B.E - குரூப் ஸ்டடி & ரிசல்ட்

பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இந்த ரிசல்ட் டே அன்னிக்கு கொஞ்சூண்டு கூட இருந்ததில்ல! கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்! மாப்ளே நாளைக்கு ரிசல்ட் வருதுடா அப்படின்னு நண்பன் எவனாச்சும் பீதியோட சொன்னா ஏண்டா இன்னிக்கே கொடுத்து தொலைக்கலாம்ல அப்படின்னு ஒரு கரிசனமான கேள்வி அவனை கண்டிப்பாக டென்ஷனாக்கி திட்ட வைக்கும்!

அப்பொழுது வரும் சமாதான வரிகளில் நாம எழுதுனதை வைச்சே நாம தெரிஞ்சுகலாம்டா பாஸா ஃபெயிலான்னு அப்படின்னு...! ராசா நீ சொல்றதெல்லாம் ஸ்கூலோட நிப்பாட்டிக்கோ இது காலேஜ் லெவல் எவனாச்சும் லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க!

பேச்சிலர் ஆப் இன் ஜினியரிங்க்கு அதுவும் பெருங்கும்பலோட வந்தப்போதுதான் லைட்டா ஒரு பயம் வந்துச்சு ஆஹா மேட்டர் பெயிலாச்சுன்னா கும்பல்ல செப்ரேட் காமிக்கமுடியாதே அப்படி இப்படின்னு ஏகப்பட்ட மனக்குழப்பங்கள் வந்து செல்லும்!

இதுல மாசம் மாசம் அசைன்மெண்ட் டெஸ்ட் இன்னபிற அட்டெண்டன்ஸ் சங்கதிகளுக்கு கட்டுப்பட்டு காலேஜ்ல கூத்துக்கட்டணும்னா நொம்ப்பவே கஷ்டம்! இதெல்லாம் இல்லாம எக்ஸாமுக்கு முந்தாகாட்டி ஒரு பத்து நாள் விடுற (எக்ஸாம்க்கு இதுலயாச்சும் படிச்சு பொழைச்சுங்கோங்கடாங்க்ற ரேஞ்சுல) லீவுல பயமக்க குரூப் ஸ்டடி வைக்கும்! அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு படிக்கிற்தான்னு ஒரு பெரும் குழப்பம் ஓடும்! குரூப் ஸ்டடின்னா எல்லாரும் ஒரே சப்ஜெக்ட் வைச்சு படிக்கிறதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தா இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்! அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!

மீதி இருக்கிற மனசும் மொத்தமா பெயிலாகிவிடாம இருக்க வேண்டி குரூப் ஸ்டடிக்கு டாட்டா சொல்லிட்டு தனிக்குடித்தனம் வந்து ஒரு வழியா ஒப்பேத்தி எக்ஸாம் அன்னிக்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை செண்டிமெண்ட்ஸ்களையும் கடைப்பிடித்து பேப்பர் நிரப்பி முன்பே முடித்துவிட்டு கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டி சாய்ஸ் கொஸ்டீன் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா பில்ட்-அப் கொடுத்து,வழக்காமாய் கன்னாபின்னாவென்று முடிச்சுட்டு பிணைத்த பேப்பரினை கொடுத்து வெளியே வருகையில் வயிற்றில் அமிலம் கரைக்க காத்திருக்கும் கூட்டத்திடமிருந்து எஸ்ஸாகி எல்லா பரீட்சைகளையும் முடித்து எக்ஸ்ட்ரா லீவு என் ஜாய் செய்து விட்டு வந்து காத்திருக்கும் நாளில் ரிசல்ட் அட்மின் பில்டிங்கில் போட்டிருக்கும் ரிசல்டினை இன்று வரை நேரில் சென்று பார்த்தது கிடையாது முன்பே வந்து கையிலே பஸ் டிக்கெட் பின்புறத்திலோ அல்லது ஏதேனும் ஒரு குப்பையில் கிடக்கும்பேப்பரில் கிறுக்கி எடுத்து வந்திருக்கும் எண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ
கடவுளின் கிருபை என்றே இப்பொழுதும் நினைக்க தோன்றுகிறது !

டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !

80 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]

எதுக்கு பாஸ்

எம்80 காணோமேன்னா ...

said...

லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க]]

உண்மை உண்மை

said...

அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு படிக்கிற்தான்னு ஒரு பெரும் குழப்பம் ஓடும்]]

நமகெல்லாம் அந்த குழப்பமே இருக்காது பாஸ்

படிக்கனுமா வேண்டாமா இப்படித்தான் யோசிப்போம் ...

said...

அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
]]

ஹா ஹா ஹா

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...

said...

வந்திருக்கும் எண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ
கடவுளின் கிருபை என்றே இப்பொழுதும் நினைக்க தோன்றுகிறது !
]]

நெகிழ வச்சிட்டீங்க பாஸ் ..

said...

//டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

ரைட்டு பாஸ்!!

said...

//நட்புடன் ஜமால் said...
பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]

எதுக்கு பாஸ்

எம்80 காணோமேன்னா ..//

முதல் லைனை மட்டும் படித்துவிட்டு ஓடிப்போன ஜமால அண்ணனை வனமையாக கண்டிக்கிறேன்

said...

பாஸ் இதெல்லாம் அநியாயம். நான் கமெண்ட் போடும் போது ஜமால் அண்ணாத்த கமெண்ட் ஒன்னு தான் இருந்தது. இப்ப நாலைஞ்சு இருக்குதே!

said...

முதல் லைனை மட்டும் படித்துவிட்டு ஓடிப்போன ஜமால அண்ணனை வனமையாக கண்டிக்கிறேன்]]

முதல் கமெண்ட்டை மட்டும் படித்த உங்களை ...

said...

பாஸ் இதெல்லாம் அநியாயம். நான் கமெண்ட் போடும் போது ஜமால் அண்ணாத்த கமெண்ட் ஒன்னு தான் இருந்தது. இப்ப நாலைஞ்சு இருக்குதே!]]

இப்பவும் நாம இரண்டு பேர் மட்டும் தான் கமெண்ட்டியிருக்கோம் ...

Anonymous said...

வர வர உங்க மொக்கைக்கு அளவேயில்லாம்ம போச்சு பாஸ்!!!!

said...

// புனிதா||Punitha said...
வர வர உங்க மொக்கைக்கு அளவேயில்லாம்ம போச்சு பாஸ்!!!//

புனிதா எங்க பாஸ் எவ்வலவு ஃபீல் பண்ணி கொசுவத்தி சுத்தியிருக்காரு. இத போய் மொக்கைன்றீங்களே. வீட்டுக்கு ஆட்டோ விடனுமா?

said...

//முதல் கமெண்ட்டை மட்டும் படித்த உங்களை ..//

ஜமால் அண்ணே அதான் சொன்னேன்ல நான் பார்க்கும் போது உங்க கமெண்ட் ஒன்னு தான் இருந்த்து....ஆனா கமெண்ட் போட்டுதும் பார்த்தா ஐஞ்சு கமெண்ட் இருக்கு. இது ஏதோ வெளிநாட்டு சதியா இருக்கும்னு தோணுது

said...

வீட்டுக்கு ஆட்டோ விடனுமா?]]

உபதொழிலா ...

said...

/*அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
]]

ஹா ஹா ஹா

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...

*/
ரிப்பீட்டு....

said...

இத்தன வருஷமா பி.ஈ குருப் ஸ்டடி செஞ்சு இந்த வருஷம் தான் பாஸ் ஆனீங்களா பாஸ் ?

said...

குரூப் ஸ்டடி யார் யாரு பாஸ்

சென்ஷி
தமிழ்பிரியன்
கானா பிரபா
நிஜமா நல்லவரு

இவங்கல்லாமா?

அவங்க ரிசல்ட் என்ன பாஸ் ? :)))))))))))))))

said...

நட்புடன் ஜமால் said...
பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]

எதுக்கு பாஸ்

எம்80 காணோமேன்னா ...

இல்ல,
ஃபிகரை காணோம்னு, அப்புறம் தான் உங்க பதிவுல வந்து கண்டுபுடிச்சிட்டாய்ங்களே :)

said...

டாட்டா சொல்லிட்டு தனிக்குடித்தனம் வந்து ஒரு வழியா ஒப்பேத்தி //

அப்பவே தனிக்குடித்தனமா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

said...

ஹிஹி..பாஸ்...இதெல்லாம் உங்க ஆட்டோபயாகிராஃபில வர வேண்டிய அத்தியாயம் பாஸ்!! :-) எத்தனை உண்மைகளை உள்ளடக்கியிருக்கு....சான்ஸே இல்ல பாஸ்!! :))

said...

//ராசா நீ சொல்றதெல்லாம் ஸ்கூலோட நிப்பாட்டிக்கோ இது காலேஜ் லெவல் எவனாச்சும் லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க!//

:-))

said...

//எக்ஸாம் அன்னிக்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை செண்டிமெண்ட்ஸ்//

அதையும் சொல்லிடுங்களேன் பாஸ்!! :-)

said...

//Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

இத்தன வருஷமா பி.ஈ குருப் ஸ்டடி செஞ்சு இந்த வருஷம் தான் பாஸ் ஆனீங்களா பாஸ் ?//

அ.அ பாஸ்...இதுலே ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது! ஆயில்ஸ் பாஸ் முதல்லே தனிக்குடித்தனம் வந்துட்டு அப்புறம் குரூப் ஸ்டடி பண்ணி இப்போ பாஸ் ஆகியிருக்கார்...அப்படித்தானே பாஸ்!! :-)

said...

/*அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
]]

ஹா ஹா ஹா

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...

*/
ரிப்பீட்டு....

said...

அப்போ நீங்க படிச்சதா சொல்றீங்க?? இத நாங்க ஒத்துக்கனுமா இப்போ? ஓகே விடுங்க...

said...

நால்லா இருக்குங்க.
அப்படியே எனக்கும் கொசுவத்தி சுத்துது. நாங்கலாம் பரீட்சைக்கு போவதா வேண்டாமான்னு தான் யேசிப்போம். அப்படியே பரிட்ச்சை முடிஞ்ச அரை மணிக்கெல்லாம் பையில்வான் ஓய்ன்ஸ்ல பட்டறைய போட்ருவோம்.

said...

//பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இந்த ரிசல்ட் டே அன்னிக்கு கொஞ்சூண்டு கூட இருந்ததில்ல! கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்!//

பாலிடெக்னிக் படிக்கறப்போவே சிறுவனா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு//

காலேஜ்ல ஜாயிண்ட் அடிக்கறதுன்னா வேற அர்த்தம் தானே??

//அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

ரெம்ப தேறிட்டீங்க "தல".. வேற என்னத்த சொல்ல!!!!

said...

//பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு//

பெரியார்மணியம்மை பாலிடெக்னிக் பக்கமா ராசா?

said...

//இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்!//

எங்க பய மக்காவுக்கு இப்படி எல்லாம் வராது, மச்சி உனக்கு டீயா, எனக்கு கிங்ஸ், உனக்கு வில்ஸ் இப்படிதான் ஓடும்!

said...

// குசும்பன் said...

//பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு//

பெரியார்மணியம்மை பாலிடெக்னிக் பக்கமா ராசா?//

LoL! with M80...thaaney aayils!! :-))

said...

ம்ம்ம்.எங்க கொசுவத்தியவும் கொளுத்தி விட்டுட்டிங்க...... :))

said...

/இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்!//

நானெல்லாம் ரம்மி கத்துகிட்டதே இந்த குருப் ஸ்டடிலதான்...

said...

avvvvvvvv...baas...ipovum apdi than baas odtuhu polapu..aapicela ekkuthappa ethachum rekost vantha ithey puli karaikara matter thaan

said...

/கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்!

நீங்க பெரிய அறிவாளி அண்ணே.....சிறுவனாக இருக்கும் போதே பாலிடெக்னிக் ல படிச்சி இருக்கீங்க:)

said...

/பேச்சிலர் ஆப் இன் ஜினியரிங்க்கு அதுவும் பெருங்கும்பலோட வந்தப்போதுதான் லைட்டா ஒரு பயம் வந்துச்சு ஆஹா மேட்டர் பெயிலாச்சுன்னா கும்பல்ல செப்ரேட் காமிக்கமுடியாதே/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....M80 மேட்டருக்கு இங்க தான் ஸ்டார்ட்டிங் பாயிண்டு இருந்துச்சா:)))

said...

/அப்படி இப்படின்னு ஏகப்பட்ட மனக்குழப்பங்கள் வந்து செல்லும்!/

M80 ய லெப்ட்ல ஒடிக்கிறதா இல்லை ரைட்ல வளைக்கிறதா....இல்லாங்காட்டி ஸ்ட்ரைட்டா போறதான்னு ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்திருக்கீங்க போல:)))

said...

/
டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !/

அண்ணே...உங்க பிரண்ட்ஸ் எல்லாம் போன் பண்ணி வேற சொல்லுராய்ங்க....என்னமோ எழுதுறான்.....ஒண்ணுமே புரியலைன்னு:))))

said...

pazaiya kaalaththu ninaivellaam meedduddeengga..

konjam irungga.. kannai thodaichikkiren.

hmm.. ninaithale inikkum (ada.. prithiviraj nadicha padam perai sollalaingga.. nejamaalume ninaithale inikkum kaalam athu ). :-)

said...

//டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

அவங்களுக்கு மட்டும் தானே அண்ணே? :)

said...

இதெல்லாம் இல்லாம எக்ஸாமுக்கு முந்தாகாட்டி ஒரு பத்து நாள் விடுற (எக்ஸாம்க்கு இதுலயாச்சும் படிச்சு பொழைச்சுங்கோங்கடாங்க்ற ரேஞ்சுல)//

ஆமா பாஸ் ஆனா அதையும் வேஸ்ட் பண்ணுறாங்களே என்ன செய்யலாம் :(

said...

ண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ//

51 இல் அப்படி என்ன விஷேசம் சின்னப்பாண்டி

அமிர்தவர்ஷினி அம்மா said...

குரூப் ஸ்டடி யார் யாரு பாஸ்

சென்ஷி
தமிழ்பிரியன்
கானா பிரபா
நிஜமா நல்லவரு

இவங்கல்லாமா?

அவங்க ரிசல்ட் என்ன பாஸ் ? //

பாஸ், அடுத்த கும்மி பதிவு லிஸ்டில் ஆச்சி பேரை எடுத்திட்டு மேலே இருக்கிறவங்க பேரை போட்டீங்கன்னா வசதியா இருக்கும்.

said...

நல்லாத்தான் கலக்குறிங்க..
அசத்தலா இருக்கு..

said...

//நட்புடன் ஜமால் said...
பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]
எதுக்கு பாஸ்
எம்80 காணோமேன்னா ..//
அவ்வ்வ் இன்னுமா அண்ணாச்சி அதை தேடிக்கிட்டிருப்போம் காலேஜ் வந்தா அதுக்கேத்த மாதிரி தேடல் தொடங்கிடணும் ஹய்யோ ஹய்யோ! :)

said...

// நட்புடன் ஜமால் said...
லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க]]

உண்மை உண்மை//
ஸேம் பீலிங்கா ரைட்டு!

said...

// நட்புடன் ஜமால் said...
அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு படிக்கிற்தான்னு ஒரு பெரும் குழப்பம் ஓடும்]]

நமகெல்லாம் அந்த குழப்பமே இருக்காது பாஸ்!

படிக்கனுமா வேண்டாமா இப்படித்தான் யோசிப்போம் ...//

புரியுது ஹிஸ்டரி & ஜியோகிராபியெல்லாம் தேடி பார்க்கணும் ஊரு பக்கம் போயி....! :)

said...

// நட்புடன் ஜமால் said...
அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
ஹா ஹா ஹா

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...//
இந்த டயலாக் என்னிய நொம்பவே இம்பரஸு பண்ணிப்புட்டு!:)

said...

// நட்புடன் ஜமால் said...
வந்திருக்கும் எண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ
கடவுளின் கிருபை என்றே இப்பொழுதும் நினைக்க தோன்றுகிறது !
]]

நெகிழ வச்சிட்டீங்க பாஸ் ..//
நோ! நோ!! பீலிங்க்ஸு கூடாது!

said...

// ☀நான் ஆதவன்☀ said...
//டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

ரைட்டு பாஸ்!!//
ஏன் ராசா இங்கன ரைட்டு வுடற? – ஜூட் விட்டாச்சுன்னு சிக்னல்கொடுக்கறீயாளே...! :)

said...

// ☀நான் ஆதவன்☀ said...
//நட்புடன் ஜமால் said...
பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]

எதுக்கு பாஸ்

எம்80 காணோமேன்னா ..//

முதல் லைனை மட்டும் படித்துவிட்டு ஓடிப்போன ஜமால அண்ணனை வனமையாக கண்டிக்கிறேன்//
பாஸ் நொம்ப கண்டிக்காதீங்க நாள பின்ன வந்துபோவணும்ல

said...

// ☀நான் ஆதவன்☀ said...
பாஸ் இதெல்லாம் அநியாயம். நான் கமெண்ட் போடும் போது ஜமால் அண்ணாத்த கமெண்ட் ஒன்னு தான் இருந்தது. இப்ப நாலைஞ்சு இருக்குதே!//
நாந்தான் பாஸ் ரீலிசு பண்ற நேரத்துல ஆபிஸ்ல லைட்டா தூங்கிட்டேன் சாரி ! :(

said...

// நட்புடன் ஜமால் said...
முதல் லைனை மட்டும் படித்துவிட்டு ஓடிப்போன ஜமால அண்ணனை வனமையாக கண்டிக்கிறேன்]]
முதல் கமெண்ட்டை மட்டும் படித்த உங்களை ...//
அய்யோ பதிலுக்கு பதில் கோவப்படுறீங்களே :)))

said...

// புனிதா||Punitha said...
வர வர உங்க மொக்கைக்கு அளவேயில்லாம்ம போச்சு பாஸ்!!!!//

அவ்வ்வ்வ்வ் அந்த ஸ்கேல்லு எங்க விக்கிறாங்க :)

said...

// ☀நான் ஆதவன்☀ said...
// புனிதா||Punitha said...
வர வர உங்க மொக்கைக்கு அளவேயில்லாம்ம போச்சு பாஸ்!!!//

புனிதா எங்க பாஸ் எவ்வலவு ஃபீல் பண்ணி கொசுவத்தி சுத்தியிருக்காரு. இத போய் மொக்கைன்றீங்களே. வீட்டுக்கு ஆட்டோ விடனுமா?//

அட சும்மா இருங்க தம்பி பிறகு அக்கா ஜம்முன்னு ஆட்டோவுல ஏறி உக்காந்துக்கிட்டு நம்ம வூட்டுக்கு வந்து கும்மிடப்போறாங்க!

said...

///அமுதா said...
/*அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
ஹா ஹா ஹா

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...

*/
ரிப்பீட்டு...//
சமயம் பார்த்து அட்டாக் பண்ண நிறைய பேர் ரெடியாத்தான் இருக்காங்க :(

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
இத்தன வருஷமா பி.ஈ குருப் ஸ்டடி செஞ்சு இந்த வருஷம் தான் பாஸ் ஆனீங்களா பாஸ் ?//

கேள்வி கேக்குறது நொம்ப்ப ஈசி பாஸ் ஆனா பதில் சொல்றது நொம்ப நொம்ப கஷ்டம்!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
குரூப் ஸ்டடி யார் யாரு பாஸ்

சென்ஷி
தமிழ்பிரியன்
கானா பிரபா
நிஜமா நல்லவரு

இவங்கல்லாமா?

அவங்க ரிசல்ட் என்ன பாஸ் ? :)))))))))))))))//

என் கூட சேர்ந்தா என்ன எல்லாருமே ஆல் பாஸ் பார்ட்டீங்கதான்!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நட்புடன் ஜமால் said...
பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம்]]
எதுக்கு பாஸ்
எம்80 காணோமேன்னா ...
இல்ல,
ஃபிகரை காணோம்னு, அப்புறம் தான் உங்க பதிவுல வந்து கண்டுபுடிச்சிட்டாய்ங்களே :)//

ஐய்ய்ய அந்த பிகரு இல்லன்னு அப்பவே சொல்லிட்டேன் பாஸ் !

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
டாட்டா சொல்லிட்டு தனிக்குடித்தனம் வந்து ஒரு வழியா ஒப்பேத்தி //

அப்பவே தனிக்குடித்தனமா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//
என் வாழ்க்கையில எதாச்சும் ஆச்சர்யமான விசயங்கள் நடக்குமான்னு நீங்களும் எம்புட்டு ஆர்வமா இருக்கீக வெரிகுட் பாஸ்!

said...

// சந்தனமுல்லை said...
ஹிஹி..பாஸ்...இதெல்லாம் உங்க ஆட்டோபயாகிராஃபில வர வேண்டிய அத்தியாயம் பாஸ்!! :-) எத்தனை உண்மைகளை உள்ளடக்கியிருக்கு....சான்ஸே இல்ல பாஸ்!! :))//

ஓ...! நான் ஆட்டோபயோகிராபி வேற எழுதணுமா? அவ்வ்வ்வ்!

said...

/ /சந்தனமுல்லை said...
//எக்ஸாம் அன்னிக்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை செண்டிமெண்ட்ஸ்//

அதையும் சொல்லிடுங்களேன் பாஸ்!! :-)/

ஹய்யோ போஙக பாஸ் எனக்கு வெக்கம் வெக்கமா இருக்கு! :))

said...

// சந்தனமுல்லை said...
//Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

இத்தன வருஷமா பி.ஈ குருப் ஸ்டடி செஞ்சு இந்த வருஷம் தான் பாஸ் ஆனீங்களா பாஸ் ?//

அ.அ பாஸ்...இதுலே ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது! ஆயில்ஸ் பாஸ் முதல்லே தனிக்குடித்தனம் வந்துட்டு அப்புறம் குரூப் ஸ்டடி பண்ணி இப்போ பாஸ் ஆகியிருக்கார்...அப்படித்தானே பாஸ்!! :-)//

என்னாடா டேமேஜ் சிங்கிளா நடக்குதேன்னு பார்த்தேன் நீங்க அவுங்க கூட சேர்ந்துக்கோங்க பாஸ் அமோகமா இருக்கும்!

said...

// G3 said...
/*அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!
]]

ஹா ஹா ஹா
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ...
*/
ரிப்பீட்டு....//

ரைட்டு!

said...

// ஸ்ரீமதி said...
அப்போ நீங்க படிச்சதா சொல்றீங்க?? இத நாங்க ஒத்துக்கனுமா இப்போ? ஓகே விடுங்க...//

நம்பவே மாட்டிக்கறாங்களேப்பா! :(

said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
நால்லா இருக்குங்க.
அப்படியே எனக்கும் கொசுவத்தி சுத்துது. நாங்கலாம் பரீட்சைக்கு போவதா வேண்டாமான்னு தான் யேசிப்போம். அப்படியே பரிட்ச்சை முடிஞ்ச அரை மணிக்கெல்லாம் பையில்வான் ஓய்ன்ஸ்ல பட்டறைய போட்ருவோம்.//

நன்றி பாலகுமாரன்!
ஒயின்ஸாப்பு பக்கம் போறதுக்கு தனியா ஒரு குரூப்பு யோசிக்கும்!

said...

// R.Gopi said...

//அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

ரெம்ப தேறிட்டீங்க "தல".. வேற என்னத்த சொல்ல!!!!//

அவ்வ்வ்வ்வ்வ் !!!

அண்ணாச்சி படிச்ச விசயம்தான் சொல்லவந்தேன்!

said...

// குசும்பன் said...
//பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு//
பெரியார்மணியம்மை பாலிடெக்னிக் பக்கமா ராசா?//

ம்ஹுக்கும் அங்கதான் பெரிய காம்பவுண்ட் கட்டி வைச்சிருக்காங்களே :( - நானெல்லாம் சிதம்பரம் பக்கம்

said...

// குசும்பன் said...
//இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்!//

எங்க பய மக்காவுக்கு இப்படி எல்லாம் வராது, மச்சி உனக்கு டீயா, எனக்கு கிங்ஸ், உனக்கு வில்ஸ் இப்படிதான் ஓடும்!//

நாங்க காலங்கார்த்தால அய்யப்பன் கடை பொங்கல் திங்க ஓடுவோம்ல :))

said...

//சந்தனமுல்லை said...
// குசும்பன் said...
//பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு//
பெரியார்மணியம்மை பாலிடெக்னிக் பக்கமா ராசா?//
LoL! with M80...thaaney aayils!! :-))//

ம்ஹுக்கும் எம் 80ல அந்த காலேஜ் பக்கம் போனா பஸ்ல போறவங்க கூட எட்டி கூட பாக்கமாட்டாங்க :(

said...

// துபாய் ராஜா said...
ம்ம்ம்.எங்க கொசுவத்தியவும் கொளுத்தி விட்டுட்டிங்க...... :)//

கொளுத்தி வையுங்க வந்து படிப்போம்ல! :)
வெளிநாட்ல இருக்கிறவங்களுக்கு வேற என்ன வேலை!? :)

said...

// ஜே கே | J K said...
/இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்!//
நானெல்லாம் ரம்மி கத்துகிட்டதே இந்த குருப் ஸ்டடிலதான்...//

வாவ்! என்ன ஒரு இன்வால்வ்மெண்டோட படிச்சிருக்கீங்க குட் குட்!! :))

said...

// gils said...
avvvvvvvv...baas...ipovum apdi than baas odtuhu polapu..aapicela ekkuthappa ethachum rekost vantha ithey puli karaikara matter thaan
//

மீ டூ சேம் சேம் பாஸ் :))

said...

//நிஜமா நல்லவன் said...
/கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்!

நீங்க பெரிய அறிவாளி அண்ணே.....சிறுவனாக இருக்கும் போதே பாலிடெக்னிக்ல படிச்சி இருக்கீங்க:)//

பாலிடெக்னிக் படிக்கும்போது சிறுவனா இருந்தேன் அப்படித்தான் வாசிக்கோணும்!

said...

// நிஜமா நல்லவன் said...
/பேச்சிலர் ஆப் இன் ஜினியரிங்க்கு அதுவும் பெருங்கும்பலோட வந்தப்போதுதான் லைட்டா ஒரு பயம் வந்துச்சு ஆஹா மேட்டர் பெயிலாச்சுன்னா கும்பல்ல செப்ரேட் காமிக்கமுடியாதே/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....M80 மேட்டருக்கு இங்க தான் ஸ்டார்ட்டிங் பாயிண்டு இருந்துச்சா:)))//

அது ஸ்டார்ட் பண்ணின இடம் வேறப்பா! எல்லாத்தையும் போட்டு கன்ஃப்யூஸ் பண்ணிக்காதேப்பா!

said...

//நிஜமா நல்லவன் said...
/டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !/
அண்ணே...உங்க பிரண்ட்ஸ் எல்லாம் போன் பண்ணி வேற சொல்லுராய்ங்க....என்னமோ எழுதுறான்.....ஒண்ணுமே புரியலைன்னு:))))//

தம்பி ஒழுங்கா சொல்லுங்க போன் பண்ணி சொல்லுறாங்களா இல்ல நீங்களே ஊர் ஃபுல்லா போன் பண்ணி சொல்லுறீங்களா???

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
pazaiya kaalaththu ninaivellaam meedduddeengga..

konjam irungga.. kannai thodaichikkiren.

hmm.. ninaithale inikkum (ada.. prithiviraj nadicha padam perai sollalaingga.. nejamaalume ninaithale inikkum kaalam athu ). :-)//

பாவம் தங்கச்சி இங்கிட்டு வந்து அழுதுருச்சு போல :( கண்ணை தொடைச்சுக்கோம்மா!

said...

// SanjaiGandhi said...
//டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !//

அவங்களுக்கு மட்டும் தானே அண்ணே? :)//

ஏண்ணே! நீயெல்லாம் படிக்க மாட்டீயாண்ணே எனக்குஅப்புறம் அழுவ வந்துடும் ஆமாம்! :))

said...

// கானா பிரபா said...
இதெல்லாம் இல்லாம எக்ஸாமுக்கு முந்தாகாட்டி ஒரு பத்து நாள் விடுற (எக்ஸாம்க்கு இதுலயாச்சும் படிச்சு பொழைச்சுங்கோங்கடாங்க்ற ரேஞ்சுல)//

ஆமா பாஸ் ஆனா அதையும் வேஸ்ட் பண்ணுறாங்களே என்ன செய்யலாம் :(//

ஆமாம் பாஸ் நானும் கூட 8 நாள் ஊரை சுத்திட்டு கடைசி ரெண்டு நாள்ல ராப்பகல் பாக்காம படிப்பேன் அப்ப ஃப்பீல் பண்ணுவேன் இன்னும் ஒரு பத்து நாள் லீவு கொடுத்திருக்கலாம்ன்னு! :)

said...

// சந்ரு said...
நல்லாத்தான் கலக்குறிங்க..
அசத்தலா இருக்கு.//

நன்றி சந்ரு :)

said...

பாஸ் உங்க பதிவுல கும்மி அடிக்கறதும், அந்த கும்மிக்கு நீங்க ரிப்பீட் கும்மி செய்யறதும் சிம்ப்ளி சூப்பர்ப் பாஸ்.

எனக்கு இந்த டீல் நொம்ப புடிச்சிருக்கு பாஸ்

said...

நானெல்லாம் குரூப்ஸ்டடி கிடையாது. தனியாவர்த்தனம்தான்..