அறியாமை இருள் அகலட்டும் - ஏப்ரல் 1- ல்

காலம் காலமாக "முட்டாள்கள் தினமாக' கடைப்பிடிக்கப்படும் ஏப்ரல் 1- ம் தேதியை, மருத்துவ அறியாமை இருள் போக்கும் தினமாகக் கொள்ளுங்கள்.

1. தினமும் குளிப்பது, நகங்களை அவ்வப்போது வெட்டி விடுவது உள் ளிட்ட அடிப்படைச் சுகாதார விஷயங்களில் கவனமாக இருங்கள்.

2. காய்ச்சிய தண்ணீரையே எப்போதும் குடியுங்கள். ஈ, கொசு மொய்க்கும் சாலையோர உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

3. வெயிலில் செல்லும்போது குளு குளு கண்ணாடி அணியத் தவறாதீர் கள். கண் புரை ஏற்படாது.

4. பசி இல்லாமல் நண்பர்கள் வற்புறுத்தினாலும் எதுவும் சாப்பிடாதீர்கள்.

5. மருத்துவச் செலவு காரணமாக நீங்கள் கடனாளியாக மாறாமல் இருக்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து மருத்துவ இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி - தினமணி

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மிக்க நன்று. அத்துடன் குடும்பத்தினர் அனைவரும் வருடாந்திர ஹெல்த் ஸ்கீரினிங் செய்து கொள்ளலாம்.

said...

நல்ல விஷயத்தை எடுத்துப் போட்டுருக்கீங்க..