மாயாவி

டைரக்டர் பாலா + கலைப்புலி தாணு உதவியுடன் தயாரித்த படம்,இயக்கியது, பாலாவின் உதவி டைரக்டராக பணிபுரிந்த சிங்கம்புலி! (பிதாமகன் ரீமிக்ஸ் சாங்குக்கு ஐடியா கொடுத்ததும் இவர்தானாம்)

Photo Sharing and Video Hosting at Photobucket

சூர்யா ஜோதிகா ஜோடியின் வெற்றிப்படமாக, அமைந்திருக்கவேண்டியது, ஆனால் என்ன காரணமோ – மக்கள்ஸோட டேஸ்ட் அந்த டைம்ல எப்படி இருந்துச்சோ தெரியலை படம் ஃபிளாப் ஆகிப்போச்சு!

பொதுவா பார்த்தா படத்தில கதை லாஜிக்ஸ்ன்னு ஒண்ணும் கிடையாது!

ஆனாலும் பாருங்க, படம் காமெடியாத்தான் போகும்,சூர்யாவோட கேரக்டர் கொஞ்சம் சோகம்,நெறையா காமெடி ஸ்டைல்ல, வித்தியாசமா பண்ணியிருப்பாரு, பிட் டைப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்ல ஆளு அசத்தியிருப்பாரு!

ஜோடியாகத்தான் கடைசியில் இணைவார்கள் என்ற நம்பிக்கையை பொய்க்க செய்யும் கிளைமாக்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகை ஜோதிகாவை மீட்டு தரவேண்டி உண்ணவிரத காட்சியிலும் சரி டான்ஸ் மூவ்மெண்ட்களிலும் சரி சூர்யா அசத்தியிருப்பாரு! அதுவும் அந்த பென்சில் மீசையும் விதவிதமான கலர்களில் டிரெஸும் சூப்பர்!

அதை விட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் இடங்களிலும்,(ஒவர் ஆக்டிங்காக இருந்தாலும் ) அசத்தல்தான்!

சூர்யாவின நண்பராக, வரும் சத்யன் சிம்ரன் ரசிகர் மன்றம் பற்றி ஜோதிகாவிடம் சொல்லி கலாய்ப்பதும், ஜோ ஜோ ஜோதிகா பாடலிலும், நல்லாவே பண்ணியிருப்பாரு! – அனேகமாக அதுதான் ஹீரோ பொசிசன்லேர்ந்து, ஹீரோவுக்கு ப்ரெண்ட் கேரக்டர்களா டவுனான படமென நினைக்கிறேன்!

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் ஜோ அம்மாக்கிட்ட விசாரணை நடத்தும்போதும் சரி,சூர்யாவோட உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் சீனிலும் நன்றாகவே பண்ணியிருப்பாரு!

பாலா தயாரிப்பு படம்னா எதாவது சென் டிமெண்ட் சீன் இருந்தாகுணும்ல அதுக்குத்தான் சிகப்பி கேரக்டர்!

கெஸ்ட் ரோலில் விக்ரம் வருவார் என பிரபலப்படுத்தப்பட்டாலும்,பிதாமகன் சம்பள பிரச்சனையால் அவர் நடிக்கவில்லை!

தெலுங்கு இசையமைப்பாளார் தேவிப்ரசாத்தின் இசையில் பாடல்களும் அதிலும் புஷ்பவனம் குப்பு சாமியின் பாடல் ஆட்டம் போட வைக்கும் வகைதான்!

சிகப்பி பாடும் கடவுள் தந்த அழகிய வாழ்வு உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் வரிகள் – படத்தோடு சேர்ந்து இந்த பாடலும் அந்தளவுக்கு பேசப்படாமல் மறைந்து போனது! நேரம் இருக்கறப்ப நீங்க கேட்டு பாருங்களேன்!

என்னடா ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த படத்த பத்தி இப்ப, அப்படின்னு கேட்கறீங்களா? இப்பத்தாங்க் நெறையா டைம் கிடைக்குது அதுவுமில்லாம, ஆன்லைன்ல போட்டி போட்டுக்கிட்டு படம் கொடுக்கறாங்களே!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்க பாடு பரவாயில்லை, நானும் இப்போத் தான் பார்த்தேன், சொன்னதுக்கு அடிக்கவே வந்துட்டாங்க எல்லாரும்! :P