கறுப்பு மண்ணில் (மனதால்) கருகியவர் :(

ஆகஸ்ட் 1999 மண் எண்ணெய்யில் தம் வாழ்வினை மண்ணுக்கு கொடுத்த அந்த பெண் கடைசியாக சொன்ன வார்த்தைகள் மரண வாக்குமூலமாக பதியப்பட்டிருந்தாலும்,கூட இந்தளவுக்கு தண்டனை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் !

”நான் கருப்புங்கறதால எங்க வீட்டுக்காரருக்கு பிடிக்கலை மனசு ஒத்துவரலை தினமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்கு பதில் நான் தற்கொலைக்கு முடிவெடுத்துவிட்டேன்” என்று அந்த பெண் வாக்கு மூலத்தோடு தன் மூச்சை நிப்பாட்டிக்கொண்டாள்!

சரியாக கிட்டதட்ட ஒன்பது வருடங்களுக்கு நேரிடையாகவும்,மறைமுகமாகவும் தற்கொலைக்கு தன் மனைவியை தூண்டி விட்ட காரணத்திற்காய் கணவருக்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை அளித்த மதுரை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பெரும்பாலும் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கூட அவ்வளவாக வெளியே வராது அல்லது வேறு எதாவது காரணங்களில் கரைந்து போய்விடும்!

எப்படியோ! தற்கொலை என்ற அவசர முடிவை அந்த பெண் எடுத்துக்கொண்டாலும் கூட எதிர்கால சமூகத்தில் இது போன்றதொரு சம்பவம் நிகழாமல், நிகழ்ந்தால் தண்டனை கட்டாயம் உண்டு என்ற செய்தியை தந்து சென்றிருக்கிறார்!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கறுப்பு அழகில்லைன்னு நினைக்கிற மனோபாவம்
கறுப்பு பொண்ணு பிடிக்குதா இல்லையான்னு தெரியாம பொண்னையும் பையனையும் கேக்காம முடிவெடுக்கற குடும்பநிலைமை இதெல்லாம் மாறனும் ..அப்பத்தான் இப்படி யாரும் கருகமாட்டாங்க...

Anonymous said...

கருப்பு என்பது அழகில்லை என்று ஒரு தவறான கருத்து பலகாலமாக நம்மிடையே இருந்து வருகிறது. உண்மையில் இப்படி பட்ட சம்பவங்களை படித்துவிட்டு விமர்சிக்கும் பெரும்பாலான மனிதர்கள் தன் சொந்த வாழ்க்கையில் இதற்கான தீர்வை முயற்சித்து பார்ப்பது இல்லை. இந்த பிரச்சனை இருபாலருக்கும் பொதுவானது என்றாலும் ஆண்களை விட பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கபடுகிறர்கள். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், சிவப்பான பெண்கள் உயரே உயரே போவது போன்றும் கறுப்பாக இருப்பவர்கள் அப்படி இருப்பதனாலேயே முன்னேறாமல் போவது போன்றும் ஒரு மாயையை உருவாக்குகின்றது. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னை பற்றி உணரவேண்டும். இந்த உலகில் எந்த ஒரு படைப்புமே அர்த்தமற்றது இல்லை. நாம் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் உண்டு என்று உணரவேண்டும். நம்மை பற்றிய புரிதல் வேண்டும்.

said...

\\கயல்விழி முத்துலெட்சுமி said...
கறுப்பு அழகில்லைன்னு நினைக்கிற மனோபாவம்
கறுப்பு பொண்ணு பிடிக்குதா இல்லையான்னு தெரியாம பொண்னையும் பையனையும் கேக்காம முடிவெடுக்கற குடும்பநிலைமை இதெல்லாம் மாறனும் ..அப்பத்தான் இப்படி யாரும் கருகமாட்டாங்க...\\

ரீப்பிட்டே

said...

////மதுமதி said...

கருப்பு என்பது அழகில்லை என்று ஒரு தவறான கருத்து பலகாலமாக நம்மிடையே இருந்து வருகிறது. உண்மையில் இப்படி பட்ட சம்பவங்களை படித்துவிட்டு விமர்சிக்கும் பெரும்பாலான மனிதர்கள் தன் சொந்த வாழ்க்கையில் இதற்கான தீர்வை முயற்சித்து பார்ப்பது இல்லை. இந்த பிரச்சனை இருபாலருக்கும் பொதுவானது என்றாலும் ஆண்களை விட பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கபடுகிறர்கள். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், சிவப்பான பெண்கள் உயரே உயரே போவது போன்றும் கறுப்பாக இருப்பவர்கள் அப்படி இருப்பதனாலேயே முன்னேறாமல் போவது போன்றும் ஒரு மாயையை உருவாக்குகின்றது. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னை பற்றி உணரவேண்டும். இந்த உலகில் எந்த ஒரு படைப்புமே அர்த்தமற்றது இல்லை. நாம் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் உண்டு என்று உணரவேண்டும். நம்மை பற்றிய புரிதல் வேண்டும். //////
நல்லா சொல்லி இருக்காங்க வழி மொழிகிறேன்....

said...

அகத்தின் அழகே நிஜம். புற அழகுகள் வெறும் மாயை என்பதை எப்போது தான் உணருவார்களோ?

said...

:(

வருத்தமளிக்கும் விசயம்

said...

திருந்துவார்களா?

said...

:(