உலா வரும் ஒளிக்கதிர்...!

தூர்தர்ஷனில் சில காலத்திற்கு முன்பு பார்த்த நிகழ்ச்சி உலா வரும் ஒளிக்கதிர் (இப்பவும் வருதா? என்னான்னு அப்டேட் பண்ற அளவுக்கு விசயம் தெரியல..!)

ஒவ்வொரு ஊரிலும் மிகப்பழமையான திருக்கோவில்கள் பற்றியும் சிறப்பு செய்திகளோடு வர்ணனைகளோடு காட்சிகளாய் தருவித்து நிறைய யாராலும் கவனிக்கப்படாத அல்லது பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் பற்றி அறிந்துக்கொள்ள ஏதுவாக அமைந்த நிகழ்ச்சி!

அதுவும் சொந்த ஊரோ அல்லது தெரிந்த அக்கம்பக்கத்து ஊரோ வந்தால் மனம் குஷியாகிவிடும்.

நாம போன தடவை அங்க போனோம்ல்லம்மாவில் தொடங்கி புளிசாதம் தின்று அக்காரவடிசலை வழித்து, கட்டி கை கழுவிய இடம் வரைக்கும் நினைவுகளிலிருந்து கிழற்றி/சுழற்றி/கழற்றி வீசும் சம்பவங்களும் நடக்கும் நேரமும் கூட...!

இதன் தொடர்பில் நினைவுகளை கிளறிவிட்டுக்கொண்டிருக்கிறது சமீபத்திய விடுமுறைப்பயண புகைப்படங்கள் :(

பெங்களூரில் அண்ணன் ஜீவ்ஸ் ஆசியோடு பெற்றுக்கொண்ட கேமராவும் முதல்வாழ்த்தாய் ராமலெஷ்மி அக்காவின்“இனி கலக்குங்க” வை செல்போன் வழியே பெற்று மகிழ்ந்த தருணத்தில் தொடங்கி இப்பொழுது வரை கையில் கேமராவினை வைத்து துழாவிக்கொண்டுதான் இருக்கிறேன்!

ஆனாலும்,ஆசையாய் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை பார்க்க இயலா டெக்னிகல் பிராபளங்களில், சிலவற்றை பார்த்து ’ஆ’வென வாய்பிளந்த தருணங்களும் உண்டு! (சிவிஆர் கையாலயே என் காமிராவில என்னிய போட்டோ புடிச்சு வாங்கிட்டோம்ல! - தாங்க்ஸ் டூ ஜி3)

குறிப்பாய் ஒரு சம்பவத்தை இங்க ஜொள்ளிய ஆகணும்! பிப்ரவரி மாத ஆக்‌ஷன் போட்டியில் முத்தக்காவின் படத்தினை பார்த்து நானும் பருந்தாக முயற்சிக்க நினைத்தப்போது கண்ணில் பட்ட போஸ்டர் “மாயூரம் நாட்டியாஞ்சலி” ரைட்டு ஒரு முடிவோடு கையில் கேமரா பேக் பக்காவாக செட்டிலாக நினைத்து மேடைக்கு லெப்ட் சைடு வாங்கி நின்னுக்கிட்டு பிளாஷ் ஆரம்பித்தேன்! நிறைய படங்கள் சூப்பரூடா எப்படிடா தம்பி நீ இப்படி ஃபீல் பண்ணுற ரேஞ்சுக்கு என்னையே நான் புகழ்ந்துக்கொண்டே படங்களாய் எடுத்து தள்ளினேன்! (ஆனால் அனைத்து போட்டோக்களுமே இப்பொழுது எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்கில் ஆனாலும் திறக்க இயலாத தரித்திர நிலையில்...)

இப்படி ஃபீல் பண்ணிக்கிட்டு போட்டோ புடிச்சிக்கிட்டிருக்கும்போது அங்கே இருந்த போட்டோகிராபர்களில் ஒருவர் அருகில் வந்து என்னாம்மா ஃபீல் பண்றீயேப்பா நீ எந்த ஸ்டுடியோன்னு கேக்க..? அட..! நான் சும்மா ஹாபிக்குத்தாங்க (டேய்.... இதெல்லாம் கொஞ்சம் ஓவருதாண்டா!) என்று கூறும்போதே அந்த லென்ஸினை அப்பொழுதுதான் புதிதாய் பார்த்திருப்பார் போல அருமையா இருக்குப்பா போய் செண்டர்ல முன்னாடி நின்னு எடுப்பான்னு சொன்னப்போது...!

மனதிற்குள் ஜீவ்ஸ் சிரித்தப்படியே...!

நான் வானில் லைட்டா பறந்தேன்!

சரி அதற்கு பிறகு முன்னாடி போய் நின்னு இன்னும் நிறைய போட்டோஸ் எடுத்தீங்களான்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது!

போங்க...! எனக்கு வெக்கம் வெக்கமா வந்துருச்சு!

@@@@@@@@@@@@

இதுதாங்க நான் பிடிச்ச படங்கள் பார்க்க கொஞ்சமாய்....!
















(அடப்பாவி..! கிளிப்பிள்ளைக்கு சொல்லி தர்ற மாதிரி லைட்டிங்க்,அப்ரச்சர்,ஃபோகல் லெங்க்த் எல்லாம் சொல்லிக்கொடுத்தேனே கடைசியில கவுத்துப்புட்டானேன்னு மனம் வெதும்பும் ஜீவ்ஸ் அண்ணாச்சி என்னை மன்னிப்பாரக....!)

படம் பெர்சா தெர்லங்காட்டி...!

ஓட்டு போடுங்க சாமி...!

வருங்காலம் இவர்கள் கையில்தான் இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையோடு....!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு இனித்திட வேண்டி....!

நாடு நலம் பெற;

நல் காட்சி மலர்ந்திட;

புதிய ஹிஸ்டரி எழுதிட...

பழைய ஹிஸ்டரியை அழித்திட..

காவியத்தை மாற்றும் காட்சிகள்

பிடிக்காத மாநிலத்தின் பிடித்த ஃபிகர்களுள்,

புதிய ஃபிகரினை தேர்ந்தெடுப்போம்

தமிழ் திரை மக்கள் கொண்டாட...

மல்லுமக்கள் திண்டாட...

உலகம் ரசிக்கின்ற கூட்டம்!

இது இவர்களின் வெற்றிக்கான கட்டம்





ஓட்டு போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!



(எல்லாருமே செலக்ட் பண்ணுற மாதிரியே தெரியிறாங்கன்னு நீங்க சொன்னீங்கன்னா...? நீங்க கனவு தேசத்துக்கு புச்சுன்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்!)

மார்ச் 2009 - PITக்கு

பிட்டுக்கு கேமரா சுமந்த கதையாகத்தான் மாறி விட்டது கடந்த 20 நாட்களும்.

என்னோட படம் அப்படின்னு சொல்லிக்கிற மாதிரி நிறையா டிரை பண்ணினாலும் தேறியது என்னவோ இந்த ரெண்டும் தான் அதிலயும் ஒண்ணே ஒண்ணு கடைசி கட்டத்தில் பிட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிட்டேன்.( இனிய இணைய நட்புறவுகள், பரிந்துரைத்த போட்டோவை அனுப்பாததற்கு,என்னிய மன்னிக்கணும்!)



இதுதான் மார்ச் பிட்டுக்கு...!


அடி ஆத்தி...! ஏன்லே என்னியவே மொறைச்சு மொறைச்சு பாக்குதீக...!

நல்லா பரீட்சை எழுதுங்க...!


காலையிலேயே எழுந்துவிடுங்கள்!

ரிலாக்சாக இருங்கள்!

உங்களுக்கு மட்டும் தான் பரீட்சை என்பதில் கவனத்தை வைத்துக்கொள்ளுங்கள் - குடும்பமே டென்ஷனாக இருக்க தேவையில்லைத்தானே!

உங்களுக்கு பிடித்த பேனாக்களை உங்கள் வசதிப்படியே வைத்துக்கொள்ளுங்கள்!

சிலரது வீடுகளில் பெற்றோர் புது பேனா வகையறாக்களை வாங்கி ஆசையோடு தருவார்கள் - பெற்றுக்கொள்ளுங்கள்!

ஆன்மீக ஈடுபாடு இருப்பினும் கொஞ்சம் கடவுளையும் கூ(கும்)ப்பிட்டுக்கொள்ளுங்கள்!

தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பே இருக்குமாறு சென்றுவிடுங்கள்!
(அன்றைய நாளில் இந்த மணித்துளிகள் வரையிலும் படிக்க வேண்டிய தேவையே இல்லை- தினமும் சரியாக படித்திருந்தால்!)

தேர்வு அறைக்குள் சென்று அமர்ந்து பின்னர் அக்கம் பக்கம் பார்த்து சிரிப்பதோ அல்லது பாடம் சம்பந்தமாக பேசுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்!

கையில் தேர்வு வினாத்தாள் பெற்றதும் அதை முழுவதும் மிகப்பொறுமையாக ஒரு முறை பாருங்கள்!

பிளான் செய்துகொள்ளுங்கள் எவற்றை முதலில் எழுதவேண்டும் என்று (தேவைப்பட்டால் மொக்கையை கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள்)

ரொம்ப பெரிய கேள்விகளுக்கான பதில்களில் உங்களது விடையின் சாரம்சத்தை முதலில் சிறு முன்னுரையாக்கி பின்னர் தெளிவாக எழுதுங்கள்!

எழுதுங்கள் நல்ல தெளிவான வார்த்தைகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியும் வகையில்!

புலவர்கள் பரம்பரையிலேயே வந்தாலும் கூட நீங்கள் எழுதப்போவது காகிதத்தில்தான் என்பதை உணர்ந்து,பேனாவை எழுத்தாணியாகவோ அல்லது காகிதத்தை ஒலைச்சுவடியாகவே தீர்மானித்து நினைத்துக்கொள்ளாதீர்!

நேரத்தை உத்தேசமாக கணக்கிட்டு ஒவ்வொரு வினாவிற்கும் பிரித்துக்கொண்டு தேர்வு முடிவடைவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே போஸ்ட் புரொடெக்‌ஷனுக்கு தயாராகி விடுங்கள்!

கட்சி கலர்களோ அல்லது கண்ட கண்ட எரிச்சலை வரவழைக்கும் விதத்திலோ போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளாதீர்கள்!

கடைசி நிமிடங்களில் சுருங்க சொல்லி விளக்கும் விதமான விடைகளுக்கேற கேள்விகளை எடுத்துப்போட்டு எழுதுங்கள்!

முடித்துவிட்டு வெளியேறுகையில் தேவையற்ற தேர்வு தாள் விவாதங்களை எழுப்பாமல்,

வீட்டுக்கு நடையை கட்டுங்கள்!

வெற்றி!!!

உங்கள் வாழ்க்கைக்கு வழியை காட்டும்!