2008 இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!


''மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனை வரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட் பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வாயிலாக...!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லதொரு சிந்தனையை விதைத்திருக்கின்றீர்கள். முழுதும் வாசிக்கின்றேன்.

கடல் பிரித்தாலும் உணர்வோடு எம் உறவுகளுக்காக நீங்கள் பதியும் பதிவுகளை நன்றியுடன் பகிர்ந்து உங்களுக்கு இனியதொரு ஆண்டு மலர வாழ்த்துக்கள்.

said...

நன்றி பிரபா அண்ணா!

கனவுகள் நிஜங்களாய், நிம்மதியாக, மாறப்போகும் ஆண்டாக மலரட்டும் 2008!

said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் - அருமையான சிந்தனை. கவியரசின் வாழ்க்கை அனுபவங்கள் - சேவை செய்ய ஆசை தான் - முயற்சிப்போம்