கருவின் குற்றமா? - சிசுக்கொலை


எவ்வளாவோ முயற்சிகள் மேற்கொண்டும், இன்னும் இந்த கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!

அழகிய பூவினை கொடுக்கும் அந்த செடிக்குள்ளும் ஒரு கொடூர விஷத்தைக்கக்கும் பாலைப்போல, இன்றும், அழகிய பூவினை பெற்றுக்கொடுத்து பின் அந்த பூவினை கொடூர மனத்துடன் விஷம் கொடுத்து கொல்லும் பெண் மனங்களும் உலாவிக்கொண்டிருக்கும் தேசமாகிப்போனது,நம் தேசம் என்பது சோகம்தான்!

கருக்கலைத்தல் மிகச்சிறிய வேலையாம்,ரிஸ்க் ஃப்ரீயாம்!டாக்டர்களுக்கு மிகப்பெரிய லாபமாம்..! என்ன மாதிரியான ஒரு சேவையினை சில டாக்டர்கள் செய்கிறார்கள் பாருங்களேன்..!:(

வருடத்திற்கு சுமாராக 11.2 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கொலைகள் மிகசர்வசாதாரணமாக நடைபெறுகிறதாம் இந்தியாவில்...!

சேலம் மாவட்டத்தில் மிகப்பிரபலமான விஷயமாக, இந்த சிசுக்கொலை விஷயங்கள் இன்னும் இருந்துவருகிறது! இத்தனைக்கும் அரசுத்துறையும்,அங்கு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இது தவிர தனியார் தன்னார்வ நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருந்தாலும்,கூட இந்த சிசுக்கொலைவிஷயத்தில் இருளில் அடைப்பட்டுதான் கிடக்கின்றனர் அனைவரும்!

சில பல இடங்களில் பொது விளம்பரங்களாக தெரியும் 500க்கு சிசுக்கொலை சாத்தியம்! இல்லையேல் கல்யாண செலவில் 50000 சத்தியம்! என்ற பயமுறுத்தல்களும், பொதுச்சேவையாக செய்யப்படும் வழக்கமும் உண்டாம்!

நமது சமூக,பண்பாடு மற்றும் இன்னபிற சமாச்சாரங்களில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பழங்காலத்தில் இருந்திருந்தாலும்,

இன்றைய நடைமுறை விஞ்ஞான வாழ்க்கையில், அஞ்ஞான இருளில் கிடந்து உழலும் பாமர மக்களின் அறிவை வளர்க்க வேண்டிய,

அக இருளை அகற்ற வேண்டிய கடமை அரசுக்கும் & ஊடகங்களுக்கும் தான் உண்டு !
ஆனாலும் அதைப்பற்றிய கவலை இன்றி அவைகளின் காலைகளும் மாலைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன!

காவியத்தில் மாலை சூட வேண்டிய சிசுக்கள்,

கல்லறை மாலை சூடி உறங்கிக்கொண்டிருக்கின்றன :(((((

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:(:(:(:(:(:(:(:(

said...

பெண் சிசுக்கொலைகளுக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே பிரதானமாய் இருக்க முடியும். அது நம் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் வரதட்சணை பேய்தான்.

said...

///அக இருளை அகற்ற வேண்டிய கடமை அரசுக்கும் & ஊடகங்களுக்கும் தான் உண்டு !////



அக இருள் களையப்படவேண்டும். தனி மனிதன் சிந்தித்தால் மட்டுமே இது சாத்தியம். அரசும் ஊடகங்களும் சிந்தனையை தூண்ட மட்டுமே முடியும்.

said...

வரதட்சணையே சிசுக் கொலைக்கு முக்கிய காரணம். அதே போல் கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களும் கண்டிப்பாக கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.... மக்களிடையே விழிப்புணர்வும் முக்கியம்.... நல்ல விஷயம் எழுதியுள்ளீர்கள்.. :)

said...

What a barbaric deed?? They should be treated with Iron Hands.. Otherwise God only save India..

said...

தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். நாஞ்சில் மனோகரன் திமுக விலிருந்து வெளியேரியவுடன் கலைஞர் 'கருவின் குற்றம்' எனும் தலைப்பில் நாஞ்சிலாரைச் சாடியிருந்தார். அது எல்லோராலும் பேசப்பட்டது. அதன் மீள் பதிவுதானே எனப் பார்த்தேன். அது அல்ல.

இது நல்ல பதிவு

said...

//koothanalluran said...

தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். நாஞ்சில் மனோகரன் திமுக விலிருந்து வெளியேரியவுடன் கலைஞர் 'கருவின் குற்றம்' எனும் தலைப்பில் நாஞ்சிலாரைச் சாடியிருந்தார். அது எல்லோராலும் பேசப்பட்டது. அதன் மீள் பதிவுதானே எனப் பார்த்தேன். அது அல்ல.

இது நல்ல பதிவு
///

”கருவின் குற்றம்” என்ற கவிதையை எழுதிய காரணத்தால் தான் நாஞ்சிலார் கழகத்தை விட்டு வெளியேறினார் அல்லது வெளியேற்றப்பட்டார் என்பதுதானே வரலாறு ???

said...

ரொம்ப கொடுமை... :-(((((