2009 ஏப்ரல் - PITக்கு

கையில் கேமரா வந்து சரியாக இரு மாதத்தினை கடந்துவிட்டது.இன்னும் கடக்க வேண்டிய கற்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது என்பதனையே தின நடவடிக்கைகளில் தெளிவாக்குகிறது.

சாதாரணமாய் நினைத்து இருந்த கேமரா பற்றிய சங்கதிகள் இப்பொழுது வாய் பிளக்க வைக்கும் அளவு விசயங்களோடு,கொஞ்சமும் என்னோட சிறு மூளைக்குள் சரியாய் சிக்காமல் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்த வருட விடுமுறையே கா.மு & கா.பிக்காவே நினைத்துக்கொண்டேன்.காமிரா கையில் வருவதற்கு முன்பு கிட்டதட்ட 10 நாட்கள் எங்கு செல்வதற்குமே கடும் யோசனையாகவே இருந்தது. போனா நல்ல நல்ல போட்டோஸ் எடுக்கமுடியாம போயிடுமே இப்பன்னு! (கான்ஃபிடண்ட் ! கான்ஃபிடண்ட்!!)

காமிரா கையில் வந்த பின் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு தெருவில் வந்து நின்றாலே பார்ப்பவர்கள் - ரொம்ப ஓவரத்தான் சீன் போடுறான்ன்னு கேக்காத குறையாக பார்த்த பார்வையில் காமிரா பார்வை கெட்டு ஒழிந்தே போனது.

ஆனாலும் அவ்வப்போது மனத்தை தைரியப்படுத்திக்கொண்டு எடுத்த போட்டோக்கள் இப்ப பிட்டுக்கு நல்லாவே உதவியா இருக்கு!

சரி எதாச்சும் ஒரு போட்டோ செலக்ட் பண்ணி சொல்லுங்கப்பா!

நானும் ஆட்டத்துல சேர்ந்துக்கணும்ல!

1

2

3

4


5



6


பயப்படாமல் (என்னிய பார்த்துதாங்க!) அழாமல், அழகாய் போஸ் கொடுத்த குட்டீஸ்களுக்கு நன்றி!

32 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அட... எல்லாமே கலக்கலாயிருக்குது.. சாய்சை வேற யாராச்சும் செய்யட்டும் :-)

said...

அண்ணே எல்லா குழந்தைகளும் சூப்பருண்ணே ;-)

said...

//கையில் கேமரா வந்து சரியாக இரு மாதத்தினை கடந்துவிட்டது//

இதுக்கும் "அவர்" தான் காரணமா?

said...

எல்லாமே நல்லாயிருக்கே,

சரி எதாச்சும் ஒரு போட்டோ செலக்ட் பண்ணி சொல்லுங்கப்பா!
சரி

ப்ளாக் அண்ட் வொயிட்

said...

முதல் படமும் கடைசி படமும் நல்லாருக்கு. போட்டிக்கு ஏத்த படம் எதுன்னு கேட்டா கடைசி படம்னு நெனைக்கிறேன். முயற்சிகள் எல்லாமே நல்லா வந்திருக்கு. தொடர்ந்து க்ளிக்கி தள்ளுங்க.

said...

எல்லாம் அவர் செயலே !! :))

said...

கா.மு... கா. பி... காலத்தை எதை வச்செல்லெல்லாம் கண்க்கிடறீங்க.. அருமை அருமை..

படங்கள் எல்லாமே அழகு .. இரண்டாம் நம்பர் என் தேர்வு..

said...

எல்லா குட்டீஸ் படங்களும் அழகாக இருந்தாலும் இனம் புரியாத பார்வையால் முதல் படம் எனது தேர்வு.

said...

1st pappa

said...

குட்டீஸ் அழகு.. இந்த ஃபோட்டோகிராபி அறிவெல்லாம் எனக்கு கிடையாது... அதனால் நோ கமெண்ட்ஸ்...

said...

வாழ்த்துக‌ள்

said...

கடைசி படம் அனுப்புங்க ஆயில்!

said...

படமெல்லாம் கலக்கல் கேமரா கவிஞரே!

said...

படம் 1: தீபாவளித் திருநாளில் பட்டாடை கட்டிக்கிட்டு:
“எனக்குதான் வெடின்னா பயம்னு சொல்லிட்டனே. பின்னேயும் நீளமா.. என்னது அது கையிலே?”

படம் 2: ”கிர்ர்ர்ர்ர். போஸ் கொடுக்கும் போது யாரும் தொந்திரவு பண்ணாதீங்க.”

படம் 3: "எந்தப் படத்தைப் போட்டிக்குக் கொடுக்கப் போறாரோ தெரியலையே."

படம் 4: ஒளி மிகுந்த கண்களும் சேர்ந்து அல்லவா சிரிக்கின்றன!

படம் 5: "எம்.பி எலக்‌ஷன் பிரசாரத்துக்கு நான் வரணுமா. அட போங்கப்பா. அதெல்லாம் எங்க அக்கா தேர்தல்ல நிற்கையிலதான் செய்வேன்"

படம் 6: "எந்தப் படத்தைக் கொடுத்தாலும் வெற்றி உங்களுக்குதான் மாமா"

ஹிஹி, அப்படின்னு சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்:)!

said...

//போனா நல்ல நல்ல போட்டோஸ் எடுக்கமுடியாம போயிடுமே இப்பன்னு! (கான்ஃபிடண்ட் ! கான்ஃபிடண்ட்!!)
//

டெரரா இருக்கு பாஸ் உங்க கான்ஃபிடண்ட்! :-))

said...

முதல் படம் எனக்கு பிடிச்சிருக்கு! எல்லா குட்டீஸும் அழகு!

said...

//பயப்படாமல் (என்னிய பார்த்துதாங்க!) அழாமல், அழகாய் போஸ் கொடுத்த குட்டீஸ்களுக்கு நன்றி!//

உண்மையை உணர்ந்த சின்னபாண்டி வாழ்க! :-)

said...

பயப்படாமல் (என்னிய பார்த்துதாங்க!) அழாமல், அழகாய் போஸ் கொடுத்த குட்டீஸ்களுக்கு நன்றி!//

பாஸ்

இந்த வரிகளை வாசிச்சதும் தான் உண்மை உறைச்சது, கண்களில் மடை திறந்தது போல விசுக்கு விச்சுக்குனு அழுதுட்டேன் பாஸ்.
இந்த குட்டீஸ் எல்லாம் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்காங்க, இவங்களுக்கு ரிஸ்க்கு எடுக்குறது ரஸ்கு சாப்பிடறது போல

பாஸ், உண்மையிலேயே இவங்க தைரியம் மெச்சத்தக்கது இல்லையா பாஸ்

said...

ஆயில்ஸ் அண்ணாத்தே 3வது ப்ளாக் அண்ட் ஒயிட் படம்தான் டாப்.

said...

குழந்தைகள் எல்லாமே சூப்பர் !அப்புறம் முதல் கமன்ட்டுதான் நானும்...

said...

எல்லாமே சூப்பரா இருக்கு:))

said...

3 & 6 கலக்கல்:)

said...

cute pictures :)

said...

ஆயில்யன், பிட்டுக்கு ஓட்டு போட்டு=தான் ஆவனுமா? அப்படின்ன என் சீட்டு-ல ஓட்டு எண்-6 வாண்டு-க்கு

said...

3ம் 6ம் பிடிச்சிருக்கு.. கருப்பு வெள்ளையா இருப்பது தான் காரணாமனு தெரியல.. ஆனா அந்த ரெண்டு படத்துலேயும் முகபாவங்கள் அருமை :)

கலக்கல்ஸ் :)

said...

1 - வாபா வா.. போட்டோ எடுக்கவர சொல்லிட்டு எங்க போன?
2 - பல் வரிசை முப்பதிரண்டு தான்.. இது ஜஸ்ட் சாம்பிள்
3 - தூங்குறவளை எழுப்பிட்டு என்ன பண்ணிகிட்டு இருக்கே
4 - திருஷ்டி கழிக்க சொல்லுங்க
5 - ஐயோ நான் யோகா தான் பண்ணேன்.. தூங்கல ஆமா
6 - இப்போ உங்களுக்கு தெரியுதா நான் ஏன் திருஷ்டி பொட்டு வச்சிருக்கேனு

said...

அழாகன பூக்குவியல் :-)

said...

ஆஹா 3 வது படம் அள்ளிக்கிட்டு போகுது மனசை. ஆயில்ஸ் உன் பாட்டி தானே அது??? ராம்கி பொண்ணு இத்தனை வளர்ந்துட்டாளா?? பாரேன் மாயவரத்து மூஞ்சு எல்லாம் ஒரே அச்சுல போட்டு எடுத்த மாதிரியே இருக்கு!!!!

said...

என் பிரண்ட் கமெண்ட்டும் ஆளவந்தான் கமெண்டும் சூப்பரோ சூப்பர்!

said...

சொக்கா பரிசு உனக்கு தான்!!

said...

என் ஓட்டு மூன்றாவதுக்கு

said...

சார்..படம்லாம் எங்க மாயவரத்துல சுட்டதா..நல்லாருக்குங்க...நானும் மாயவரம் தான்...தேரழுந்தூர்...