


டிசம்பர் - 18 - கத்தார் நாட்டின் தேசிய நாள் இன்று
பெரும்பாலான நாடுகளின் மக்கள் வந்து வாழ்ந்து செல்லும் இடமாக
அரபு மண்ணின் கலாச்சார பண்பாட்டினை காத்து.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் போட்டி போட்டுக்கொண்டு வளரும்
குட்டி நாடாக
அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி அமைதியாக
பல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்
படு கவனமாய்....!
எதிரெதிர் நாட்டு மக்கள் இங்கு நட்பு பாராட்டுவதும்,
சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சகோதரர்கள் இங்கு சங்கடமின்றி பழக
பரவசமாகிறோம் இந்நாட்டின் வளர்ச்சி கண்டு
பக்கபலமாய் இருக்கிறோம் வளர்ச்சிக்காகவே என்று
எம்மினிய தேசமே உன் எழுச்சியில்  
உண்டு எம் தேசத்தின் வளர்ச்சி...!
உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு 
தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக 
மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த 
இந்நாட்டின் தேசியத்தினத்தில் 
இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!
we are all for QATAR
# ஆயில்யன்
Labels: கத்தார்
Subscribe to:
Post Comments (Atom)

 
12 பேர் கமெண்டிட்டாங்க:
மிக நன்று ஆயில்ஸ்!!
//உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு
தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக
மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த//
மிக ரசித்தேன் இவ்வரிகளை!
//இந்நாட்டின் தேசியத்தினத்தில்
இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!//
நங்களும் வாழ்த்துகிறோம்!!
ஹை என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க அண்ணா.. :)))
நானும் வாழ்த்திக்கிறேன்!!!
சோறு போடும் நாட்டை வாழ்த்தறது கடமையாச்சே. நானும் வாழ்த்திக்கறேன்.
//
அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி அமைதியாக
பல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்
படு கவனமாய்....!//
பாராட்டணும் பாராட்டணும்.
//உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு
தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக
மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த //வர்களுக்கு
நன்றி சொல்லி...
////இந்நாட்டின் தேசியத்தினத்தில்
இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!//
வாழ்த்தி வணங்கும் உங்கள் பண்பினை போற்றுகிறேன் ஆயில்யன்.
எங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க
என்னோடதையும் சேர்த்துக்கோங்க ஆயில்ஸ்
மீ ஆல்சோ வாழ்த்து சொல்லிக்கிறேன்!
உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு
தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக
மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த
இந்நாட்டின் தேசியத்தினத்தில்
இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!//
என் வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
//சின்ன அம்மிணி said...
சோறு போடும் நாட்டை வாழ்த்தறது கடமையாச்சே. நானும் வாழ்த்திக்கறேன்.//
ரிப்பிட்டுடுடுடுடுடு
thank u qatar, long live qatar
எங்களுடைய வாழ்த்துக்களும்.. :)
Post a Comment