மதியம் வெள்ளி, ஏப்ரல் 18, 2008

இது ”ரெண்டுக்கு” மேட்டர்

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது போன்ற விஷயங்களில்;

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது போன்ற காட்சிகளை;

நிறைய பேர் அனுபவப்பட்டிருக்கலாம் இது நடைமுறை வாழ்க்கையினை;

ஆனாலும்,

இது தினமும் நடக்கிறது

இதில் தினமும் பயணக்கிறோம்

பலருக்கும் இதை காண்கையில் மனதில் கண்ணீரை இறைக்கிறது!

எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது!

இது கடவுளின் செயலினையொத்த பணி என்று கண்டும் காணாமலும் சென்றுகொண்டு இருக்கிறார்களோ...???

அவர்களும் மனிதர்கள்தான்!

அங்கு இருக்கும் உயர் அதிகாரிகளும் மனித இனம்தானே!

அரசியல்வாதிகளும் வந்துபோகும் இடங்கள்தானே?

ஏன் ஒருவரால் கூட மாற்றங்களை கொண்டுவரக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.....?

7 பேர் கமெண்டிட்டாங்க:

கோபிநாத் said...

;(

Thamiz Priyan said...

ரெண்டு போட்டிக்கு நகைச்சுவை பதிவு போடுவீங்கன்னு பாத்தா ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க... மாற்றங்கள் வரும்... நம்புவோம் :)

வால்பையன் said...

இதற்கென்று இயந்திரங்கள் வந்து விட்டன.
கூடிய விரைவில் நிறைவேறும்

வால்பையன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அரசியல்வாதிகளும் வந்துபோகும் இடங்கள்தானே?

ஏன் ஒருவரால் கூட மாற்றங்களை கொண்டுவரக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.....?//

ஆகா அருமை!

"தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து யார்?"

அன்புடன்,
ஜோதிபாரதி.

சென்ஷி said...

:((

உண்மையிலேயே கொடுமையான விஷயம் இது...

இதைப்பற்றிய ஒரு நச்சு கவிதைகூட படித்தது ஞாபகம் உள்ளது..

எங்களுக்கு வேண்டாம்
இடஒதுக்கீடு
வா
வந்து நீயே பீ அள்ளு..

எழுதியவரின் பெயரை மறந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.

பாலபாரதியின் நண்பர் என்ற ஞாபகம் மட்டும் உள்ளது. :))

PPattian said...

தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையை முன் வைத்திருக்கிறீர்கள்.

பொதுவாக, ரயில் "நிலையத்தில்" நிற்கும்போது, கழிப்பிடத்தை பயன்படுத்தக் கூடாது என்பது விதி, மரபு. அதனால் நம் மக்கள்தான் முதலில் திருந்த வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமீபத்தில் படித்த கதை ஒன்று நியாபகம் வருது .. ( ஆனா பழய கதைதான் ) மூன்று நகர சுத்தியாளர்" அப்பாஸ் கதைகள்..

நகராட்சி வேலைக்கு மேல்சாதி ஆள் வந்தால் கூட சம்பளம்ன்னு தீண்டாமைக்கு ஒரு சட்டம்வந்ததா எழுதப்பட்ட கதை..

மக்கள் இந்த கொடுமையிலுர்ந்து வெளியே வரணும்..வேறு வகை செய்யவேண்டும்.