ஹாசிணி - WoRLD oF .:: MyFriend ::.


சந்தோஷ் சுப்ரமணியம் - ரொம்ப நாளைக்கு முன்ன வந்த பொம்மரில்லு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்!

படம் பார்க்கிறவர்களை ஏங்க வைக்கும் குடும்பசூழல் - விக்ரமன் டைப்பு குடும்பம்! - அட நம்ம சடகோபன் ரமேஷ் இதுலதான் அறிமுகமாம்! (இனி இதுபோல கேரக்டர்களிலேயே காணலாம்!)

படத்தோட முக்கியமான கேரக்டர்ஸ் ரெண்டு பேருதான் ஒண்ணு ஹாசிணி என்கிற ஜெனிலா aka ஹரிணி இன்னொன்னு பிரகாஷ் ராஜ்!

ஹரிணி (ஜெனிலா) - ஹாசிணி உலகமே மை ஃப்ரெண்ட்ஸ் நினைக்கிற கேரக்டர் எப்பவுமே துறுதுறுன்னு இருக்கற கேரக்டர் வழக்கம்போல இந்த கேரக்டருக்கும் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம்! கதை சொல்றதுலேர்ந்து பாட்டு சொல்லிதர்றதுவர்ரைக்கும் எல்லாம் ஜாலி அருமையான பின்குரல் தேர்வு :-)

முக்கியமான விஷயம் சொல்லலையே ஹாசிணி காபி குடிக்கிற ஸ்டைலில் அழகிய ஜென் தத்துவத்தை ஞாபகப்படுத்துறாருங்க!

இன்னொருத்தர் பிரகாஷ் ராஜ்.

சின்னதாய் கேட்டால் பெரிதாய் நினைக்கும் தந்தை மகன் உறவிருக்கும் குடும்பங்களுக்கிடையில் சின்னதாய் கேட்டாலும் பெரிதாய் தரும் பெரும் பாசமிகு அப்பாவாய் அழகான நடிப்பில் பிரகாஷ்ராஜ்!

அப்படியே அப்போசிட்ட் சைடுல சந்தோஷாக நம்ம ஜெயம் ரவி வழக்கம்போலவே அவருக்கூட மூணு ப்ரெண்ட்ஸ் உணர்வுகள் + உணவுகளை பகிர்ந்துக்கொள்ள அருமையான நண்பர்கள் :-)

எல்லாம் சந்தோஷங்களும் சந்தோஷிற்கு கைகெட்டிய தூரத்தில் ஆனாலும் மனுசனுக்கு மனதில் இல்லை சந்தோஷம்!

சின்ன சின்ன சீண்டல்களின் கோபமும் அதன் கூடவே வரும் சாந்தமும் அப்படியே கொஞ்சம் தூரம் போய் நின்று கொண்டு கோபம் தவிர்ப்பதுவும் அட இந்த டெக்னிக் நல்லா இருக்கும்போல!

முதன் முதலாய் இருவரும் முட்டிக்கொண்டு சந்திக்கும் கோவிலிலாகட்டும் அல்லது முதன் முதலில் பழக டாப்லெஸ்(!?) பஸ்ஸில் போகும் போது போர்டை தட்ட முயலும் அந்த செய்கைகளிலும் ம்ம்ம் நல்லவே ஃபீல் பண்ணியிருக்காங்க!

கடைசிகட்டங்களில் சில துளி கண்ணீரினை காட்டிச்சென்றாலும் கூட,

சந்தோஷமாக பார்க்கலாம் சந்தோஷை அல்ல - படத்தையும் ஹாசிணியையும் :-)))

27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கடைசி வரைக்கு சித்துவை பத்தி ஒன்னும் சொல்லலையே ஆயில்யா... :-(

said...

விமர்சனம் நல்லாதான் இருக்கு.. ஆனா சந்தோஷ் பொம்மரில்லு அளவுக்கு வராதுங்கிறது என்ன் கருத்து. :-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கடைசி வரைக்கு சித்துவை பத்தி ஒன்னும் சொல்லலையே ஆயில்யா... :-(
//

தமிழ் படத்துல நடிச்ச சந்தோஷ பத்தியே நான் அவ்ளோவா சொல்லலை இதுல சித்து பத்தி நான் ஏன் சொல்லணும் ஃப்ரெண்ட்???????????????///

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
விமர்சனம் நல்லாதான் இருக்கு.. ஆனா சந்தோஷ் பொம்மரில்லு அளவுக்கு வராதுங்கிறது என்ன் கருத்து. :-)
//

:)

said...

'பொம்மரில்லு' இன்னும் பார்க்கவில்லை.அதனால்தானே என்னவோ..இந்தப் படம் நன்றாக இருக்கிறது.

கதை ஜெனிலியாவைச் சுற்றி நகர்கிறது.நடிகை லைலாவுக்குப் பொருத்தமான கேரக்டர்.ஜெனிலியாவுக்கும் பொருந்துகிறது.

அண்ணாவாக சடகோபன் ரமேஷையும்,அக்காவாக கௌசல்யாவையும் வீணடித்திருக்கிறார்கள்.

ஜெனிலியா தன் சம்பளத்தில் பாதியை சவீதாவுக்கு வழங்கவேண்டும்..அவ்வளவு அருமையாக பிண்ணனிக்குரல் நடித்திருக்கிறது.

ரவி இறுதிக் காட்சியிலும்,குடித்துவிட்டு ரகளை பண்ணும் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார்.

said...

//ஜெனிலியா தன் சம்பளத்தில் பாதியை சவீதாவுக்கு வழங்கவேண்டும்..அவ்வளவு அருமையாக பிண்ணனிக்குரல் நடித்திருக்கிறது.
//
கரெக்ட்டு :)

சூப்பர் வாய்ஸ்

said...

ஜெனிலியா அழகே அழகு தான்.. :P

//.:: மை ஃபிரண்ட் ::. said...

கடைசி வரைக்கு சித்துவை பத்தி ஒன்னும் சொல்லலையே ஆயில்யா... :-(//

எதுனா சொல்லி இருந்தா ஆயில்யன் பாயில்யன் ஆயிருப்பார்... :)

... தலைப்ப பாத்ததும்.. நம்ம மைஃப்ரண்ட் கல்யாண மேட்டர் தான் ஆயில்யனுக்கு தெரிஞ்சிடிச்சி போலனு நெனச்சேன்... அதை பத்தி தான் எதோ எழுதி இருக்கார்ன்னு நெனைச்சிட்டேன்..

ஹிஹி.. இன்னும் யாருக்கும் தெரியாது போல.. :P.. நானும் சொல மாட்டேனே..

said...

@SanJai:

// ... தலைப்ப பாத்ததும்.. நம்ம மைஃப்ரண்ட் கல்யாண மேட்டர் தான் ஆயில்யனுக்கு தெரிஞ்சிடிச்சி போலனு நெனச்சேன்... அதை பத்தி தான் எதோ எழுதி இருக்கார்ன்னு நெனைச்சிட்டேன்..

ஹிஹி.. இன்னும் யாருக்கும் தெரியாது போல.. :P.. நானும் சொல மாட்டேனே..//

அடப்பாவீஈஈஈஈஈஈ மக்க்காஆஆஆ.....

said...

அண்ணாத்தே! எங்க 'சுட்டு' பார்க்கனும்னு சொல்லலியே? தொடுப்பு கொடுங்களேன்.... :)

said...

விமர்சனம் நல்லா இருக்கு :)

said...

ஆமா, இந்த படத்துல இருக்க அக்கா தான பாய்ஸ், சச்சின் படத்துல எல்லாம் நடிச்சாங்க.... ஹிஹிஹி நல்லா இருக்காங்க... எல்லா பதிவுலயும் இது மாதிரி ஒரு படம் போடும்படி சங்கம் சார்பா கேட்டுக்கிறோம்...
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றப் புதுக் கிளை
சவுதி அரேபியா

said...

//SanJai said...

ஜெனிலியா அழகே அழகு தான்..

//.:: மை ஃபிரண்ட் ::. said...

கடைசி வரைக்கு சித்துவை பத்தி ஒன்னும் சொல்லலையே ஆயில்யா... :-(//

எதுனா சொல்லி இருந்தா ஆயில்யன் பாயில்யன் ஆயிருப்பார்...

... தலைப்ப பாத்ததும்.. நம்ம மைஃப்ரண்ட் கல்யாண மேட்டர் தான் ஆயில்யனுக்கு தெரிஞ்சிடிச்சி போலனு நெனச்சேன்... அதை பத்தி தான் எதோ எழுதி இருக்கார்ன்னு நெனைச்சிட்டேன்..

ஹிஹி.. இன்னும் யாருக்கும் தெரியாது போல.. .. நானும் சொல மாட்டேனே..
//
அடப்பாவி மக்கா நீ அடிக்கிற மெயில் கும்மிக்கு அறுபதாம் கல்யாணாத்துக்கே இனி யாரும் சொல்லப்போறது கிடையாது இதுல் இந்த நினைப்பு வேறயா??

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
@SanJai:

// ... தலைப்ப பாத்ததும்.. நம்ம மைஃப்ரண்ட் கல்யாண மேட்டர் தான் ஆயில்யனுக்கு தெரிஞ்சிடிச்சி போலனு நெனச்சேன்... அதை பத்தி தான் எதோ எழுதி இருக்கார்ன்னு நெனைச்சிட்டேன்..

ஹிஹி.. இன்னும் யாருக்கும் தெரியாது போல.. :P.. நானும் சொல மாட்டேனே..//

அடப்பாவீஈஈஈஈஈஈ மக்க்காஆஆஆ.....
///

இப்ப அலறி என்ன பிரயோசனம் :))))

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணாத்தே! எங்க 'சுட்டு' பார்க்கனும்னு சொல்லலியே? தொடுப்பு கொடுங்களேன்.... :)
//

நீங்க தமிழ் பிரியனா இல்ல தமிழ் சினிமா பிரியனா இந்தளவுக்கு ஆர்வமா கேட்கறத பார்த்தா என்னைய புடிச்சு உள்ள வைக்காம போக மாட்டீங்க போலருக்கு!

said...

//தமிழ் பிரியன் said...
ஆமா, இந்த படத்துல இருக்க அக்கா தான பாய்ஸ், சச்சின் படத்துல எல்லாம் நடிச்சாங்க.... ஹிஹிஹி நல்லா இருக்காங்க... எல்லா பதிவுலயும் இது மாதிரி ஒரு படம் போடும்படி சங்கம் சார்பா கேட்டுக்கிறோம்...
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றப் புதுக் கிளை
சவுதி அரேபியா
//

மேலிடத்துக்கு சிபாரிசு செய்கிறேன் :)))))))))))))

said...

///ஆயில்யன். said...

//தமிழ் பிரியன் said...
அண்ணாத்தே! எங்க 'சுட்டு' பார்க்கனும்னு சொல்லலியே? தொடுப்பு கொடுங்களேன்.... :)
//

நீங்க தமிழ் பிரியனா இல்ல தமிழ் சினிமா பிரியனா இந்தளவுக்கு ஆர்வமா கேட்கறத பார்த்தா என்னைய புடிச்சு உள்ள வைக்காம போக மாட்டீங்க போலருக்கு! ///
நீங்க அசைவம் வேற சாப்பிட மாட்டீங்க.... தோஹா ஜெயிலில் சைவ சாப்பாடு கிடைக்குமான்னு வேற தெரியலையே?.... :(

said...

//'பொம்மரில்லு' இன்னும் பார்க்கவில்லை.அதனால்தானே என்னவோ..இந்தப் படம் நன்றாக இருக்கிறது.//

repeatஏஏஏஏஏஏஎய் ரிஷாப். படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது, பாடல்களும் கூட. உயிர் பார்த்தவகளுக்கு தில்சே பிடிக்காது(இதுக்கும் டப்பிங்கா இருந்தாலும்). தமிழன் ஆச்சே :)

//கதை ஜெனிலியாவைச் சுற்றி நகர்கிறது.//
ஜெனிலியாவுக்கு இந்தப் படத்துல அறிவாளியா காட்டாட்டியும் ஒரு நல்ல மனுசியா காட்டி இருப்பாங்க. மை பிரண்டு அப்படி இல்லீங்களே.

said...

பொம்ம்மரில்லு பார்த்துட்டேன்! இதையும் பார்க்கின்றேன்..

said...

//ஜெனிலியாவுக்கு இந்தப் படத்துல அறிவாளியா காட்டாட்டியும் ஒரு நல்ல மனுசியா காட்டி இருப்பாங்க. மை பிரண்டு அப்படி இல்லீங்களே.//

மை பிரண்டு,இளா சொல்றது நிஜமாங்க? :)

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//ஜெனிலியாவுக்கு இந்தப் படத்துல அறிவாளியா காட்டாட்டியும் ஒரு நல்ல மனுசியா காட்டி இருப்பாங்க. மை பிரண்டு அப்படி இல்லீங்களே.//

மை பிரண்டு,இளா சொல்றது நிஜமாங்க? :)
//
வேணாம்ங்க அவங்க பாட்டுக்கு பாட்டு போட்டு கேட்டுக்கிட்டுருக்காங்க அவங்கள சீண்டி விடாதீங்க!

(பேரு போட்டது பெரிய சண்டையாக கூடுமோ என்ற பயத்துடன் ஆயில்யன்)

said...

அட போங்கப்பா!

said...

//நிஜமா நல்லவன் said...

அட போங்கப்பா!
//

அதுக்குன்னு இவ்ளோ நொந்துக்ககூடாதுப்பா:)

said...

கவிதை சூப்பர்

said...

அட பதிவுல இருக்கிற ஜெனிலியா போட்டோவதான்பா கவிதைன்னு சொன்னேன்!!

said...

////ஆயில்யன். said...

//நிஜமா நல்லவன் said...

அட போங்கப்பா!
//

அதுக்குன்னு இவ்ளோ நொந்துக்ககூடாதுப்பா///


அப்புறம் என்ன சித்தார்த் பத்தி ஒண்ணுமே சொல்லல. மை பிரண்ட் மனசு கஷ்டப்படுமே அதான் அட போங்கப்பா'ன்னு சொல்லிட்டு போயிட்டேன்

Anonymous said...

சவீதா மட்டும் இல்லின்னா இன்னிக்கு பல கதாநாயகிகள் அம்போதான். சவீதாவே நடிக்கலாம், நல்லாதான் இருப்பாங்க பாக்க

said...

///சின்ன அம்மிணி said...
சவீதா மட்டும் இல்லின்னா இன்னிக்கு பல கதாநாயகிகள் அம்போதான். சவீதாவே நடிக்கலாம், நல்லாதான் இருப்பாங்க பாக்க///



சரியா சொன்னீங்க அம்மிணி ஸாரி சின்ன அம்மிணி:)