் நேரம் கணித்து முன்பே சென்று மாவு மிஷினில் அரைத்த மாவோடு அரங்கேறியது முறுக்கு சுடும் படலம்!
நான் எதிர்ப்பார்த்ததை போலவே எண்ணெய் வெடிக்கும் சத்தமும்,அதை தொடர்ந்து அம்மாவின் குரலும், ”ச்சே...! எப்ப நான் முறுக்கு சுட போனாலும் இது ஒரு தொல்லை! எனக்கு என் அம்மா ஒழுங்க சொல்லிக்கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்ற அலுப்போடு,எதிர்வீட்டு டீச்சரின் ஆலோசனையும் கை கொடுக்க, நானும், கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற ஆதரவு குரலில் ஒரு வழியாய் பார்சல் செய்ய ரெடியானது முறுக்கும் அதனோடு கூடவே, ஓலை பக்கோடா!
@ தோஹா
பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.
வந்திருக்கும் கொஞ்சம் முறுக்கில் கொஞ்சூண்டு மட்டும் இதுவரை காலியாகியிருக்கிறது!
இன்னும் காலம் இருக்கிறது...!
40 பேர் கமெண்டிட்டாங்க:
அட ஓலை பகோடா நம்ம மாயவரம் ஸ்பெஷல்! நான் எப்படி அதை ராத்திரி சாப்பிட்டேன் என்பதை தம்பி உன் கிட்ட சேட்ல சொல்லிட்டேன்:-)))
பதிவு அருமைப்பா!!!!
weekend moodல ஆபீஸ்ல வேலை பண்ணமுடியாம உட்கார்ந்து இருந்தா இப்படி முறுக்கு படம் போட்டு முறுக்கு சாப்பிடுகிற ஆசைய தூண்டி விடறிங்களே .. ..
இருங்க பதிவு படிச்சிட்டு வறேன்..
ஆமா சுடும்போது அம்மா பாத்து கொஞ்சமா செய்யுன்னு சொல்வோம்.. ஆனா திங்கும்போது மட்டும் வளர்ந்துகிட்டே இருக்கனும் அது :))
ஓட்டுபக்கடான்னு சொல்வோம்.. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.. முறுக்கு தட்டையெல்லாம் எங்கம்மா நல்லா செய்வாங்க .. என்னையும் பழக்கிவிடப்பாத்தாங்க..:))
//பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.//
:))
//அன்றைக்கே அதற்கான பணிகளை ஆரம்பித்து,மின்சார கட் ஆகும் நேரம் கணித்து முன்பே சென்று மாவு மிஷினில் அரைத்த//
வாவ்! டச்சிங்கா இருக்கு அண்ணா பதிவு!
நல்லா எழுதியிருக்கீங்க
படத்துல மட்டும் தான் இப்படி பார்க்க முடியுது
ஹும் எப்ப கிடைக்குமோ ...
ஓலைபக்கோடா சூப்பர்!
:)
நிக்கானுக்காக போட்(டோ)ட பதிவா அண்ணே???
//அதுவும் இந்த விடுமுறையில் போகும்போதே ஒரு சின்ன்ன லிஸ்ட் (நம்புங்கப்பா சின்ன லிஸ்ட்தான் அது..!)//
ம்கும்... இந்த லிஸ்ட் ரகசியம் எங்களுக்கு தானே தெரியும்.. ;))))
இப்படி படமெல்லாம் போட்டு டென்சன் பண்ணாதீங்க..காய்ஞ்சு போய் கிடக்கோம்...
/ அபி அப்பா said...
அட ஓலை பகோடா நம்ம மாயவரம் ஸ்பெஷல்! நான் எப்படி அதை ராத்திரி சாப்பிட்டேன் என்பதை தம்பி உன் கிட்ட சேட்ல சொல்லிட்டேன்:-)))/
துணில சுத்தி நல்லா உடைச்சி மாவாக்கி காபி ல கலந்து நீங்க குடிச்சதை ஆயிலை நம்பி சொல்லிட்டீங்களே அண்ணே...:))
/தமிழ் பிரியன் said...
இப்படி படமெல்லாம் போட்டு டென்சன் பண்ணாதீங்க..காய்ஞ்சு போய் கிடக்கோம்.../
நீங்க கூட தான் ஊருக்கு போனீங்க.....இப்படி எல்லாம் உங்களுக்கு பதிவு போட தோணலையே??
//நிஜமா நல்லவன் said...
/ அபி அப்பா said...
அட ஓலை பகோடா நம்ம மாயவரம் ஸ்பெஷல்! நான் எப்படி அதை ராத்திரி சாப்பிட்டேன் என்பதை தம்பி உன் கிட்ட சேட்ல சொல்லிட்டேன்:-)))/
துணில சுத்தி நல்லா உடைச்சி மாவாக்கி காபி ல கலந்து நீங்க குடிச்சதை ஆயிலை நம்பி சொல்லிட்டீங்களே அண்ணே...:))//
:-)))))))) பல்செட் வேலை செய்யலையா!!
/சந்தனமுல்லை said...
ஓலைபக்கோடா சூப்பர்!/
அப்படின்னா முறுக்கு நல்லா இல்லையா???
அம்மான்னா அம்மாதான்! //கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற // எப்படி ஒரு கார்கோ முழுசுமா?!! ;-))
//பாராமல் செய்து முடித்து சாதித்ததில் நான் நன்றாக தின்றபோது மனம் நிறையும்.//
பாத்திரம் காலியாகும்! ஹிஹி!
/ சந்தனமுல்லை said...
//அன்றைக்கே அதற்கான பணிகளை ஆரம்பித்து,மின்சார கட் ஆகும் நேரம் கணித்து முன்பே சென்று மாவு மிஷினில் அரைத்த//
வாவ்! டச்சிங்கா இருக்கு அண்ணா பதிவு!/
ரிப்பீட்டேய்
உங்க போட்டோ திறமைக்கு முறுக்கை பலியாக்கிட்டீங்களே!!அவ்வ்வ்வ்வ்!
/ சந்தனமுல்லை said...
அம்மான்னா அம்மாதான்! //கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற // எப்படி ஒரு கார்கோ முழுசுமா?!! ;-))/
குட் கொஸ்டின்....ஆச்சி எப்படி இப்படி எல்லாம் கேக்க தோனுது????
/மாவு பதமாய் தயாரிப்பதிலிருந்து, மொறுமொறுவென்று இருக்க கொஞ்சம் மாவில் நெய் அல்லது வெண்ணை சேர்ப்பது,மாவு பட்டதும் எண்ணெய் வெடிக்காமல் இருக்க,கொஞ்சம் புளி போடுவது போன்ற எந்த சின்ன விசயங்களுமே/
அண்ணே ....நிறைய விஷயங்களை அவதானிச்சு இருக்கீங்களே....:)
வீட்டுலையே இருக்கும் பொது இதோட மவுசு தெரியாது. ஊருக்கு திரும்பி வந்த அப்பறம் தான் விளங்கும் எல்லாம் :) :(
என்னோட இட்லி கதையும் அப்படி தான்.
/சந்தனமுல்லை said...
உங்க போட்டோ திறமைக்கு முறுக்கை பலியாக்கிட்டீங்களே!!அவ்வ்வ்வ்வ்!/
ஹா...ஹா...ஹா...
//கொஞ்சூண்டு மட்டும் இதுவரை காலியாகியிருக்கிறது!//
அய்ய்ய்... மிச்சத்த தானே படம் புடிச்சி போட்டிருக்கிங்க...
முறுக்கு கதை ஜோர்.
போனபதிவில் முறுக்கு மட்டும் ரிலீஸ்.
இப்போ மெதுவா ரிப்பன் பகோடாவும் தலை காட்டுது.
வேறென்ன பார்சல் இன்னும் பிரிக்காம இருக்கு:)?
:-))
ohhh...
என்ன இருந்தாலும் ஆத்தா கையால செஞ்சுதாற பலகாரம்...!
எனக்கும் கொஞ்ச நாளா இந்த பனங்காய் பணியாரம் சாப்பிடணும்னு ஒரு ஆசையா இருக்கு ஆனா இங்க பனங்காய்க்கு எங்க போவேன்..
இன்னொண்ணு நம்ம ஊர்ல தட்டை வடைன்னு ஒண்ணு செய்வாங்க பாருங்க அட போங்கண்ணே
காஞ்சு இருக்கிற பயலுகளை கிளறிவிடுறதே பொழைப்பாயிடுச்சு உங்களுக்கு...
:)
சீக்கிரம் சாப்பிட்டு முடிங்கன்னா,,
பார்த்து பார்த்து போட்டோ எடுத்து வெச்சிக்கவா சுட்டு கொடுத்தாங்க.
ஆனா ரெண்டு போட்டோவும் சூப்பர்.
அதுவும் கொஞ்சமா தின்னுட்டு எடுத்த முறுக்கு சூப்பரோ சூப்பர்.
//பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.//
லீவுக்கு அப்பறம் ஊருக்கு வந்தாச்சா?
எங்க வீட்டு ஞாபகத்தைக் கிளறிவிட்டீர்.
// சந்தனமுல்லை said...
அம்மான்னா அம்மாதான்! //கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற // எப்படி ஒரு கார்கோ முழுசுமா?!! ;-)) //
பாஸ், இதைத் தான் குசும்புன்னு சொல்லுவாங்க
***
இப்படி படமெல்லாம் போட்டு டென்சன் பண்ணாதீங்க..காய்ஞ்சு போய் கிடக்கோம்.
***
முறுக்குமொழிகிறேன்.
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை.
:)
அன்பின் ஆயில்ஸ்
அருமையான பதிவு - முறுக்கு முறுக்கிய பதிவு - அம்மா கையாலே முறுக்கு சுட்டுச் சாப்பிடக் கொடுத்து வைக்கணூம். ம்ம்ம்ம்
ஆமா - நி.ந பதிவுக்கு மறு மொழி போட்டாரா - இல்ல மறுமொழிக்கு மறு மொழி போட்டாரா
அம்மம்மா செய்யும் முறுக்கு, தட்டைகள் வாயில் போட்டாலே கரையும். எனக்கு பிடிச்சது தேன்குழல்தான். அம்மா செய்யும் கை முறுக்கும் அருமையா இருக்கும்.
நானும் செய்வேன்.
sweet..
enga amma kooda superaa murukku seivaanga...adhennavo yaarukkume ethana vagaiyaana murukku saappittaalum, amma veetla senju kudukkara maadhiri irukkaadhu thaan :)) adhu thaan amma, illayaa?
முறுக்கைவிட நீங்கள் அம்மா பற்றி எழுதியது எனக்கு நம்ம ஊர் கிறுக்கு வந்து விட்டது ஆயில்யன்... பெட்டி கட்ட ஆரம்பித்து விட்டேன்...மாயூரத்திற்க்கு. வரும் போது முறுக்கு நிச்சயம் (பெங்களூர் ஐயங்கார் பேக்கரியிலிருந்து)
//பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.
வந்திருக்கும் கொஞ்சம் முறுக்கில் கொஞ்சூண்டு மட்டும் இதுவரை காலியாகியிருக்கிறது!
இன்னும் காலம் இருக்கிறது...! //
அட! இங்கே ஒரு காமெரா கவிஞர் உருவாகறாரு டோய்.
வர்ணனை சூப்பருங்கிறேன்.
Post a Comment