இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - என் வானம் அமுதா


தன் கவிதைகள்
தன்னுடைய கவிதைகளின் கவிதைகள் என
கவிதை மேகங்கள் சூழ்ந்திருக்கும்
என் வானம் அமுதா” அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

இயற்கையின் தொடர்பில் என் வானத்தில் இருந்து ஒரு அழகிய கவிதை...!

மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
கா கா என்றே கரைந்திடும் காகம் !!
பக் பக் என்றே அழைத்திடும் மாடப்புறா!!
கண்ணே மணியே காண்பாய் இவற்றை
கவளச் சோற்றினை வாயில் வாங்குவாய்!!!

பரபரவென்ற நகர வாழ்வில்..

கீச் கீச் என்றே அரிசி கொத்தும்
சிட்டுக்குருவி காண்பதில்லை
கீ கீ என்றே பழங்கள் தின்ன
பறக்கும் கிளிக்கூட்டம் தெரிவதில்லை

மருண்ட பார்வையுடன் கழுத்தை சாய்த்து
அழகாய் மைனா பார்ப்பதில்லை
குப்பை கிளறி குஞ்சுகளுடன்
கோழியும் சேவலும் உலவுவதில்லை

கோடை வெயிலுக்கு இதமாகக்
கூவும் கருங்குயிலும் கேட்பதில்லை
உயரே வானில் வட்டமிடும்
பருந்தும் இப்பொழுது பறப்பதில்லை

தோகையுள்ள காகம் போல் இருக்கும்
செம்போத்தைக் கண்டால் கூறும்
"சிவ சிவ" இப்பொழுது கூறுவதில்லை

கழுத்தில் வெண்மை தெரிய
வட்டமிடும் கருடனைக் கண்டு
"கிருஷ்ண கிருஷ்ண" என்றும் சொல்வதில்லை

பொதி சுமந்தும் உதைத்தும் கத்தும்
கழுதைகள் கண்ணில் படுவதில்லை
ஐந்தாறு குட்டிகளுடன் சாக்கடையில் புரளும்
கரும்பன்றிக் கூட்டம் தென்படுவதில்லை

நீர் விடுத்து பாலருந்தும் அன்னம்
கதைகளில் மட்டும் நான் கேட்டது போல்
நான் உணவுண்ண அம்மா காட்டிய
உயிரினங்களைப் பற்றி உனக்கு உரைக்கிறேன்!!!

உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
அதுவரை காகமும் புறாவும் கண்டு
உணவு கொள்வாய் கண்மணியே!!!

டிஸ்கி:- இந்த வீக் எண்ட் பர்த்டே டீரிட்ல ஆச்சி தானே செஞ்சா சாக்லேட் என் சார்பா அமுதா அக்காவுக்கு கொடுப்பாங்களே....!

35 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அமுதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)))

said...

Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to Amudha akka..
Happy Birthday to you :))))))))

said...

வாவ்... கேக் சூப்பர்... நன்றி ஆயில்யன்.... ஆனாலும் என் மேல நம்பிக்கை இல்லாமல் கால் கேக்கை நீங்க எடுத்திருக்கலாமா?

said...

நன்றி G3
நன்றி ஸ்ரீமதி

said...

//அமுதா said...
வாவ்... கேக் சூப்பர்... நன்றி ஆயில்யன்.... ஆனாலும் என் மேல நம்பிக்கை இல்லாமல் கால் கேக்கை நீங்க எடுத்திருக்கலாமா?//

ஹா ஹா ஹா இது சூப்பரு.. :))
வாங்கிட்டு வரதுக்குள்ள அண்ணாவுக்கு பசிச்சிருக்கும் அதான் எடுத்துக்கிட்டார்,விட்டுடுங்க அக்கா... ;))))))))

said...

//ஸ்ரீமதி said...

Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to Amudha akka..
Happy Birthday to you :))))))))
//

ரிப்பிட்டு..ரிப்பீட்டு...ரிப்பீட்டோ ரிப்பீட்டு!! :-)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

said...

ஆமா ட்ரீட் என்ன நாட்டுக்கோழி பிரியாணியா...?

:)

said...

அமுதா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வளங்கள் பலபெற்று வாழ்வாங்கு வாழ்க!

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

இங்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்!

said...

///டிஸ்கி:- இந்த வீக் எண்ட் பர்த்டே டீரிட்ல ஆச்சி தானே செஞ்சா சாக்லேட் என் சார்பா அமுதா அக்காவுக்கு கொடுப்பாங்களே....!/////

பர்த்டே கொண்டாடுறவங்களுக்கு கிப்ட் தானே கொடுப்பாங்க.. இது என்ன புதுசா தண்டனை கொடுக்க சொல்றீங்க... புதசெவி..
;-))

said...

வாழ்த்துகள் சகோதரி.

said...

Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to Amudha
Happy Birthday to you

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

(சைதைக்கு ஒரு பிரியாணி பார்சல் பண்ணிடுங்கப்பா :)))))))))

said...

அமுதாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

நன்றி முல்லை
நன்றி தமிழன்-கறுப்பி
நன்றி அன்புமணி
நன்றி புதுகைத்தென்றல்
நன்றி சென்ஷி
நன்றி தமிழ்பிரியன்
நன்றி ஜமால்
நன்றி அமித்து அம்மா
நன்றி ஹேமா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமுதா.. வாழ்க வளமுடன்..

said...

அமுதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

//தமிழ் பிரியன் said...

///டிஸ்கி:- இந்த வீக் எண்ட் பர்த்டே டீரிட்ல ஆச்சி தானே செஞ்சா சாக்லேட் என் சார்பா அமுதா அக்காவுக்கு கொடுப்பாங்களே....!/////

பர்த்டே கொண்டாடுறவங்களுக்கு கிப்ட் தானே கொடுப்பாங்க.. இது என்ன புதுசா தண்டனை கொடுக்க சொல்றீங்க... புதசெவி..
;-))
//
உங்களுக்கும் பர்த்டே வராமலா போய்டும்..இல்ல..சென்னைக்குத்தான் வராம போய்டுவீங்களா?!!! அப்போ பார்த்துக்கறேன்!! :-))

said...

/சந்தனமுல்லை said...

//தமிழ் பிரியன் said...

///டிஸ்கி:- இந்த வீக் எண்ட் பர்த்டே டீரிட்ல ஆச்சி தானே செஞ்சா சாக்லேட் என் சார்பா அமுதா அக்காவுக்கு கொடுப்பாங்களே....!/////

பர்த்டே கொண்டாடுறவங்களுக்கு கிப்ட் தானே கொடுப்பாங்க.. இது என்ன புதுசா தண்டனை கொடுக்க சொல்றீங்க... புதசெவி..
;-))
//
உங்களுக்கும் பர்த்டே வராமலா போய்டும்..இல்ல..சென்னைக்குத்தான் வராம போய்டுவீங்களா?!!! அப்போ பார்த்துக்கறேன்!! :-))/


தமிழ் பிரியன் ஏன் தான் இப்படி சொந்த செலவுல சூனியம் வச்சுக்குறாரு:))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

Many more happy returns of the day amutha

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

said...

///(சைதைக்கு ஒரு பிரியாணி பார்சல் பண்ணிடுங்கப்பா :)))))))))///

நாங்களும் சாப்பிடுவோம் பிரியாணி.....!!!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Anonymous said...

Happy Birthday Amudha :-)

said...

நன்றியா,

மேடம் பிரியாணி எங்க?

அட்லீஸ்ட் ஒரு கோழியாவது சைதை பக்கம் பறக்க விடுங்க, கேட்ச் புடிச்சு நானே பிரியாணி செஞ்சிக்கறேன் :))))))

said...

அமுதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு ஆம்பூர் பிரியாணி பார்சல் பிளீஸ்

said...

// கானா பிரபா said...

அமுதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு ஆம்பூர் பிரியாணி பார்சல் பிளீஸ்//

ஆயில்ஸ்கிட்டே ஆம்பூர் பிரியாணி கேட்ட பெரிய பாண்டி வாழ்க!! :)))

said...

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

said...

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் அமுதா....

துபாய்க்கு கேக் பார்ச‌ல் உண்டா? அப்ப‌டின்னா, அட்ர‌ஸ் த‌ரேன்... ஒரு பார்ச‌ல் அனுப்புங்கோ..

said...

இங்கும் அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன்.

வாழ்க வளமுடன்.

said...

அமுதாவிற்கு வாழ்த்துகள்.!

நல்லதொரு குழந்தைப்பாடல் கிடைத்தது.

படித்ததும் காக்காவும் புறாவுமாவது மிஞ்சியதே என்ற பெருமூச்சு எழுந்தது.

கொஞ்ச நாளில் புறாவும் பிரியாணியாகிவிடும்னு நினைக்கிறேன்.

said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமுதா.

கவிதை முன்னரே ரசித்திருக்கிறேன் ஆயில்யன், நல்ல பகிர்வு வாழ்த்துப் பதிவில்.