பிரிவொன்றை சந்தித்தேன்!

வருகிறேன்! என்று சொன்ன அந்த நாளினை - நேரத்தினை - நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!

போகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேளையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புகளை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான்! ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடை பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள்! இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று! எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட!





இருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம்! நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என் நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !

பிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது!

20 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஈத் கொண்டாடியாச்சா குட் குட்!!

said...

பிரிவும் ஒருவகையில் நல்லது தான் ஆயில்யன். நட்பு மேலும் வலுப்பட கண்டிப்பாக உதவும். வாழ்த்துகள்.

said...

பாஸ் நல்லா கொண்டாடியாச்சா ஈத் விடுமுறைய?

அடுத்த விடுமுறைக்கு பயபுள்ளைகள கத்தாருக்கு கூப்பிடுங்க பாஸ் :)

Anonymous said...

//நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!
//

யாருப்பா அது, ஆயிலு கிளம்பறேன்னு சொன்னதை கொண்டாடினது. :)

said...

why pirivu pathi post boss?????

said...

சின்ன அம்மிணி said...
//நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!
//

யாருப்பா அது, ஆயிலு கிளம்பறேன்னு சொன்னதை கொண்டாடினது. :)

//

aahaa haa hoo hoo

said...

நீங்களா இவ்ளோ ஃபீல் செய்யறீங்க பாஸ் !!!!!!!!!!!!!!!!

said...

என்ன பாஸ் என்ன ஆச்சு, அந்த பிகரும் டாட்டா பை பை சொல்லிட்டா?:)))

said...

சோகமெல்லாம் சொல்லும் இடமா இது??? :)))))))))))))

said...

நட்பின் அருமை பிரிவினில் தான் தெரியும் ஆயில்ஸ்

ரொம்ப பீஃல் பன்ணி இருக்கீங்க

ம்ம்ம்ம்ம்

நல்லாருக்கு இடுகை

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்

குசும்பன் கேட்ட கேள்விக்குப் பதில் நேரா அவருக்கு - காபி டு மீ - சரியா

said...

ஆம்.நண்பா..சாலாலா வந்த பிறகும் அதே நினைவுகள் தான் இன்னமும் எனக்கு..

said...

ஆயில்யன்,
நானும்,இப்போது பேரக்குழந்தைகளை
பிரிந்து வந்ததேன்.வந்த பின் அங்கு அவர்களுடன் இன்பமாய் கழித்த பொழுதை நினைத்து மகிழ்ந்து கொண்டு
இருக்கிறேன்.

பிரிவு பாசத்தையும்,நேசத்தையும்
அதிகரிக்கும்.

said...

"நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !" .................கொடுத்து வைத்தவர். என்ஜாய்...........

said...

ஆயில்யன் பிரிவு ஒரு விதத்தில் வலியாய் இருந்தாலும் இன்னும் பாசப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும்.கவலை வேண்டாம்.

said...

என்ன பாஸ் என்ன ஆச்சு, அந்த பிகரும் டாட்டா பை பை சொல்லிட்டா?:))).//

repeatu

said...

;((

said...

Photos super!

said...

/ குசும்பன் said...

என்ன பாஸ் என்ன ஆச்சு, அந்த பிகரும் டாட்டா பை பை சொல்லிட்டா?:)))/

Repeatttttttttttttuuuuuuu....

said...

/சின்ன அம்மிணி said...

//நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!
//

யாருப்பா அது, ஆயிலு கிளம்பறேன்னு சொன்னதை கொண்டாடினது. :)/


Ha...ha...ha...hahahahaha

said...

பதிவு போட்டு பீஃல் பண்ணியிருக்கீங்க... டிபார்ச்சர் நமக்கு என்ன புதுசா? எவ்வளவோ பார்த்துட்டோம்... இதப் பார்க்கமாட்டோமா? பீஃல ஃபிரியா விடுங்கப்பு !!!