குடிக்கத்தானே தண்ணி கேட்குறோம்....?

பெரும்பாலான மக்களுக்கு பிரச்சனையின் காரணம் என்ன என்று தெரியாத நிலையில் தமிழ் திரைப்பட உலகமே உண்ணாவிரதத்தில் குதித்ததும் அதில், முன்ணணி நடிகர் நடிகைகள் கலந்துகொண்டதும், ஆவேசப்பட்டதும் என்னமோ பெரிய மேட்டர்தான் என்று முடிவு செய்தார்கள்!

சரி திரையுலகுக்கு ஒரளவுக்கு தெரிய தொடங்கிய இந்த பிரச்சினையின் சாரம் ஏன் பாமர மக்களுக்கு அவ்வளவாக ரீச் ஆகவில்லை ???

தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதி மாவட்டங்களான கிருஷ்ணகிரி தர்மபுரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டது. மக்கள்

தொகை பெருக்கமும் கட்டுப்படுத்தமுடியாத அளவில் எல்லா மாவட்டங்களிலுமே சென்றுகொண்டிருக்கையில் இந்த இரண்டு மாவட்டங்களின் தண்ணீர்

பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி பல ஆய்வுகளை மேற்கொண்டது தமிழக் அரசு!

மேலும் அந்த மாவட்டப்பகுதிகள் குறைவான மழை ஒருபக்கம் என்றால் பூமிக்கடியில் இருக்கும் நீரிலோ அதிக அளவு ஃபுளோரைடின் தாக்கமும் உபயோகிக்க முடியாத அளவு.இரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்த தூரத்திலேயே உள்ள காவிரியின் நீரைக்கொண்டு மக்களின் குடிநீர் கவலையை தீர்க்க முடியும் என்றொரு நம்பிக்கை அரசுக்கு!

ஒரே சமயத்தில் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய இயலும் அதுவுமில்லாமல் அம்மண்ணில் நிலத்தடிநீரில் மறைந்துள்ள புளோரைடின் அளவை குறைக்க இயலும் என்பது அரசின் திட்டம்!

3 நகராட்சிகள்,17 டவுன் பஞ்சாயத்துக்கள், 6755 கிராமங்கள் பயனடையும் வகையிலான இத்திட்டத்திற்கு உதவ ஜப்பான் நாட்டு வங்கியின் உதவியை நாடியது கால நேரம் 2008 இல் ஆரம்பித்து 2013க்குள் முடிவடையும் வகையில் இதறகான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவேண்டி முகமைதாரர்களையும் நியமிக்க திட்டமிட்டது.

இப்போது இந்த திட்டம் பூதாகரமான பிரச்சனையாக்கப்பட்டு, தற்போதைக்கு, அடுத்த புதிய கர்நாடக அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறது!

கொஞ்சமாக பொறுத்து, பிரச்சனை சரியானால் ஒ.கே

இல்லாவிடில் நம் எதிர்கால சந்ததி

இப்படித்தான் இருக்கும்....

கண்ணீருடன் நம் மக்கள் தண்ணீருக்காய்.......
:-(

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இந்த பிரச்சினை பூதாகரமாகும் என்றே தெரிகின்றது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடகாவின் எந்த குடிநீர் ஆதாரத்திற்கும் பங்கம் வராது என்று தெரிந்தாலும் தமிழர்களைத் தாக்கியே அரசியல் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் விடமாட்டார்கள். குறிப்பாக வட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கு இது போல் ஏதாவது விஷயம் கிடைக்காதா என்று அலைகின்றனர். இன்று காங்கிரஸுக்காக தமிழக அரசு திட்டத்தை தள்ளி வைத்துள்ளது. நாளை பா.ஜ.க வுடன் கூட்டு சேர்ந்தால் அதற்காக திட்டம் கை விடப்படலாம். கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி பெறுவது கானல் நீரால் தாகம் தீர்வது போல் தான்.... பொறுத்திருந்து பார்ப்போம்..:(

said...

விசயகாந்த் மாதிரி தகவல்களை திரட்டி அள்ளி விடுறீங்களே...... :)

said...

//விசயகாந்த் மாதிரி தகவல்களை திரட்டி அள்ளி விடுறீங்களே......

//

ஹிஹி கிண்டல் தானே பண்றீங்க!

said...

ஆரம்பத்திலேயே கில்லி எறிய வேண்டிய விஷயம்
விட்டால் கோடலியால் கூட வெட்ட முடியாது
இது ரஜினி நேற்று சொன்ன விஷயம்
ஆனால் கலைஞர் இந்த விசயத்தை கர்நாடக தேர்தல் வரை
தள்ளி வைக்க சொல்கிறார்
ஆக கோடாளியால் கூட வெட்டக்கூடாது என்று முடிவு எடுத்து விட்டார்கள் ???????

said...

// PRINCENRSAMA said...
//விசயகாந்த் மாதிரி தகவல்களை திரட்டி அள்ளி விடுறீங்களே......

//

ஹிஹி கிண்டல் தானே பண்றீங்க!
//

தப்பில்ல :) விசயகாந்துன்னு சொல்றதுல கிண்டலா ஏன் எடுத்துக்கணும்?

said...

இப்போதானே ஆரம்பிச்சி இருக்காங்க. போகப்போக பாருங்க நம்ம அரசியல்வியாதிங்க அடிக்கிற கூத்தை. கானல் நீர் தான் இந்த திட்டம்னு சொல்ல தோனுது ஆனா மனசுக்குள்ள எப்படியாவது நிறைவேறிடாதான்னு ஒரு ஏக்கமும் இருக்கு.

said...

////தமிழ் பிரியன் said...
விசயகாந்த் மாதிரி தகவல்களை திரட்டி அள்ளி விடுறீங்களே...... :)////இதுக்கு ஒரு 1000 ரிப்பீட்டு போட்டுக்கிறேன்

said...

//////ஆயில்யன். said...
தப்பில்ல :) விசயகாந்துன்னு சொல்றதுல கிண்டலா ஏன் எடுத்துக்கணும்?///////


தலைவா எதிர்காலத்துல கட்சி ஆரம்பிக்க போறீங்களா?

said...

கிருஷ்ணா முதன்மை நீதியகத்துக்கு முறையிடுவோம் என்கிறார்.அப்படியே திட்டம் ஆரம்பம் ஆனாலும் அதற்கும் மேலே ஆடுதாண்டிக் கரையில் அடுத்த காய் நகர்த்தல் என பிரச்சினை இன்னும் மேலே போவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.

said...

தமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே!!!
இனி ஒரு விதி செய்வோம்!!! எங்கள் சக்தி என்னவென்பதை இனிவரும் காலம் உலகிற்கு உரைக்கும்.... உணர்வில் உறைக்காத பிணங்களே.... இனி நீங்கள் தமிழன் என்று
சொல்ல வேண்டாம்!!!!