வாழ்வை வைத்துக்கொண்டு இத்தனை நாள் என்ன செய்தேன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பெரிய வாய்ப்பை உணராமல் ஏதோ நாட்களை ஓடிக்கொண்டிருப்பது புரிந்தது. உலகம் எனக்கு ஏதும் கடமைப்பட்டில்லை என்ற உணர்வு தோன்றியது. எல்லா காரியங்களையும் நான்,என்ற நோக்கில்தான் செய்தேன் என்பது புரிந்தது.
நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனா அல்லது அவை எனக்கு நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
வாழ்வில் ஒரு அர்த்தத்தை தேடி நான் பாடுபட வேண்டும், உழைக்க வேண்டுமென்ற ஒரு நெறி பிறந்தது. இவ்வுலக வாழ்வின் மேன்மைகள் எனக்கு முன்னைவிட நன்கு புலனாயின. அறிவு தெளிவு பெற்றது. முன்பெல்லாம் என் குழந்தைகள்,என் குடும்பம் என்று கவலைப்படுவேன். இப்பொழுது எதிர்காலத்தை பற்றிக்கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ்கிறேன். நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கின்றேன்.
பிறரிடம் என் அன்பு அதிகமாகிறது.பிறர் தேவைகளை என்னால் ஒரு கணத்தில் ஊகிக்க முடிந்தது. நான் புனிதம் அடைந்துவிட்டதாகவோ அல்லது தெய்வீகம் பெற்று விட்டதாகவோ கூறவில்லை!
என் வாழ்வில்...
புதிய லட்சியம் பிறந்தது;
புதிய நெறி பிறந்தது;
புதிய உறுதி பிறந்தது;
எம்.எஸ்.உதயமூர்த்தி.
21 பேர் கமெண்டிட்டாங்க:
எந்த மரத்தடியில் ஐயா அமர்ந்தீர் ??? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லவும்...
ஆயில்ஸ்... ஆர் யூ ஆல்ரைட் டார்லிங்?
:)
ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு ஊருக்கு வர குஷியில கன்னா பின்னானு என்னவோ ஆகிடுச்சி
ஏதாவது ஆன்மிக மலர் ஆரம்பிக்கும் உத்தேசத்துடன் இந்தியா வருகிறீர்களா?
உதய மூர்த்தியின்
சிந்தனைகளால்
உங்கள் உள்ளத்திலும்
அதே லட்சியம்
அதே நெறி
அதே உறுதி
உதயமாகியிருக்கிறது!
[ஆகியிருக்கிறதுதானே:)?]
அது நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்!
என் வாழ்வில்...
புதிய லட்சியம் பிறந்தது;
புதிய நெறி பிறந்தது;
புதிய உறுதி பிறந்தது;///
புத்தாண்டு உறுதி
பொங்கலில்
சிறக்கட்டும்!
தேவா...
Focus Lanka திரட்டியில் இணைக்க...
http://www.focuslanka.com
ஒகே பாஸ் :(
ஆயில்யன் உங்கள் தமிழ் புதுவருட வழி உறுதியில் உறுதியாய் இருக்க வாழ்த்துக்கள்.
இந்தப் பின்னூட்டத்தை தந்தி போல் பாவித்து பொங்கல் பரிசாக "பட்டாம்பூச்சி" விருதைப்பெற்றுக்கொள்ள நம்மூட்டுத் திண்ணைக்கு வரவும். நன்றி.
எண்ணங்கள் இனியது!!
உழவர் திருநாள் வாழ்த்துகள்!
"பிறரிடம் என் அன்பு அதிகமாகிறது.பிறர் தேவைகளை என்னால் ஒரு கணத்தில் ஊகிக்க முடிந்தது."
அதுதானே மனிதநேயம் எனச் சொல்கிறார்கள்.
உங்கள் தமிழ் புத்தாண்டு உறுதி மொழியை எல்வோரும் கடைப்பிடித்தால் மனித வாழ்வு உன்னதமாகும்.
பொங்கல் வாழ்த்துக்கள் ஆயிலு
நல்ல எண்ணங்கள்...
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு ஒரு விருது என் பதிவில் இருக்கிறது. வந்து பெற்று கொள்ளவும்..
All the best :)))
ஆயில்ஸ் அண்ணாச்சி.,
வந்தவுடனே பயந்து போய்ட்டேன்.
எம்.எஸ் உபயம் என்று பார்த்ததும்தான் தெளிஞ்சது.
சரியண்ணன்...!
இதெல்லாம் நீங்க தான் சொல்லறீங்களோனு ஒரு நிமிஷம் பயந்தேன்..
;)
நல்ல பதிவு.
?..................
எங்க போயிட்டிங்க..?
சும்மா உங்கள் வலைப்பதிவு பக்கம் வந்தேன்
லேட்டஸ்ட் பதிவு படித்தேன்..
ம்ம்ம் ...நல்லா இருப்பதுப்போல்
அடுத்த பதிவு...மீண்டும் ம்ம்ம் =)
மூன்றாம் பதிவு படிக்க படிக்க
என்னையறியாமல் மெய் சிலிர்த்தேன்...
கடைசி வார்த்தைகள் படித்தேன்
"உதய மூர்த்தி" ன....
ம்ம்ம்... என்னை ஏமாத்திடிங்கே ஆயில்வன்
(நான் நெனச்சேன் நீங்கத்தான் எழுதியதுனு...=))
முடிந்தால் வருங்கள் என் பக்கத்திற்கு
http://sempulanneer.blogspot.com/
தோழமை வளர்ப்போம் =)
Post a Comment