Fair & லவ்லி


கருப்பா இருக்கேன்னு என்னிக்கும்மே கவலைப்படாதடா நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும் ஸோ டோண்ட் ஒர்ரி (கவலைப்படாதேவும் டோன் ஒர்ரியும் வந்தாலே அவன் எல்.கே.ஜியில ஆரம்பிச்சிருக்கான் படிப்பைன்னு அர்த்தம் வைச்சுக்கிடணும் - நாங்க ஸ்கூல்ல அப்புடித்தான் வைச்சுப்போம்!)

கான்வர்சேஷனை வைச்சே தீர்மானிச்சுடலாம் செவப்பாகுறதுக்கு எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு - அட்வைஸெல்லாம் கேட்டு (அதுவும் இங்கீலிசுல எல்லாம் பேசுவாங்க எப்புடி இருக்கும் தெரியுமா? - சொன்னா மன்ச்சு வலிக்கும்!)

அப்பவெல்லாம் நொம்ப்ப பேமஸான விளம்பரமா இருந்த ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு - அது பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்!

சரி ஆசை யாரை விடும் ஏழு நாளுதானே வாங்கி டிரைப்பண்ணி பார்க்கலாமேன்னு ஒரு அசட்டு தைரியத்தில வாங்கி வந்தாச்சு பேர் & லவ்லியை! மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!

பவுடர் போடாம வெளியில போனதா சரித்திரமே இல்லாத என்னோட ஆட்டோபயோகிராபி பக்கங்களில் இந்த பேர்&லவ்லி வந்து பிரச்சனையை கிளப்பிடுமோன்னு லைட்டா ஒரு பயம் வந்துச்சு! பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு! ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு! சரி வேற யார்க்கிட்டயாச்சும் அட்வைஸுங்கன்னு கேப்போம்ன்னு இன்னும் ரெண்டு மூணு பேரை புடிச்சா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அட்வைசு சொல்றானுங்க!

கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)

கிரீம் போட்டுட்டு போனா உடனே வியர்க்க ஆரம்பிச்சு பவுடர் எல்லாம் வழிஞ்சு போயிடும் ஸோ நீ கையில எப்பவுமே கொஞ்சம் பவுடர் வைச்சுக்கிட்டு அடிச்சுக்கோடான்னு இன்னொரு ப்ரெண்ட் அட்வைசு!

பேர் & லவ்லியோட சேர்த்து எந்த பவுடர்டா போட்டுக்கிட்ட...?

ம்ம்ம் பாண்ட்ஸ் பவுடரு!

அடேய் படுபாவி அந்த காம்பினேஷன்ல நீ என்னிக்குமே செவப்பாகமுடியாது! பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான்! எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு! 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும்! ஸோ அவன் சொன்னத நம்பித்தான் இப்ப கோகுல் சாண்டல் வாங்க கடைக்கு கிளம்பிக்கிட்டிருக்கேனாக்கும்!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்ஸ் எந்த கிறீம் போட்டாலும் எதுவும் மாறாது. முகத்தில் புன்னகை இருந்தால் போதும் வேறு எந்த கிறீமும் தேவையில்லை.

said...

:-)) பாஸ்....சிவாஜிலே ரஜினிக்கு ஐடியா கொடுத்ததே நீங்கதானா பாஸ்!! :-)

said...

ஆயில்யன் க்ரீம் எல்லாம் ஏமாத்துன்னு தெரிஞ்சும் என்னத்துக்கு இந்த பதிவு.. க்ரீம்களை கிண்டலடிக்கவா? :)

முல்லை பப்புவுக்கு எழுதிய கடிதத்தைப் படிச்சீங்களே ..நினைவுக்கு கொண்டுவாங்க..

said...

//பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்!
//

ஒய் பாஸ்.. அந்தப் பொண்ணுங்க உங்களைப் பாத்து அழகுல மயங்கி விழுந்துடக் கூடாது (பயந்துடக்கூடாது)ன்னு முகத்தை மூடிக்கிட்டிங்களா..

said...

//நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும்//

நல்லதா நாலு பிளேடு வாங்கி முகத்தை கிழிச்சுக்கலாம் பாஸ்.. உடனே சேப்பு சேப்பா பொங்க ஆரம்பிக்கும் ;)

said...

//சொன்னா மன்ச்சு வலிக்கும்!//

யாரு மனசு பாஸ்ஸு!

said...

//ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு //

அழகு ராணிகளுக்காக உருவாக்கப்பட்ட லக்ஸ் சோப் விளம்பரம் பார்த்ததில்லையா பாஸ்!

said...

//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

ஆமாம். உங்க ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவுல க்ரீம் தடவினா உடனே செவப்பாகிடும்.

said...

//( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)//

அதுக்கு முன்னாடி செவுத்தை நல்லா சுரண்டுவாங்களா பாஸ்..

Anonymous said...

//கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் //

இன்னுமா இவிங்களை இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு :)

said...

ச‌ட்டியில‌ இருந்த‌தானே அக‌ப்பையில‌ வ‌ரும்!
ஃப்ரியா வூடு மாமே

said...

பாஸ்! வேற ஏதாவது கிரீம், பவுடர் ரெகமண்ட் பண்ணவா?.. ;-)))

said...

பாஸ் நான் செங்கல் தான் உபயோகிக்கிறேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன் :)

said...

//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

சேம் பின்ஞ்! :( நானும் சின்ன வயசுல இதையெல்லாம் நம்பி ஏமாந்து போனேன் பாஸ். அப்பாலிக்கா இதெல்லாம் வேலைக்காவாதுன்னு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது. இப்பெல்லாம் நோ பவுடர், நோ க்ரீம் :)

said...

நீங்கதான் சென்னை வந்தாக் கூட என்னன்னு கெக்கறது இல்ல.
இல்லாட்ட நானே சொல்லி இருப்பேன்.
மாநிறமா இருக்கறதுதான் ஃபேஷன்னு:)
க்ரீம் எல்லாம் சுத்த ஹம்பக்னு தெரியுமே உங்களுக்கும்!!

said...

அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்ல அண்ணா. என் அம்மா சொவாங்க கருப்பே அழகு காந்தலே ருசின்னு. (ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்)

said...

எப்போ விளம்பர ஏஜென்றி ஆரம்பிச்சீங்க? வித்தியாசமான அப்ரோச்சா இருக்கு.

said...

கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)
:)))))))))))))

சிவப்பாக இம்புட்டு கஷ்டப்படனுமா, கருப்புதான் அழகு ஆயில்ஸ்

said...

பாஸு நீங்களுமா.....

இருந்தாலும் கருப்புதான் அழகு.

said...

என்ன திடீர்ன்னு மடரேசன்?

said...

ரொம்ப சிரிச்சேன்..

said...

பாஸ்....சிவாஜிலே ரஜினிக்கு ஐடியா கொடுத்ததே நீங்கதானா பாஸ்!!//

:)))))))))

said...

ஸ்ரீமதி said...
அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்ல அண்ணா. என் அம்மா சொவாங்க கருப்பே அழகு காந்தலே ருசின்னு. (ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்) //

ஆஹா, தங்கச்சி தெளிவாகிட்டாங்க போல :))))))))))))

said...

ஹய்யோ.. ஹய்யோ.. அண்ணே, உங்க நட்சத்திரப் படி ராத்திரி 12 மணிக்கு க்ரீம் போட்டுக்கிட்டா தான் செவப்பா ஆவிங்களாமாம்..
பகல்ல செவப்பா தெரியனும்னா அதுக்கு சூப்பர் ட்ரீட்மெண்டு இருக்குது. 2 பக்கமும் 2 பேரை நிக்க சொல்லி அவங்க கைல ஆளுக்கொரு செங்கல் குடுத்து ஒரு நாளைக்கு 1 மணி நேரம் சும்மா சரசரன்னு மூஞ்சில தேய்க்க சொல்லுங்க.. அப்பால பாருங்க.. சும்மா ரத்த செவப்பாய்டுவீங்க.
(ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்)

said...

:|
:| :|
:| :| :|
:| :| :| :|
:| :| :| :| :|
:| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :| :| :| :| :|
:| :| :| :| :| :| :| :| :| :| :| :|

எனக்கு பவுடர் போடறதும் க்ரீம் போடறதும் புடிக்காத விஷயம்

said...

anne...neenga ellathilumay "fair" and always "lovely"..oru fair and lovely mela inoru fair and lovely epdinne work aagum!!

said...

அடுத்து என்ன? ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட் தானா?

said...

Fair & லவ்லி - இப்படின்னா தமிழ்ல்ல ஆயில்யன்

இப்படித்தானே நினைச்சிருக்கேன் ;)

said...

நண்பா.கருப்பு கடவுளின் நிறம்.உங்களது நிறம் மும் கடவுளின் நிறம் தான்.

said...

//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

நம்பிக்கையோட பூசுங்க. ஒண்ணும் பிரச்சினையில்ல.

said...

ஆயில்ஸ் தோஹால தானே இருக்கீங்க...!! மே டு ஆகஸ்ட் தினமும் ஒரு 3 மணி நேரம் பகலில் சூரிய ஒளி நேராக படுமாறு இருந்தாலே போதுமே...!!! :) சூப்பரா வெள்ளை ஆயிடலாம்..