மருத்துவமனைகளின் விளம்பர விளையாடல்கள்..!?

தமிழக தலைநகரில் விளம்பர பலகைகள் மற்றும் பண்பலை வானொலிகளில் விளம்பரங்கள் போன்றவற்றால் சாதரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூடியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன(!?) கடந்த வருட இறுதிகளில்...

மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின் பேரில் இது போன்ற விளம்பரங்களை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.. தள்ளுபடிகள் மற்றும் மற்ற மருத்துவமனைகளை ஒப்பிடும் வகையிலான விளம்ப்ரங்கள் கூடாது என்றும் சில கண்டிஷன்களை கூறியிருந்தது.

ஒரு தலைநகர மருத்துவமனையில் ,மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை ஒரு வருட காலத்திற்கு முன்பு ஆரம்பித்தார்களாம்! ஆரம்பித்த காலம் தொட்டு காத்து வாங்கிக்கொண்டிருந்தது கட்-அவுட் விளம்பரம் வைத்ததுமே நல்ல கூட்டமாம்!? நல்ல வருமானமும் உண்டாம்!

இதே வழிமுறைகளை கடைப்பிடித்து விளம்பரபடுத்தினால் மக்களின் வலி குறையும், வழி தெரியும் என்று தனியார் மருத்துவமனைகள் கூறிக்கொண்டிருந்தாலும் இதற்கு பலதரப்பிலிரருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அனைத்து தனியார் மருத்துவனைகளுக்கும் (சென்னையில்தான் விளம்பரங்கள் அதிகமாம்!) எச்சரிக்கை கடிதத்தினை அனுப்பியுள்ளதாம்!

மருத்துவ துறையின் சேவை மனப்பாங்கு இதன் மூலம் மாறக்கூடிய அபாயங்கள் இருப்பதாலும்,மக்களிடத்தில் விழிப்புணர்விற்கு பதிலாக பயத்தினை தூண்டும் வாய்ப்புக்கள் இருப்பதாலும் தனியார் மருத்துவமனைகள் தம் விளம்பரங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இல்லையேல், மருத்துவமனைகளுக்கும் அதில் பணியாற்றும் மருத்துவர்களின் மருத்துவகவுன்சில் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்!

எது எப்படியோ நல்லா இருந்தா சரிதான் - நம்ம மக்கள்!

For example ஒரு வெளம்பரம்

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Me the first?

said...

மருத்துவம் வியாபாரம் நல்லா சூடு பிடிக்கிறப்ப யாருப்பா அது எச்சரிக்கை எல்லாம் கொடுக்கிறது. சின்ன புள்ள தனமா இருக்கே??????

said...

////மருத்துவ துறையின் சேவை மனப்பாங்கு இதன் மூலம் மாறக்கூடிய அபாயங்கள் இருப்பதாலும்,மக்களிடத்தில் விழிப்புணர்விற்கு பதிலாக பயத்தினை தூண்டும் வாய்ப்புக்கள் இருப்பதாலும் தனியார் மருத்துவமனைகள் தம் விளம்பரங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இல்லையேல், மருத்துவமனைகளுக்கும் அதில் பணியாற்றும் மருத்துவர்களின் மருத்துவகவுன்சில் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்!////


சும்மா படம் காட்டுறாங்க.

said...

///மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின் பேரில் இது போன்ற விளம்பரங்களை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது//

பலசமயம் இல்லாத ஊருக்கு கூட வழி காட்டுவாங்க.

said...

நாளுக்கு நாள் உங்க பொறுப்புணர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. விகடன் வரவேற்பறையை அலங்கரிக்கும் திட்டமோ?

said...

சும்மா படம் காட்டுறாங்க. எல்லாமே நாடகம் தான்..
பலசமயம் இல்லாத ஊருக்கு கூட வழி காட்டுவாங்க....

said...

மிக நல்ல பதிவு எச்சரிக்கை உணர்வை
மிக நேர்த்தியான முறையில் விளக்கியுள்ளிர்கள்.
இது விளம்பர விபரீத உலகில் நடைபெறும் மருத்துவமனைகளின் விளம்பர விளையாடல்கள்..!?"-
அரசின் முயற்சி வெற்றி பெற துணை நிற்போம்.

said...

மிக நல்ல பதிவு எச்சரிக்கை உணர்வை
மிக நேர்த்தியான முறையில் விளக்கியுள்ளிர்கள்.
இது விளம்பர விபரீத உலகில் நடைபெறும் மருத்துவமனைகளின் விளம்பர விளையாடல்கள்..!?"-
அரசின் முயற்சி வெற்றி பெற துணை நிற்போம்.

said...

இரண்டு ஆபரசேன் செய்தால் ஒன்று இலவசம். இப்படியும் விளம்பரம் வரலாம்

said...

இரண்டு ஆபரசேன் செய்தால் ஒன்று இலவசம் ! ஆடி தள்ளுபடி 50 சதவீதம்! இப்படியும் விளம்பரம் வரலாம்.