அம்மா...!
எதிர்வீட்டு சார் பையன் துபாய்லேர்ந்து வந்திருக்காருல்ல, நான் அவர்கிட்ட ஹீரோ பேனா இருக்கான்னு கேட்கட்டுமாமா?
ஒவ்வொரு முறையும் எதிர் வீட்டு அண்ணன் வரும்போதும் என்னுள்ளோ எழும் கேள்விக்கணைகளை அம்மா எப்படித்தான் மறுப்பாளோ தெரியாது சில பல மணி நேரங்களுக்கு பிறகு எல்லாமே மறந்து போய்விடும்!
அவ்வப்போது புதுதாய் யாராவது பேனா கொண்டுவந்தால் மட்டும் ஒரு ஆசை திரும்ப கிளர்ந்தெழும்!
பின்னாளில் என்னைப்போன்றவர்களுக்காகவே வந்த வரமாய் கடைகளில் பத்து ரூபாய்க்கு ஹீரோ பேனாக்கள் விற்பனைக்கு கிடைக்கதொடங்கின!
எப்படியே காசு கிளப்பிக்கொண்டுப்போய் முதன் முதலாய் வாங்கிய இரு பேனாக்களும் அதை மிக ஆசையுடன் சட்டை பையில் வைத்துச்சென்ற நாள் என்னால் மறக்க முடியாத ஒன்று!
ஒரு பேனாவில் நீல நிற இங்கினையும் மற்றொரு பேனாவில் சிவப்பு நிற இங்கினையும் நிரப்பி சென்ற நான் சிவப்பு பேனாவை வைத்து சயீன்ஸ் வாத்தியார் சொன்ன கேள்வியை எழுதி அடிக்கோடிட்டு அப்படியே எடுத்து பையில் வைத்ததில், வெள்ளை நிற யூனிபார்ம் சட்டை சொன்னது அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக!
கடந்த விடுமுறைக்கும் ஊருக்கு செல்லும் முன்பு ஒரு ஞாபகம் வந்து சென்றது சரி நாமளாவது நிறைய ஹீரோ பேனாக்களை வாங்கிக்கொண்டு
செல்லலாம் என்று,ஆனால் கடைத்தெருவில் சென்றுபார்க்கையில்தான் அதெல்லாம் அந்த காலம் என்று நினைவுக்கு வரும் அளவுக்கு பேனாக்கள் மாறுபட்டு போய்விட்டன.
அப்படியும் சில பல பேனங்கள் எடுத்து சென்றிருந்தேன்!
ஆனாலும் என்னிடம் எதாவது கேட்க நினைத்தவர்களுக்கு ஏனோ இது பற்றிய ஞாபகம் மட்டும் வரவில்லை?
மொபைல் போன் அங்க ரொம்ப வெல குறைச்சலாம்ல....?????
11 பேர் கமெண்டிட்டாங்க:
enakkum ithe maathiri anupavam irukku ;-)
எனக்கு ஹீரோ பேனா கனவு கானல் நீராகவே போயிற்று :(. ஹீரோ பேனா வைத்திருந்தவர்கள் ஒரு கதாநாயக அந்தஸ்துடன் கவனிக்கப் படுவார்கள். ஆனால் கடைசி வர ஹீரோ பேனா கிடைக்கவில்லை. இப்போது பணம் வந்த பிறகு அசை போய் விட்டது.... :)
அப்பாக்கிட்ட ஒரு இந்த பேனா இன்னும் இருக்கு...ஆனா எனக்கும் இந்த பேனாவுக்கும் ராசியே இல்ல...எப்படியும் தொலைஞ்சிடும்.
ஆஹா ஆயில்யன் நீங்களுமா? நானும் இப்படித்தான் ஹீரோ பேனா மேல ரொம்ப ஆர்வம் கொண்டு திரிஞ்சிருக்கேன். விலை குறைந்த பேனா வாங்கி சட்டை எல்லாம் இங்க் கறையோட பள்ளியில் இருந்து வீட்டுக்கு போய் இருக்கேன். அதெப்படி அந்த கடைசி கேள்விய மட்டும் எல்லோரும் கேக்குறாங்க? ரொம்ப டார்ச்சர் பா!!!!
ஆயில் நானும் ஒரு ஹீரோ பேனா வச்சிருந்தேன். எழுதுறப்போ அப்படியே மாவா பொரியும்.. :)))))
அதுக்கு நிப் உடைஞ்சு போனப்போ ரொம்ப பீல் பண்ணினேன். அதுக்கப்புறம் ஒழுங்கான நிப்பே கிடைக்கலை. அப்புறம் கேம்ளின், பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறிட்டேன். :)
தம்பி! எனக்கும் அது போல அனுபவம் இருக்கு. எழுதினா எழுதிகிட்டே போகலாம். ஆனா இப்ப்போ வசதி வாய்ப்புகள் இருக்கும் போது நிறைவேத்திக்க ஆசை இல்லாம போயிடுச்சு...பச்..
ம்ம்.. பழைய கொசுவர்த்திய சுத்த வைக்கறீங்க :))
சேம் ப்ளட்.. ஆனா எனக்கு நிறைய ஹீரோ பேனா கெடைச்சுருக்கு. அத யார்கிட்டயும் ஷேர் பண்ணீக்க மனசு வந்ததில்ல. ஏன்னா எல்லாருமே என்னை விட நல்ல பேனா வச்சுருந்தானுங்க. ளுங்க... :))
"விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்"
இந்த உலகியல்(தத்துவார்த்த)உண்மை
ஹீரோ பேனாவுக்கும் சேர்த்துதானே.
இன்க் உரிஞ்ச அந்த டூபை அழத்தவேண்டும் என்பதால் பிடிச்சது..அப்ப.
//வடுவூர் குமார் said...
இன்க் உரிஞ்ச அந்த டூபை அழத்தவேண்டும் என்பதால் பிடிச்சது..அப்ப//
சரிதான்!
அந்த டூபை அழுத்தி இங்க் உரிஞ்சுவது பின் அந்த டூபின் கவரை கழட்டிவிட்டு இங்க் உறிஞ்சுவது மேலும் இங்க்பில்லரினை கொண்டு இங்க் நிரப்புவது என்று பல காரியங்கள் இருக்கே :))
// சிவப்பு பேனாவை வைத்து சயீன்ஸ் வாத்தியார் சொன்ன கேள்வியை எழுதி அடிக்கோடிட்டு அப்படியே எடுத்து பையில் வைத்ததில், வெள்ளை நிற யூனிபார்ம் சட்டை சொன்னது அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக!//
சட்டையில் இங்க் கொட்டியத,எம்புட்டு ரசனையா சொல்லறிங்க?.. சூப்பர்.
Post a Comment