Long, Long Ago....

நண்பனொருவன் வந்த பிறகு வாடா ஊர் சுத்தலாம் என்ற பிறகு” - இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் பாரதி

பசங்க அடிக்கடி கடைத்தெருவுக்கு போறாங்கன்னாலே வீட்ல ரொம்ப யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள்ன்னு தெரிஞ்சா கன்பார்மா ! அதுவும் எங்க வீட்ல சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!

அதுவும் இல்லாம இதுங்க கடைத்தெருவுக்கு போனா உருப்படாது (ஒன்ஸ் உருப்படாதுன்னு சொல்லிட்டாலே அவ்ளோதான்) அப்புறம் கடைத்தெருவுக்கு கும்பலா போறவங்க எல்லாருமே கெட்டவங்கன்னு ஒரு நினைப்பு!

காய்கறி வாங்க கண்டிப்பா பெரியகடைத்தெருதான் போகணும்...! நீ இங்கயே சின்னகடைத்தெருவுல வாங்கிட்டு வான்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பாரதியும் என் கூட வரான்மாம நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் காய்கறிகடைக்கு போகப்போறோம்ன்னு சொன்னா ஆமாம் உன்னையவிட அவன் இன்னும் பயங்கர ரவுடிப்பயன்னு பாக்கிறாப்பார்வையிலயே தெரிஞ்சுமே! இருந்தாலும் எப்படியோ பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா கடைத்தெருவுக்கு ஊர்வலம்/நகர்வலம்/ஃபிகர்வலம் போறதுன்னா நாங்க தவறாம ஒண்ணு செய்வோம்! லெப்ட் டைரக்ஷன்னு ஆப்போசிட்டா நடந்து போறது,ஒண்ணுமே வாங்காம வெறும் நா* சந்தைக்கு போனமாதிரி சீமாட்டி ஜவுளிக்கடை உள்ளாற போயிட்டு வர்றது,ஹோட்டல் கண்ணுல பட்டா போய் எதாச்சும் தின்னு வயித்தை நிரப்புறது (அப்பக்கூட என் காசுதான்!) இப்படியே மணிக்கூண்டுல ஆரம்பிச்சு மயூரா ஹோட்டலை கடந்து லாகடத்துக்குள்ள நுழைஞ்சு ஞானாம்பிகை காலேஜுக்கு தூரத்திலேர்ந்தே ஒரு வணக்கம் வைச்சுட்டு திரும்ப குருஞானசம்பந்தர் ஸ்கூல் வழியா மணிக்கூண்டுல வந்து நின்னு சுத்தியுமுத்தியும்பார்த்துட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறது! இன்னும் ஒண்ணு இருக்கு... கடைத்தெரு சுத்தறதுன்னு கிளம்பிட்டா அதுவும் ரெண்டு மூணு பேரோட கிளம்பிட்டா அந்த கடைப்பக்கம் போகாம வரமுடியுமா? அது வந்து கச்சேரி ரோடு, அண்ணா பகுத்தறிவுமன்றம் போஸ் ஆபிஸு - புரிஞ்சுருக்குமே - யெஸ் வைத்தாவுல வந்து கும்பலோட கும்பலா நின்னு டீ குடிக்கிறது!காசு காய்கறி வாங்க கொடுக்குற காசுதான் - டீ க்குடிக்க காசு வேணும்ன்னு கேட்டா எல்லாம் உனக்கு இங்க ஒரு வாட்டி குடிக்கிற காப்பியே போதும்ன்னு சொல்லிட்டா இப்படித்தான்! (ஹிஹி... யப்போவ் மன்னிச்சுக்கோப்பா) வெட்டியா இருந்து வேலை கிடைச்சப்பிறகு அர்ச்சனா அபிராமி அய்யப்பன்னு ஸ்விட்ச் ஆகி ஒன்லி டபுள் ஸ்ட்ராங்க் காபி நோ டீ பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டோம்!

.கே திரும்ப ரிடர்ன்!

எங்க போறோம்? ஊர் சுத்த போறோம்!

கொஞ்சநேரம் நல்லா உருப்பட்ட ப்ரெண்ட் கடையில உக்காந்திருப்போம் நார்மலா காலை 6.30 ஆரம்பிச்சு நைட்டு 9.30 மூடுவான் எங்கள பார்த்தா ஒன்-அவர் முன்னாடியே வந்துட்டானுங்கடான்னு (ஒரு பாசத்துலதான்ங்க) மூடிடுவான்! அதுக்கு அப்புறம் அவனையும் கூட்டிக்கிட்டு மணிக்கூண்டுலேர்ந்து சுந்தரம் தியேட்டர் வரைக்கும் தார் பாதையில கால் பாதத்தை பதிக்கிறதுதான்! பஸ் ஸ்டாண்ட் உள்ளாற நிறைய பஜ்ஜி கடைங்க இருக்கு...! அதுதான் ஊருக்கு வர்ற எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது!சுந்தரம் தியேட்டருக்கு எதிர்த்தாப்புல எம். சி. பி ஒரு டீக்கடை இருக்கும் அங்க டீயை தவிர போண்டா பஜ்ஜி வடை 5 ரூவாய்க்கே ஆறு ஏழு ஐட்டம் சூடாவும் ஆறியும் கிடைக்கும்! அதை உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே காசை வாங்கி கல்லாவுல போட உள்ளாற ஒருத்தரு முதலாளி வேசம் கட்டி உக்காந்திருப்பாரு!

நானும்
சரி, பாரதியும் & குரூப்பும் சரி வேலையெதுவும் கிடைக்கலைன்னா இது மாதிரி முதலாளி வேசம் கட்டிக்கிட்டு எங்கயாச்சும் குந்திடலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டோம்! (sitting in one place is very important) ஏன்னா அப்ப எவனுமே எங்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு நாங்க குவாலிபிகேஷனோட இல்ல!

எங்களோட குறிப்பா என்னோட வாஸ்து எப்படின்னா அஞ்சாவது முடிக்கறேன் அடுத்த வருசம் ஆறாவது கோ-எஜுகேஷன் சேருலாம்ன்னு நினைச்சா எதோ ரெக்கமண்டேஷன் வாங்கி நேஷனல் ஸ்கூல சேர்த்துவிட்டாங்க சரி அதுல இங்கீலிசு சப்ஜெக்ட் எடுக்கலாம்ன்னு பிரியப்பட்டா (ஹிஹிஹி அதுலதான் கோ-எஜுகேஷன்) உனக்கு தமிழ் மீடியமே ஆண்டவன் கருணைன்னு சொல்லி அனுப்புவாங்க! சரி பத்தாவது முடிச்சுட்டு எப்படியும் குருஞானசம்பந்தர் ஸ்கூல்ல சேர்ந்து நம்ம ஜமால் அண்ணாசி கணக்கா பெரிய ஆளாகிடலாம் (ஃபிகர் மத்தியில பிரபலமும் ஆகிடலாம்ன்னு) ஆனா பாருங்க விதி விளையாடி தடிப்பசங்க படிக்கிற பாலிடெக்னில போய் வுழுந்துட்டேன்!

இதே வாஸ்து பி. படிக்கிறப்பவும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?

பி. முடிசசதும் எக்சிக்யூட்டிவ் இன்ஜினியராகி PWD கொள்ளையடிக்கலாம்ன்னு கனவுல இல்ல இருந்தோம் இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட முதல்வரம்மா டென்ஷனாகி எல்லா வேலைக்கும் ஒரே ஆப்பு அடிச்சு வைக்க கொள்ளையடிக்கிற கனவு காணாமலே போச்சு!

பிரைவேட் கம்பெனிக்கு போகலாம்ன்னா ஆறுமாசத்துக்கு ஒசியில வந்துட்டு போங்கன்னுட்டாங்க அதனால நானும் பாரதியும் முதலாளி வேசம் கட்டிடலாம் சிட்டிங்க் இன் ஒன் பிளேசு தான் முக்கியம் எங்க உக்காந்தா என்னன்னு ஏவிசி காலேஜ் வாசல்ல கடையை போடற முடிவுக்கு வந்துட்ட்டோம்!

யேயெப்ப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எம்மாம் பெரிய பதிவா போய்க்கிட்டேல்ல்ல இருக்கு! போதும் நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை அப்புறம் வந்து சொல்றேன்!

டிஸ்கி:-

1.இது சித்திரகூடத்து தயாரிப்பின் ரீமேக்


2.இதில்
வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!

59 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!//

ROTFL :)))))

said...

//போதும் நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை அப்புறம் வந்து சொல்றேன்!//

அண்ணாச்சி,அந்த மீதி கதை ஜமால் மெயில் திரட்ல உளர ஆரம்பிச்சாரே... அதே கதை தானே ;)))

said...

:))))))))))))

said...

/இதில் வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

மறுபடியுமா?????

said...

/யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!/

டவுசர் பாண்டியா இருந்தப்பவே இப்படின்னா....இப்ப ஊருக்கு போனப்ப என்ன என்ன நினைச்சாங்களோ:))))

said...

/யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!/

டவுசர் பாண்டியா இருந்தப்பவே இப்படின்னா....இப்ப ஊருக்கு போனப்ப என்ன என்ன நினைச்சாங்களோ:))))

said...

////யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!//

பாஸ் வேஷ்டிய கட்டினா தப்பில்ல...கழட்டினா தான் தப்பு.

said...

/அதுவும் இல்லாம இதுங்க கடைத்தெருவுக்கு போனா உருப்படாது /

ஆமா...ஆமா...வெண்கல கடைல யானை பூந்த கணக்கா கடைத்தெருவையே நாசம் பண்ணிட்டு தானே வருவீங்க:)))

said...

/அப்புறம் கடைத்தெருவுக்கு கும்பலா போறவங்க எல்லாருமே கெட்டவங்கன்னு ஒரு நினைப்பு/

பாஸ்...இதுக்கு தான் தனித்தனியா போய் அங்க கும்பலாகிடனும்:)))

said...

//யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!//

குத்துங்க எசமான் குத்துங்க
நான் எங்க காதை சொன்னேன்

said...

மயூரா ஹோட்டலை கடந்து லாகடத்துக்குள்ள நுழைஞ்சு ஞானாம்பிகை காலேஜுக்கு தூரத்திலேர்ந்தே ஒரு வணக்கம் வைச்சுட்டு திரும்ப குருஞானசம்பந்தர் ஸ்கூல் வழியா மணிக்கூண்டுல வந்து நின்னு சுத்தியுமுத்தியும்பார்த்துட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறது!

hee hee இந்தக் கதை எனக்கு தெரியுமே, மீதிய ஜமால் சகோ வந்து சொல்லுவாரு பாருங்களேன்

செம இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும் :)))))

said...

யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!

Appadiyaa sethi???

said...

ROTFL!! :))

said...

soke soke ah eluthureenga boss...nalla kethu..

said...

//ஆமாம் உன்னையவிட அவன் இன்னும் பயங்கர ரவுடிப்பயன்னு பாக்கிறாப்பார்வையிலயே தெரிஞ்சுமே!//

avvvvv..என்ன ஒரு டேமேஜ்!! :))

said...

நானும் சரி, பாரதியும் & குரூப்பும் சரி வேலையெதுவும் கிடைக்கலைன்னா இது மாதிரி முதலாளி வேசம் கட்டிக்கிட்டு எங்கயாச்சும் குந்திடலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டோம்! (sitting in one place is very important) ஏன்னா அப்ப எவனுமே எங்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு நாங்க குவாலிபிகேஷனோட இல்ல!


பாஸ் உங்க அளவிலா நேர்மை எனக்கு புடிச்சிருக்கு பாஸ்

பஜ்ஜி கடை பாஸ், எதிர்பதிவு ஏகாம்பரம், என பல அடைமொழிகளை இந்தப் பதிவின் மூலம் பெறுகிறார் என்பதை ஏக மனதுடன் இந்தப் பின்னூட்ட மேடையில் அறிவித்துக்கொள்கிறேன் :)))))

said...

\\ எங்கள பார்த்தா ஒன்-அவர் முன்னாடியே வந்துட்டானுங்கடான்னு (ஒரு பாசத்துலதான்ங்க) மூடிடுவான்!//

நான் முதல்ல வாசிக்கும் போது அந்த அடைப்புக்குள்ள இருக்கறதப் பாக்கல.. :))

said...

/Comment moderation has been enabled. All comments must be approved by the blog author./

நான் வெளிநடப்பு செய்றேன்!

said...

நிஜமா நல்லவன் said...
/இதில் வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....


ஆக்ச்சுவலா இந்த எஃபெக்க்ட நாங்கதான் தரணும் :)))))))

said...

எல்லாரும் மீதிக்கதைக்குத்தான் ஆவலா இருக்காங்க :))

said...

//வெட்டியா இருந்து வேலை கிடைச்சப்பிறகு அர்ச்சனா அபிராமி அய்யப்பன்னு ஸ்விட்ச் ஆகி ஒன்லி டபுள் ஸ்ட்ராங்க் காபி நோ டீ பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டோம்!
//

ஹ்ஹி....என்னமா சுத்தியிருக்கீங்க பாஸ்...கடமை..கண்ணியம்...மாயவரமா!!:))

said...

//எங்க போறோம்? ஊர் சுத்த போறோம்!//

டோரா மாதிரியே இருக்கு...:))

said...

அதனால நானும் பாரதியும் முதலாளி வேசம் கட்டிடலாம் சிட்டிங்க் இன் ஒன் பிளேசு தான் முக்கியம் எங்க உக்காந்தா என்னன்னு //

கொள்கைப்பிடிப்புல இப்ப வரைக்கும் உறுதியா இருக்கீங்க பாஸ்

இப்பவும் சிட்டிங்க் இன் ஒன் ப்ளேஸ் தானே :))))))))))

said...

//
பி.இ முடிசசதும் எக்சிக்யூட்டிவ் இன்ஜினியராகி PWD ல கொள்ளையடிக்கலாம்ன்னு கனவுல இல்ல இருந்தோம்//

:)))))) avvvvvvvvvvv!

said...

ஆண்டவன் கருணைன்னு சொல்லி அனுப்புவாங்க! சரி பத்தாவது முடிச்சுட்டு எப்படியும் குருஞானசம்பந்தர் ஸ்கூல்ல சேர்ந்து நம்ம ஜமால் அண்ணாசி கணக்கா பெரிய ஆளாகிடலாம் (ஃபிகர் மத்தியில பிரபலமும் ஆகிடலாம்ன்னு) ஆனா பாருங்க விதி விளையாடி தடிப்பசங்க படிக்கிற பாலிடெக்னில போய் வுழுந்துட்டேன்!


விதி சரியா விளையாடி இருக்கு பாஸ் உங்க பதிவுல ச்சே வாழ்க்கையில.

said...

ஒ.கே திரும்ப ரிடர்ன்!

எங்க போறோம்?

ஆச்சி பதிவ உல்டா பண்ணப்போறோம்.

said...

//சிட்டிங்க் இன் ஒன் பிளேசு தான் முக்கியம் //

உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது பாஸ்!! அவ்வ்வ்! உங்க குரூபுக்கே என்னா ஒரு கடமை...சான்சே இல்ல!! :)) மீதியை ஜமால் வந்து தொடரும் படி கேட்டுக்கொள்கிறோம்..ஹிஹி!

said...

சுந்தரம் தியேட்டர் வரைக்கும் தார் பாதையில கால் பாதத்தை பதிக்கிறதுதான்! //

என்னமோ க்ருஷ்ணர் பாதம் பதிக்கிற ஃபீலிங்கோட சொல்றீங்க

ஆஃப்ட்ரால் உங்க கால் பாஸ் அது ஞாபகமிருக்கட்டும் :)

said...

2.இதில் வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!//

சாரி பாஸ் அப்படி நினைச்சு தான் படிச்சு தொலைச்சிட்டேன் :(

said...

////யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!////

bayam reason neenga sonathu thana? :D :D tortoise kosuvathi factorye suthuthu blogla :) oray pugai mandalam

said...

ஹா ஹா ஹா

துவங்கியாச்சா ஆட்டம்

வந்துட்டேஏஏஏஏஏஏஏஏன்

said...

சாரி பாஸ் அப்படி நினைச்சு தான் படிச்சு தொலைச்சிட்டேன் :(]]

ரெஃப்ரெஷ் பன்னுங்க இருக்கும்

தொலைஞ்சி போகாது ...

said...

G3 said...

//போதும் நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை அப்புறம் வந்து சொல்றேன்!//

அண்ணாச்சி,அந்த மீதி கதை ஜமால் மெயில் திரட்ல உளர ஆரம்பிச்சாரே... அதே கதை தானே ;)))]]


ஹா ஹா ஹா

நல்லவங்களே நீங்களுமா இருந்தீங்க திரட்ல :)

said...

டவுசர் பாண்டியா இருந்தப்பவே இப்படின்னா....இப்ப ஊருக்கு போனப்ப என்ன என்ன நினைச்சாங்களோ:))))]]


ஹா ஹா ஹா

உங்க கற்பனைக்கு --- பாஸ்

ஏன் ஏன் ஏன் ...

said...

யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!]]

ஆனாலும் பாஸ் - உங்க நேர்மை ரொம்ப ரொம்ப ...

said...

ஆமா...ஆமா...வெண்கல கடைல யானை பூந்த கணக்கா கடைத்தெருவையே நாசம் பண்ணிட்டு தானே வருவீங்க:)))]]


ஹலோ ஹலோ

ஏன் ஏன் இப்படி நம்ம ஆயில்ஸை டேமேஜ் பன்றீங்க ...

said...

பாஸ்...இதுக்கு தான் தனித்தனியா போய் அங்க கும்பலாகிடனும்:)))]]


ஹா ஹா ஹா

இங்கே ஆன மாதிரியா ...

said...

குத்துங்க எசமான் குத்துங்க
நான் எங்க காதை சொன்னேன்]]


இன்னுமா காது குத்தலை

ஏன் சகோ ...

said...

எல்லாரும் மீதிக்கதைக்குத்தான் ஆவலா இருக்காங்க :))]]


ஆஹா

ஒரு மார்க்கமா தான் கிளம்பிட்டாங்களோ

நாமும் ஒரு Long, Long Ago ...


சரி சரி ...

said...

hee hee இந்தக் கதை எனக்கு தெரியுமே, மீதிய ஜமால் சகோ வந்து சொல்லுவாரு பாருங்களேன்]]

எல்லாரும் மீதிக்கதைக்குத்தான் ஆவலா இருக்காங்க :))]]

மீதியை ஜமால் வந்து தொடரும் படி கேட்டுக்கொள்கிறோம்..ஹிஹி!]]

ஆஹா! தானா வந்து ...

இதைத்தான் சொ.செ.சூ - சொல்லுவாங்களா ...

said...

ஒ.கே திரும்ப ரிடர்ன்!]]

விஜய்காந்த் இரசிகரா பாஸ் நீங்க

said...

பஸ் ஸ்டாண்ட் உள்ளாற நிறைய பஜ்ஜி கடைங்க இருக்கு...! அதுதான் ஊருக்கு வர்ற எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது!]]


மெய்யாலுமா பாஸ்

இரு 10ஆவது முழுங்கிட்டு போக மாட்டீங்களா ...

said...

நம்ம ஜமால் அண்ணாசி கணக்கா பெரிய ஆளாகிடலாம் (ஃபிகர் மத்தியில பிரபலமும் ஆகிடலாம்ன்னு) ]]


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


------------------

மிச்சம் இங்கேயே சொல்லனுமா

said...

:)))))மறுபடியுமா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

எங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.
எனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.
வாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.
இங்கு கதவே இல்ல ........

said...

//பசங்க அடிக்கடி கடைத்தெருவுக்கு போறாங்கன்னாலே வீட்ல ரொம்ப யோசிப்பாங்க! //

மக்கா, ஆரம்பமே ஓவர் பில்-அப்பா இருக்கே!!!

said...

/இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட முதல்வரம்மா டென்ஷனாகி எல்லா வேலைக்கும் ஒரே ஆப்பு அடிச்சு வைக்க கொள்ளையடிக்கிற கனவு காணாமலே போச்சு!//
 
ஒரு 60 40 அக்ரீமெண்ட் போட்டிருந்தா அம்மா உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருப்பாங்க :-)
 
பாஸ்.. இந்த காய்கறி வாங்க சூட்கேஸ்தான எடுத்திட்டுப் போவீங்க?

said...

:))

said...

/இதில் வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்//

ஓ.. இப்படி பதிவர்கள் இருக்கிறார்களா எனக்கு தெரியாதே?

;)

said...

//யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!//

விளங்கிடும்!


இவரை கடத்திக்கொண்டு போய் கல்யாணம் பண்ணுற அளவுக்கா அந்த ஊரு நிலமை இருக்கு!!

அந்த ஊரு இருந்தென்ன, இல்லாம போயென்ன?

;))

said...

அண்ணே..இது ரொம்பப் பெரிசு, இதை ரீமேக் பண்ண முடியாது

:)

said...

/அதுவும் எங்க வீட்ல சொல்லவே வேணாம். /
அப்பிடி இருந்தே இப்புடி...ம்ம்ம்ம்!!!

said...

மாயவரம் போய் விட்ட வந்த மாதிரி இருந்தது.

said...

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

said...

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

:))))..அய்யோ ;))))

said...

ஆயில்யன்,பொறுமை இல்லைன்னாலும் வாசிச்சேன்.

Anonymous said...

அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சு வுடறீங்களா :)

said...

:-))))))