ஞாயிறு கொண்டாட்டம் - லொள்ளு சபா

சனி ஞாயிறுகளில் முழுவது ஊர் சுற்றி திரிந்து ஞாயிறு மாலையில் வீடு தேடி கண்டுபிடித்து வந்து கண்ணயரும் போதுதான் கிளாஸ் வாத்தியார் ஃபிளாஷ் மாதிரி சடக்குன்னு வந்து சடக்குன்னு போவார்!

ஆஹா அடுத்த நாள் திங்ககிழமை காலையிலயே ஆரம்பிச்சுடுமே, ஆங்கில பாடம் - கதை சொல்லணுமேன்னு ஒரு அசரிரீ வந்து ஒலித்துச்செல்லும் - அதுக்குப்பிறகும் தூக்கம் வந்து தூங்கமுடியும்ன்னு நீங்க நினைக்கிறீங்களா....?

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!

எதிர்ப்பார்த்து பயந்த மாதிரியே வாத்தியார் கிளாஸ்க்குள்ள நுழைஞ்சு அட்டெண்டென்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஆரம்பிப்பாரு! ( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !)

வழக்கமா நல்ல படிக்கிற பயலுவோ முன்னாடி பெஞ்சுல குந்திக்கிட்டு டாண்டாண்ன்னு சொல்லிட்டு கமுக்கமா உக்காந்திடுவாங்க

ரெண்டு வரிசை தள்ளி இருக்குற பெஞ்சுலேர்ந்துதான் ஆரம்பிக்கும் வாத்தியாருக்கு ஹாப்பி மூட் எங்களுக்கு டார்ச்சர் & டெரரர் மூட் !

அது எப்படி இருக்கும்ங்கறதை ரொம்ப கிளியரா இந்த வீடியோவுல சொல்லியிருக்காங்க பாருங்க!ரைக்டர் கேரக்டர்ல வாத்தியாரை நினைச்சுக்கோங்க!

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !)//

சேம் ப்ளட் :-))))

said...

//ஞாயிறு மாலையில் வீடு தேடி கண்டுபிடித்து வந்து கண்ணயரும் போதுதான் கிளாஸ் வாத்தியார் ஃபிளாஷ் மாதிரி சடக்குன்னு வந்து சடக்குன்னு போவார்!//

ஐயோ...திகிலா இருக்குமே பாஸ்...தூக்கமே வராது..அவ்வ்வ்வ்வ்!!!

said...

//ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!//

:-)))))) எங்களையெல்ல்லாம் வெளில நிக்க வைப்பாங்க பாஸ்!! இதே மாதிரி அடுத்த கிளாஸ்லே நிக்கறவங்க கூட கதைப் பேசிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்!!

said...

////( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !)//

சேம் ப்ளட் :-)))//

அதே! அதே! :)

ரூம்ல போய் பார்க்கிறேன்

said...

நமக்கெல்லாம் இந்த பிரச்சனையே இல்லை பாஸ். க்ளாஸ்க்கு வந்ததும் “சஞ்சாய் காந்தி, லெனினூ 2 பேரும் எந்திரிங்க” அப்டின்னு சொல்லிட்டு தான் க்ளாசே ஆரம்பிப்பார். :) எங்க 2 பேர் தவிர எல்லாரையும் கேள்வி கேட்பார். இப்போ லெனின் வாத்தியாரா இருக்கான். :)

said...

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!]]

அது தான் ஆயில்ஸ் ;)

said...

ரெண்டு வரிசை தள்ளி இருக்குற பெஞ்சுலேர்ந்துதான் ஆரம்பிக்கும் வாத்தியாருக்கு ஹாப்பி மூட் எங்களுக்கு டார்ச்சர் & டெரரர் மூட் !]]


ஹா ஹா ஹா

ஆனாலும் அடுத்த வார திங்கள் கிழமையும் இப்படியே போகுமே பாஸ்

said...

அட! எல்லோருக்கும் அப்படித்தானா???

said...

அன்பின் ஆயில்ஸ்

நாங்கல்லாம் அந்தக் காலத்துலே படிப்புல கெட்டில்ல

சும்மா இங்க்லீசு வெளுத்து வாங்குவோம்ல

கொசுவத்தி நல்லா இருக்கு

said...

நான் படிப்பில கெட்டீங்கிறதல எனக்கு இந்தப் பதிவு பொருத்தமில்ல சாரி ;)

said...

ஆயில்யன்.... இந்த பதிவை எங்கள் எல்லோர் சார்பிலும் போட்டு இருக்கீங்களா??

நன்றி....

said...

சேம் பிளட் பாஸ்!

said...

///கானா பிரபா said...

நான் படிப்பில கெட்டீங்கிறதல எனக்கு இந்தப் பதிவு பொருத்தமில்ல சாரி ;)////
என்னங்க பாஸ்! இப்படி சொல்லிட்டீங்க.. முதலில் உங்க மேல சங்கத்துல சொல்லி நடவடிக்கை எடுக்கனும்.. நல்லா படிக்கிறவங்களுக்கு நம்ம சங்கத்துல என்ன வேலைங்கிறேன்.. ;-)

said...

nice video. I never had a chance to stand on the bench or outside the class :-(

said...

cha..ithellam school days la theriyama poche..:-((

said...

எக்ஸெலண்ட் பதிவு. எக்ஸெலண்ட் விடியோ.

பல மாதங்களுக்கு முன்னர் சிரித்து சிரித்து வாமிட் பண்ணும் அளவு போன நாள் நினைவில் வந்தது.

said...

//கானா பிரபா said...

நான் படிப்பில கெட்டீங்கிறதல எனக்கு இந்தப் பதிவு பொருத்தமில்ல சாரி ;)
//

Repeatikkaren :))))

Anonymous said...

ஏக் காவ் மேன் ஏக் கிஸான் ரகுத்தாத்தா ஞாபகம் வருது. சூப்பர் விடியோ

said...

/தமிழ் பிரியன் said...

///கானா பிரபா said...

நான் படிப்பில கெட்டீங்கிறதல எனக்கு இந்தப் பதிவு பொருத்தமில்ல சாரி ;)////
என்னங்க பாஸ்! இப்படி சொல்லிட்டீங்க.. முதலில் உங்க மேல சங்கத்துல சொல்லி நடவடிக்கை எடுக்கனும்.. நல்லா படிக்கிறவங்களுக்கு நம்ம சங்கத்துல என்ன வேலைங்கிறேன்.. ;-)/

Repeattuuuu...

said...

//கானா பிரபா said...
நான் படிப்பில கெட்டீங்கிறதல எனக்கு இந்தப் பதிவு பொருத்தமில்ல சாரி ;)//

Repeatuuuuuuuuuu ;))

said...

சந்தனமுல்லை said...
//ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!//

:-)))))) எங்களையெல்ல்லாம் வெளில நிக்க வைப்பாங்க பாஸ்!! இதே மாதிரி அடுத்த கிளாஸ்லே நிக்கறவங்க கூட கதைப் பேசிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்!!

ரிப்பீட்டேஏஏஏஏ

said...

எதிர்ப்பார்த்து பயந்த மாதிரியே வாத்தியார் கிளாஸ்க்குள்ள நுழைஞ்சு அட்டெண்டென்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஆரம்பிப்பாரு! ( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !) //

ஆமாம் பாஸ் அது ஒரு அளவில்லாத சந்தோஷத்தை உண்டு பண்ணும் பாஸ். ஆனா அடுத்த செகண்ட் டெர்ரர் எஃபெக்ட்ட் கொடுத்துருவாங்க
:(

said...

வழக்கமா நல்ல படிக்கிற பயலுவோ முன்னாடி பெஞ்சுல குந்திக்கிட்டு டாண்டாண்ன்னு சொல்லிட்டு கமுக்கமா உக்காந்திடுவாங்க //

ம்க்கும் பாஸ், பெரிய பந்தா வேற இதுல.

நம்மள கேள்வி கேக்க எழுப்பி நிக்க வைக்கும் போது நக்கலா ஒரு பார்வை வரும்பாருங்க, அதுக்கு அந்த வாத்தியே தேவல பாஸ்.

said...

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! //

இந்த நிலமை இன்னும் உங்க ஆஃபிஸ்ல கூட கண்டினியூ ஆகுதாமே பாஸ். அப்பிடியா :))))))))))))))))))

said...

வந்தாச்சா தொடங்கியாச்சா...!

said...

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! //

இந்த நிலமை இன்னும் உங்க ஆஃபிஸ்ல கூட கண்டினியூ ஆகுதாமே பாஸ். அப்பிடியா //

:)))))))))))))))))) பாஸ் என்னாதிது!!!!!!!!