சூரியன் எப் எம் 93.5


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! விளம்பர பலகைகளினை மாம்பலம்,கிண்டி & சைதை ரயில்வே ஸ்டேஷன்களில் (எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதான்ப்பா),பார்த்து நம்ம ஊருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய 2005ன் ஆரம்ப நாட்கள்.

வெளிநாடு வந்து சேர்ந்ததும் எல்லாமே மாறிப்போனது! தனிமை + இணையம் & வேலை என்ற ஒரு குறுகிய வட்டமிட்ட வாழ்க்கை வாழத்தொடங்கிய நாட்களில் ப்ளாக்குகள் மட்டுமின்றி இணையதள வானொலிகள்தான் அதிகம் மனதினை மட்டுப்படுத்திய அளவுக்கு வைத்திருக்கசெய்தது!

சில ரேடியோக்களின் ஆர்வம் இன்னும் பல பல தேடுதல்களை தொடங்கிவிட ஒரு டஜன் வானொலிகள் மீடியா ப்ளேயரினை ஆக்ரமித்துக்கொண்டது.

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு ரேடியோ கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்தானே என்று இன்னுமொரு தேடல் அப்படி தேடிக்கிட்டிருக்கும்போது,இன்னொரு பக்கம் வலைப்பதிவுலகில் டெர்ரர் கமெண்ட்களில் வலம் வந்துக்கொண்டிருந்த,ஹப்லாக்.காம் மூலம் சூரியன் எப்.எம் தொடர்பு கிடைக்கப்பெற்றது அன்று முதல் இரவு வேளைகள் “இனிய இரவுகளாகின” யாழ் சுதாகர் மற்றும் அறிவிப்பாளர்களின் குரலோடு,ஆனந்த கீதங்கள் கேட்டுக்கொண்டே தூங்காமல் இருந்த காலகட்டங்கள் !

அதிகம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் சில காலமே என்பதுபோல வந்த சுவடே தெரியாத அளவுக்கு ஹப்லாக்.காம் மறைந்துவிட,அடுத்த தேடலில்,தினகரன்.காம்ன்னு ஒரு பக்கத்தில் இருந்த சூரியன் எப்.எம் லிங்க் கிடைக்கப்பெற்று மீண்டும் இனிய இரவுகள் தொடர்ந்தன.அதுவும் கொஞ்சம் காலம்தான்! என்ன ஆனதோ தெரியவில்லை டக்கென்று ஆஃப் செய்து தூக்கி சென்றுவிட்டார்கள் வானொலி பெட்டியினை!

அவ்வப்போது எங்காவது சூரியன் எப்.எம் லிங்க் ஏதேனும் தென்பட்டால்,ஆசையோடு ஓடோடிச்சென்று,அதன் செயல்படாதன்மை நொந்து மனம் வருந்தி திரும்பிய நாட்கள் நிறைய உண்டு! சமீபத்தில் பாடகி சின்மயி அவர்களின் பதிவிலிருந்து,இன்னுமொரு இணையத்தொடர்பு கிடைத்து ஓடோடி சென்று பார்த்தால் - கேட்டால் - வானொலி இயங்கிக்கொண்டிருந்தது சந்தோஷத்தில் ஒரு பெரிய ஹைய்ய்ய்ய்ய்ய்ய் கூட போட்டாச்சு :-) ஆனா பிறகுதான் தெரியவந்தது,தொடர் சேவையாக அல்லாமல் சில மணி நேரங்களுக்கு இயங்காது என்று அதுவும் குறிப்பாய் இரவு நேரங்களில்....!



பெரும் ஏமாற்றம் நேரும்போதுதான் நிறைய கேள்விகள் எழுகின்றன?
ஏன் முடியாது..?
ஏன் செய்யவில்லை..?
ஏன் செய்துகொண்டிருந்ததை நிப்பாட்டிவிட்டார்கள்..?
நம்மை போல எத்தனை பேர் இப்படி இருப்பவர்கள்..?
வேறு எதுவும் வழி இருக்கிறதா..?
வேறு யாராச்சும் அயலகத்தில் கேட்டு ரசிக்க தொழில்நுட்ப ரீதியாக எதேனும் வழி இருக்கா இப்படி பல பல ”ஏன்”கள்ஆமாம் பொதுவாவே கேட்ப்போம் இது ஒரு ரேடியோ அலைவரிசைதானே முன்பு இணையத்தில் ஒலிபரப்பிக்கொண்டிருந்தவர்கள்தானே பின்பு ஏன் நிப்பாட்டிவிட்டார்கள் ? இணையத்தில் விளம்பரங்களை வைத்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளலாம்தானே? அல்லது இலவசமாகவே வழங்கினாலும் கூட என்ன பெரியதாக இழந்துவிடப்போகிறார்கள் அத்தனை பெரிய சன் நெட் குழுமத்தினர்...?

மனசுல தோணுச்சு ’பிளாக்’கிட்டேன்/பினாத்திட்டேன்! யாராச்சும் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க மேட்டர் நல்லா புரிஞ்சவங்க கொஞ்சம் இது சம்பந்தமா எதாச்சும் செய்யலாம்ல !

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

can get sun dth receiver (Indian Rs.1000) from India and use in Gulf coutries. There u will get suryan FM.
But aaha fm programmes are better than sooryan Fm

said...

நீங்க அங்க பினாத்திக்கிட்டிருக்கீங்க...நாங்க இங்க பினாத்தறோம்..
எந்த லிங்க்குல போனாலும் வேலைக்காவளை.
கெடக்குது கழுதன்னு வுட்டுப்போட்டு இப்பல்லாம் இங்லிபிச் மூசிக்தான்.

said...

பாஸ் hotbird ல சூரியன் எப்.எம்
வருது
ஆபிஸ் ல என்ன செய்யறது கேக்காதிங்க

said...

:)))))

உன்னோட கருத்துக்கு ஒரு பெரிய்ய ஓ போட்டுக்கறேன்!

said...

அல்லது இலவசமாகவே வழங்கினாலும் கூட என்ன பெரியதாக இழந்துவிடப்போகிறார்கள் அத்தனை பெரிய சன் நெட் குழுமத்தினர்...?\\


நெசந்தேன் ...

said...

ippove eppovavathu thaan officela velai seiyarathu..innum neraiya radio chaneels kedachitta.....:-))))

said...

கூடிய விரைவில் ஒரு லிங்க் கிடைக்கட்டும்

said...

isaitamil.. முயற்சித்து பாருங்க அண்ணாச்சி

said...

:-)) //வலைப்பதிவுலகில் டெர்ரர் கமெண்ட்களில் வலம் வந்துக்கொண்டிருந்த,ஹப்லாக்.காம்//

அவ்வ்வ் மறக்க முடியுமா!!

said...

//அமுதா said...

கூடிய விரைவில் ஒரு லிங்க் கிடைக்கட்டும்//

ரிப்பீட்டு! இல்லன்னா நாங்களே, (நானு, அமித்து அம்மா, அமுதா,ஸ்ரீமதி.....) எல்லோரும் போன்ல பாடறோமே..பாஸ்! இந்த ஐடியா எப்படி இருக்கு?! :-)

said...

you can try loka.fm
regards
anita

said...

YOU CAN TRY loka.fm

regards
anita

said...

பாஸ்

ஊரில் ஆயிரம் ரேடியோ இருக்க, இத விட்டுத் தள்ளுங்கப்பா