மதியம் புதன், ஜனவரி 06, 2010

வெட்கம்!


பார்க்கும் விழிகள் ஏற்படுத்துகின்ற கேலித்தனம் நிறைந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்படுகையில் நமக்கு ஒரே வெக்கம் வெக்கமா வரும்!

வெட்கமும் தயக்கமும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், பிறரிடத்தில் உண்டாகும் பயம் கலந்த மரியாதை அல்லது அந்த ரீதியிலான ஏதோ ஒன்றில் தனித்து நிற்கிறது - தயக்கம்!

சமூகத்தில் பல நிலைகளிலும் காணும் காட்சியாக பெற்றோர்கள் பீற்றிக்கொள்ளும் பிள்ளைகளையும் - ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!

சரி வெட்கம் நல்லதா கெட்டதா என்று எழும் கேள்விக்கு பல சூழல்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது .கே நல்லதுதான் என்றே தோன்றும் சில விசயங்களில் ஆஹா அப்படி ஆகப்பிடாதே ரொம்ப தப்பு என்றும் சொல்லவைக்கும்!

யாரோ வெட்கப்படாமல் செய்த ஆராய்ச்சியில் - படிக்கும் காலத்தில் ரொம்பவே வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பிள்ளைகள் படிப்பில் கெட்டியாக இருக்கிறார்களாம்! மற்றவர்களோடு அதிக நேரம் செலவிட தேவையின்றி படிப்பினில் கவனம் செலுத்துவதினால் இப்படியான திறன் மேம்படுத்தப்படுகின்றதாம்!

சரி
இப்படியே படிச்சு பெரிய லெவல்ல மார்க்கெல்லாம் எடுத்துட்டு வேலைக்குன்னு வர்றப்ப இந்த வெட்க நிலை வேதனையளிக்கும் விசயமாக கூட பணி புரிவர்களிடத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் தொடர்பு நிலையில் உள்ள யாரிடமும் எளிதில் தொடர்பு கொள்ளமுடியாதபடி செய்துவிட அந்த கட்டத்தில் வெட்கம் ரொம்ப தப்பும்மா என்று உணர்வு எழும்புகிறது!

மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்ச காலம் வெட்கம் இருந்துவிட்டு போகட்டும் தொடரவிடவேண்டாம் என்ற சிந்தனையே பெஸ்ட் என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!

சரி சிம்பிளான வழிமுறைகள் கடைப்பிடிச்சு இந்த வெட்கத்தை தொலைச்சு கட்டமுடியுமான்னா - முடியும்! சில சின்ன சின்ன வழிமுறைகளில் அதை ஒரளவுக்கு குறைக்கமுடியும்!

நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?

25 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

//நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?//

என்னா தன்னடக்கம் பாஸ்!!!!

☀நான் ஆதவன்☀ said...

நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)

☀நான் ஆதவன்☀ said...

வெட்கத்தபத்தி வெட்கபடாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு வெளாசியிருக்கீங்க பாஸ்.

வெட்கத்தவிட்டு சொல்றேன் பாஸ்.... பதிவு வெளையாட்டுதனமா இல்லாம ’வெச்’னு ஸாரி ”நச்”னு இருக்கு :)

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை.

//பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!//

மிகச் சரி.

கடைசி வரிகள்.. ரசித்தேன்:)! காத்திருக்கிறோம்.

Thamiz Priyan said...

போங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்கு... ;-)

CS. Mohan Kumar said...

ஆயில்யன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் //

கரெக்ட் பாஸ்

அவசியமான பதிவு ஆயில்ஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யானந்தாவுக்கு வெட்கமா..
ஹ வெட்கம் வெட்கம் .. (வீரவசனமா படிங்க )

:)

கலையரசன் said...

எனக்கும் வெக்கமா இருக்கு.. அப்புறம் வந்து பின்னூட்டம் போடவா??.

pudugaithendral said...

me d first

Annam said...

valimuraigal ennanu sollavey illa bossu ...athukkulla vekkam vanthuduchcho:P

கானா பிரபா said...

போங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்கு

நிஜமா நல்லவன் said...

/ ☀நான் ஆதவன்☀ said...

நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)/



கன்னா பின்னான்னு விழுந்து புரண்டு எந்திரிச்சி ஓடி ரிப்பீட்டு போட்டுக்கிறேன்!

gils said...

reply poda vekkama iruku :D

MSK / Saravana said...

//☀நான் ஆதவன்☀ said...

நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)//

//☀நான் ஆதவன்☀ said...

வெட்கத்தபத்தி வெட்கபடாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு வெளாசியிருக்கீங்க பாஸ்.

வெட்கத்தவிட்டு சொல்றேன் பாஸ்.... பதிவு வெளையாட்டுதனமா இல்லாம ’வெச்’னு ஸாரி ”நச்”னு இருக்கு :)//

//Blogger கலையரசன் said...

எனக்கும் வெக்கமா இருக்கு.. அப்புறம் வந்து பின்னூட்டம் போடவா??.//

Rippeettu.. :))))

Iyappan Krishnan said...

பாஸ்,
நேத்து தானே கேட்டீங்க, வெட்கம் உங்க ஊர்ல கிடைக்குமா? கிலோ எவ்வளவ்வுன்னு... இப்பப் பாத்தா இப்படி ஒரு பதிவா.. கில்லாடி பாஸ் நீங்க

அன்புடன் அருணா said...

/பிறகு வந்து சொல்லவா...?/
சும்மா வெட்கப் படாம சொல்லுங்க!

ஹேமா said...

வெட்கம் பற்றி வெட்கப்படாமல் கலந்து பேசினாலே வாழ்க்கையில் வெட்கப்படவேண்டி வராது.ஆயில்யன் நல்லதொரு பதிவு.

சந்தனமுல்லை said...

/ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!/

பாஸ்..என்னைப்பத்திதானே சொன்னீங்க..என்னைக்கூட அப்படித்தான் பாஸ் சொல்லுவாங்க..(அட நம்புங்க பாஸ்!) ஆச்சி இருக்கற இடமே தெரியாதுன்னு! நீங்களும் அதே க்ரூப்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருக்கு பாஸ்! :-)

வல்லிசிம்ஹன் said...

தேவையானதற்கு வெட்கப்பட்டால் போதும். தப்பு செய்தா வெட்கப் படணும்.
இந்த நாசூக்கு வெட்கம் எல்லாம் பல சினிமாப் பழக்கமா வருகிறதுதான்.

ஆனால் பெற்றோர்களால் அடக்கப் படும் பிள்ளைகளிடத்தில் தயக்கமே வெட்கமாக காண்கிறோம்.
அவள் தலை நிமிர்ந்து யாரையும் பார்க்க மாட்டாள் என்றால் எங்கயாவது குட்டிச்சுவர்தான் வந்து வழி மறிக்கும்.
அவன் வெட்கம் இயல்பானது இல்லை.
எத்தனையோ நினைவுகளைச் சுட்டிவிட்டீர்கள் ஆயில்யன்.
வெகு நல்ல பதிவு.

My days(Gops) said...

//ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?//

நீங்க வாங்க வேணாம்'னு சொல்ல்'ல, ஆனா வெட்கத்தோட வருவீங்களா இல்ல தயக்கம் இல்லாம வருவீங்களா?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

hai nice ....

Unknown said...

போட்டோ நச் நண்பா

பா.ராஜாராம் said...

போட்டோவும், பதிவும் மிக நச்,பாஸ்!

Thenammai Lakshmanan said...

வெட்கம் பத்தி படிச்ச அத்தனை பேருக்கும் எப்பிடி சொல்லி வைச்ச மாதிரி இவ்வளவு வெட்கம் வந்துருக்கு

எனக்கும் கூடத்தான் ஆயில்யன்

:-)